திங்கள், 1 டிசம்பர், 2014

குஷ்புவை விமர்சித்த தமிழிசைக்கு கண்டனம்! அமைச்சர் ஸ்மிருதியை விட குஷ்புவுக்கு அரசியல் தெரியும்

புதுவை மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் அமைத்துள்ளது. அவர்களுக்கு தெரிந்த வரலாறு அரசியல் ஆகியவற்றை விட குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு. முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற இந்த தருணத்தை பார்க்கவேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக மதச்சார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில்கொண்டு கட்சியில் இணைந்துள்ளார்.
அதிகார பதவிக்கான ஆசையால் அல்ல. தமிழிசை சவுந்தராஜன் ஒரு பெண் என்ற அடிப்படையில் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முன்வருகின்ற மற்றொரு பெண்ணை பாராட்டவில்லை என்றாலும் ஆணாதிக்க பொறாமை கொண்ட மனப்பான்மையோடு குறைத்து விமர்சனம் செய்யக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் வீரராகவன் கூறியுள்ளார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக