புதன், 3 டிசம்பர், 2014

விஜயகாந்த் ஒரு மாதமாக பேப்பர் படிக்கலியாம்! மலேசியாவில ஒரே சூட்டிங்காம்! இனியும் படிக்காதீங்க நாட்டுக்கு ரொம்ப நல்லது .

ஒரு மாத காலமாக செய்தித் தாள்கள் படிக்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் பேட்டி&ஒரு மாத காலமாக செய்தித் தாள்கள் படிக்கவில்லை என, வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், ஒரு மாதத்திற்குப் பின்னர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் சட்டசபை கூடுவது குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அவர், ஒரு மாத காலமாக சென்னையில் இல்லை என்பதால், அரசியல் நிலவரம் தெரியவில்லை. கடந்த ஒரு மாத காலமாக தமிழ் செய்தித் தாள்கள், தமிழ் தொலைக்காட்சிகளையும் பார்க்கவில்லை. அரசியல் நிலவரத்தை தெரிந்துகொண்ட பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் செயல்படும் முறை தீர்மானிக்கப்படும் என்றார்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக