வெள்ளி, 5 டிசம்பர், 2014

கிரானைட் அதிபர்களிடம் சிக்கியுள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் :சகாயத்திடம் பொதுமக்கள் புகார்

கிரானைட் குவாரிகளால் அழிந்து போன 74 கண்மாய்களை சீரமைப்பதுடன், குவாரி அதிபர்களிடம் உள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை நில உச்சவரம்பு சட்டப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரியான உ.சகாயத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கிரானைட் முறைகேடு குறித்து வியாழக்கிழமை 2-வது நாள் விசாரணையை சகாயம் நடத்தி னார். கிரானைட் மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலூர், கீழையூர் பகுதி களைச் சேர்ந்த 35 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். நிலங்கள் அபகரிப்பு, குறைந்த விலைக்கு வாங்கியது, முழுமையாக பணம் தராதது, ஒப்பந்தத்தை மீறியது, கூடுதல் நிலங்களிலும் கிரானைட் வெட்டி எடுத்தது, பாதை களை மறித்தது என பல்வேறு குற்றங்களில் குவாரி உரிமை யாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலங்களை பறிகொடுத்த அமராவதி (67), சின்னபாண்டியம் மாள் உட்பட சிலர் கண்ணீர்விட்டு அழுதபடி சகாயத்திடம் புகார் அளித்தனர். இவர்களது தகவல்கள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கத் தலைவர் சோமசுந்தரம் சகாயத்தை நேரில் சந்தித்து பல்வேறு தகவல்களைத் தெரி வித்தார். கிரானைட் குவாரி அதிபர் களின் சொத்து பட்டியலையும் அளித்தார். இது குறித்து சோம சுந்தரம் கூறியது: ஒரு கிரானைட் அதிபரிடமே 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக முன்னாள் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணண் நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்தார். இதேபோல் பல குவாரி அதிபர்கள் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளனர். கிரானைட்டால் மேலூர் பகுதியே விவசாயம் உள்ளிட்ட எந்த தொழிலும் செய்ய முடியாத அளவுக்கு சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டது. நில உச்சவரம்பு சட்டப்படி கூடுதல் நிலங்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். 74 கண்மாய்கள் முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பொதுப் பணித்துறையினர் ராயல்டி அடிப் படையில் கிரானைட்டை வெட்டி கடத்துவதில் குவாரி அதிபர் களின் மோசடிக்கு உடந்தையாக உள்ளனர். வெளி நாடுகளுக்கு கிரானைட் ஏற்றுமதி செய்யப் பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். எனது தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.
குவாரி ஏஜென்டுகள் நோட்டம்
கிரானைட் குவாரி உரிமை யாளர்களின் ஏஜென்டுகள் சிலர் மனு அளிக்க வந்தவர்களை வேவு பார்த்ததாக தகவல் பரவியது. இவர்களில் சிலரை படம் பிடித்து சகாயத்திடம் புகார்தாரர்களே காட்டினர்.
இதுகுறித்து ஆட்சியர் இல.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் ஆகியோ ருக்கு சகாயம் போன் மூலம் தகவல் அளித்தார். உடனே 10க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதி முழுவதிலும் கண் காணிப்பில் ஈடுபட்டனர். இதை யடுத்து ஏஜென்டுகள் அந்த இடத்தி லிருந்து வெளியேறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக