சனி, 6 டிசம்பர், 2014

கண்ணாலே பேசிக்கொள்ளும் சாந்தினி தமிழரசன்.

ஊர்வசி, சுலக்ஷனா வரிசையில் கே.பாக்யராஜ் அறிமுகத்தில் ‘சித்து பிளஸ் 2'வில் நடித்தவர் சாந்தினி. ‘ரவுத்திரம்' படத்தில் நடித்தவர் சைதன்யா கிருஷ்ணா. இவர்கள் இருவரும் நடிக்கும் படம் ‘போர்க்குதிரை'. தெலுங்கில் ‘காளிச்சரண்' என்ற பெயரில் வந்த இப்படம் தமிழில் வெளியாகிறது. இதுபற்றி இயக்குனர் ஸ்ரீ பிரவின் கூறும்போது,‘80களில் நடப்பதுபோல் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ சைதன்யா கிருஷ்ணா. 30 வருடங்களுக்கு முன் ஆணும், பெண்ணும் சகஜமாக பேசும் பழக்கம் கிடையாது. பார்வையால்தான் பேசிக்கொள்வார்கள். அதற்கேற்ப பார்வையில் பேசும் ஹீரோயினை தேடியபோது சாந்தினி பொருத்தமாக இருந்தார். இப்படத்தை எடுத்து முடிக்க ஒன்றரை வருடம் ஆனது. அதுவரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் சைதன்யா, சாந்தினி கால்ஷீட் ஒதுக்கி நடித்துக்கொடுத்தார்கள். அரசியல் பின்னணியிலான இப்படத்தில் கவிதா, நாகி நீடு, பங்கஜ் கேசரி , சஞ்சய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பரத் வி.எம் அண்ட் நந்தன் ராஜ் இசை' என்றார். காஜல் அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்றவர்கள் கோலிவுட்டில் என்டர் ஆனபோது வரவேற்பு பெறவில்லை. ரீ என்ட்ரியில் பிக் அப் ஆகிவிட்டனர். இப்போதுள்ள போட்டியில் கேப் விட்டு ரீ என்ட்ரி ஆகும் சாந்தினி தாக்குபிடிப்பாரா என கோலிவுட் முணுமுணுக்கிறது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக