புதன், 3 டிசம்பர், 2014

வேல்முருகன் போர்வெல்ஸ் படக்கதை லிங்கா படக்கதை போல இருக்கிறதா?


 வேல்முருகன் போர்வெல்ஸ்
வேல்முருகன் போர்வேல்ஸ் படம் லிங்கா படத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறுவது தவறான செய்தி. இதை நம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் வேல்முருகன் போர்வேல்ஸ் பார்க்க சென்றதாக வாய்வழி செய்தி பரவி உள்லது. தயவு செய்து தவறான தகவல்களை பரப்பி என்னையும், என் படக்குழுவினரையும் அவமானப்படுத்த வேண்டாம் இவ்வாறு இயக்குனர் எம்.பி.கோபி அறிக்கை
சென்னை,டிச.02 (டி.என்.எஸ்) காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் படம் 'வேல்முருகன் போர்வெல்ஸ்' கிராமங்களில் போர் போடும் போர்வெல் லாரி உரிமையாளரான கஞ்சா கருப்பு, தான் வெளியூர் செல்வதால், தனது லாரியை தன்னிடம் வேலை செய்யும் நாயகன் மகேஷிடம் ஒப்படைத்துவிட்டு, எங்கெல்லாம் போர் போட வேண்டுமோ, அந்த விபரத்தையுக் கொடுத்து விட்டுச் செல்கிறார். ஆனால், மகேஷோ தான் காதலிக்கும் நாயகி ஆருஷியின் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதை அறிந்து, அந்த ஊருக்கு இலவசமாக போர் போட்டு கொடுப்பதற்காக செல்கிறார்.
அந்த ஊரில் வெற்றிகரமாக போர் போட்டு, தண்ணிரும் வர, அந்த  தண்ணீரை பிடிப்பதற்காக ஊர் பெண்களிடம் ஏற்படும் மோதல் கலவரத்தில் முடிகிறது.

இதனால், அந்த ஊர் பெரியமநிதரான நாயகி ஆருஷியின் அப்பா, போர்வெல் லாரியையும், அதில் பணிபுரியும் மகேஷ் உள்ளிட்டவர்களையும் பிடித்து வைத்து, ஊரில் உள்ளவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு உத்தரவிடுகிறார். மேலும், காதலுக்காக அந்த கிராமத்திற்கு வந்த மகேஷுக்கு, அந்த ஊரில் யாரும் காதலிக்க கூடாது என்றும், காதல் என்றாலே அந்த ஊரில் என்ன என்று தெரியாது என்ற உண்மையும் தெரிய வருகிறது.

இறுதியில், காதலுக்காக வந்த இடத்தில் சிறைபிடிக்கப்பட்ட மகேஷ், தனது போர்வெல் லாரியை மீட்டு, தனது காதலிலும் எப்படி ஜெயிக்கிறார் எனபது தான் வேல்முருகன் போர்வெல் படத்தின் மீதிக்கதை.

தண்ணீர் பற்றக்குறையால நலிந்து வரும் விவசாயத்திற்கு போர்வெல் எவ்வாறு உதவுகிறது என்பதையும், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் காமெடி கலந்து சொல்லியிருகிறார் இயக்குனர் எம்.பி.கோபி.

எதார்த்த நாயகனாக அறியப்பட்ட மகேஷ், இப்படத்தில் ஆக்ஷன் மற்றும் காமெடி என்று அசத்துகிறார்.

நாயகி ஆருஷி, கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

போர்வெல் லாரி உரிமையாளரான கஞ்சா கருப்பும், ரகசியா இணைந்து அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது.  மேலும் பிளாக் பாண்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக உள்ளது.

போர்வெல் என்ற ஒன்றை மையமாக வைத்து, ஒரு கலகலப்பான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எம்.பி.கோபி.  தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்கா இருந்தாலும், அதை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஜெ.சுகுமார் tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக