செவ்வாய், 2 டிசம்பர், 2014

தமிழக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சினிமா நடிகைகள் எல்லாம் கல்கி (அம்மாபகவன் ) ஆசிரமத்தில்!


நகரி - ஆந்திர மாநிலம் சித்தூரில் வரதய்யா பாளையம் பகுதியில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கல்கி பகவானை தரிசித்து செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் கல்கி ஆசிரமத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை வரதீட்சை பூ ஜை நடைபெற்றது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், அனைவரும் நலன் பெறவும் நடைபெற்ற இந்த பூஜையில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஹேமமாலினி, ஷில்பா ஷெட்டியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 3 ப ேரும் கல்கி ஆசிரமத்தில் நடந்த வரதீட்சை பூஜையில் க லந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக