வெள்ளி, 5 டிசம்பர், 2014

பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை முடக்கினேன்!

திருவனந்தபுரம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து, செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம் நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான, உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.துவக்கத்திலிருந்தே. தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும் என, 12 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, பம்பை நதி - அச்சன்கோவில் ஆறு - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு, துவக்கத்தில் இருந்தே, கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  நாமளும்தான்  தம்பிரபரணி - நம்பியாறு திட்டத்தை மூன்று ஆண்டுகளாக குப்பையில் போட்டுவிட்டு 5 tmc தண்ணீரை போன மாதம் வீணாக கடலில் விட்டுவிட்டு, இபபோது பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டோம்.

கேரள சட்டசபையில், முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விட்டுக் கொடுத்தது போல, இந்த விவகாரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. ஏனெனில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், நீண்டகால ஒப்பந்தம், நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, எந்த உடன்பாடும், ஒப்பந்தமும் இல்லை. நதிகளை இணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் திட்டத்தின் படி, இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு துவக்கத்தில் இருந்தே, நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தேசிய நதிகள் வளர்ச்சி அமைப்பின் முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது; இது, கேரளாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருவாங்கூர் பகுதியில் உள்ள, பத்தனம்திட்டா, கோட்டாயம், ஆலப்புழா மாவட்டங்கள் வறண்டு போகும்; 2,000 ஏக்கர் விவசாய நிலம் பாழாகும்; காடுகள் அழிக்கப்படும்; வன வளம் சீரழியும். எனவே, இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.


தண்ணீர் இல்லையாம்:

மேலும், இந்த திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொண்ட வல்லுனர்கள், பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளில், போதுமான தண்ணீர் இல்லை என, அறிக்கை அளித்து உள்ளனர். நதிகள் மற்றும் நீர் வளம், மாநில பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது. எனினும், இந்த விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் இவ்வாறு, அவர் பேசினார்.



திட்டம் இது தான்!

கேரளாவின், பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளின் உபரிநீரை, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பாயும், வைப்பாறு நதியில் இணைத்து, வறண்ட அந்த மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஏராளமான வறண்ட பகுதிகளுக்கு, நீர்பாசன வசதி அளிப்பது மற்றும் 500 மெகாவாட் நீர்மின் திட்டத்தை துவக்குவது என்பது, 12 ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சியில் இருந்த, பா.ஜ., அரசின் திட்டம். இதற்காக, பம்பை - கல்லாறு நதியில், புன்னமேடு என்ற இடத்தில், 160 மீட்டர் உயர காங்கிரீட் அணை கட்டுவது. அது போல, அச்சன்கோவில் - கல்லாறு நதியில், சித்தார்மூழி என்ற இடத்தில், 160 மீட்டர் காங்கிரீட் அணை கட்டுவது. மேலும், அச்சன்கோவில் அருகே, 35 மீட்டர் உயரத்திற்கு, கிராவிட்டி அணை கட்டுவது. புன்னமேடு - சித்தார்மூழி அணைகளை இணைத்து, 5 மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8 கி.மீ., தூரம் தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து கால்வாய் மூலம், 50.68 கி.மீட்டரில், வைப்பாறுக்கு கொண்டு செல்வது. இதற்காக, அந்த பகுதியில் உள்ள, அடவிநயினார் பகுதியில் உள்ள மேக்கரை அணையை, பயன்படுத்திக் கொள்வது என்பது தான் திட்டம்.

பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டம்

* நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, 2002ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, முன்னுரிமை அடிப்படையில், எந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என, இப்போதைய ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையிலான சிறப்பு குழு, பிரதமரிடம் அளித்த அறிக்கையில், இந்த, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம் உள்ளது.

* கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என, 2003ல், பிரதமரிடம், நதிகள் இணைப்பு சிறப்பு குழு, பிரதமரிடம், இரண்டாம் திட்ட அறிக்கை தாக்கல் செய்தது.

* இந்த திட்டத்தின் நிதிக்காக, சில சிறப்பு வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் விதிக்கலாம் என, சுரேஷ் பிரபு ஆலோசனை கூறினார்.

* தேசிய அளவில் நதிகள் இணைப்பிற்காக, 5.6 லட்சம் கோடி செலவில் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பிரிவு, இந்த திட்டம்.

துவக்கத்திலிருந்தே...:

தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும் என, 12 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, பம்பை நதி - அச்சன்கோவில் ஆறு - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு, துவக்கத்தில் இருந்தே, கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கேரள சட்டசபையில், முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விட்டுக் கொடுத்தது போல, இந்த விவகாரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. ஏனெனில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், நீண்டகால ஒப்பந்தம், நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, எந்த உடன்பாடும், ஒப்பந்தமும் இல்லை. நதிகளை இணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் திட்டத்தின் படி, இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு துவக்கத்தில் இருந்தே, நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தேசிய நதிகள் வளர்ச்சி அமைப்பின் முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது; இது, கேரளாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருவாங்கூர் பகுதியில் உள்ள, பத்தனம்திட்டா, கோட்டாயம், ஆலப்புழா மாவட்டங்கள் வறண்டு போகும்; 2,000 ஏக்கர் விவசாய நிலம் பாழாகும்; காடுகள் அழிக்கப்படும்; வன வளம் சீரழியும். எனவே, இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக