செவ்வாய், 2 டிசம்பர், 2014

100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளைச் சேர்க்கவேண்டும்

100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளைச் சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எனப்படுகிற 100 நாள் வேலைத்திட்டத் துக்கான நிதி குறைக்கப் படுகிறது, இந்தத் திட் டத்தை செயல்படுத்தும் பகுதிகள் குறைக்கப்படு கிறது என்ற தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் அதன் ஆற்றலைக் குறைக் கும் மாற்றங்கள் செய்வது கவலைக்குரியது. பெருமள விலான மக்கள் இந்த வேலைவாய்ப்புகளை நம்பியே இருக்கிறார்கள்.

எனது முதன்மையான கவலையே இத்திட்டத் தில் தொழிலாளர்- பொருள் கள் விகிதம் மாற்றப்படு வது தொடர்பானதுதான். உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் இத்திட்டத்துக் காக ஒதுக்கப்படும் நிதி யில் 99 சதவிகிதம் தொழி லாளர்கள் ஊதியமாகவும், ஒரு சதவிகிதம் பொருள் களுக்கான செலவாகவும் (99:1) இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தொழிலாளர்- பொருள்கள் விகிதம் 61:39 ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின்கீழ் நடந்த பணிகளில் 27 சதவிகிதம் சொத்து உருவாக்கும் திட்டங்கள் தான்.
எனவே இந்தத் திட்டத்தால் எது வும் உருவாக்கப்பட வில்லை என்றும் சொல்லி விடமுடியாது. இந்தத் திட்டத்தை இன்னும் செம்மையாக செயல் படுத்த வேண்டுமே தவிர, இந்தத் திட்டத்தை சீர ழிக்கக் கூடாது. தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு களில் வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப் பட்டார்கள்.
விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவ சாயத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட் டிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற திட்டங் களில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது கிராமப்புற மக்களின் வாழ்க்கை நிலையை கருத் தில் கொள்ளவேண்டியது அவசியம்.
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், இத் திட்டத்தின் 60 சதவிகிதப் பணிகள் விவசாயம் சார்ந் ததாக செயல்படுத்தப் படும் என்று வாக்குறுதி அளித்தார். அவரது வாக் குறுதி நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த திட்டத்தில் விவ சாயப் பணிகளையும் இணைப்பது விவசாய வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் நீண்ட கால வழியாக இருக்கும். எனவே நான் 100 நாள் திட்டத்தைக் குறைக்கும், சுருக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று அரசை வலியுறுத்துகி றேன்.
இவ்வாறு கவிஞர் கனி மொழி எம்.பி. பேசினார்.

/viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக