ஞாயிறு, 30 நவம்பர், 2014

தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: விலைகுறைகிறது!

மும்பை,நவ.29 (டி.என்.எஸ்) தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.< கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தங்கம் இறக்குமதி குறைந்ததால், தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. தற்போது புதிய அரசு ஏற்றுள்ள பா.ஜ.க அரசு, தங்கம் ஏற்றுமதியில் சில சலுகைகள் வழங்கியதால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்த நிலையில், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று நீக்கின. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, 80 சதவீத தங்கத்தை வைத்துக்கொண்டு, 20 சதவீத தங்கத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்தன. இதுதொடர்பாக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.


இதற்கு தங்கம் வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அகில இந்திய நகை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஹரீஷ் சோனி கூறியதாவது:

உலக சந்தைகளில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை குறைந்து வருகிறது. அத்துடன், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால், தங்கம் விலை மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக