சனி, 6 டிசம்பர், 2014

பாகிஸ்தான் அரசின் ஐ எஸ் ஐ எஸ் , காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பு அம்பலம்! உணவு பொட்டலங்கள்......

புதுடெல்லி: காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, அதில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் ராணுவ முகாமுக்குள் நேற்று தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர். அங்கிருந்த ராணுவ வீரர்களை சராமரியாக துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த கடும் சண்டையில் 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 6 ஏ.கே&47 ரக துப்பாகிகள், 55 புத்தகங்கள், 2 பைனாக்குலர்கள், 4 ரேடியோக்கள், 32 கையெறி குண்டுகள் மருத்துவ உதவிப்பெட்டி போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் உடமைகளை சோதனை செய்தபோது, சில உணவுப் பொட்டலங்களும் இருந்தன. அந்த பொட்டலங்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு வழங்கப்பட கூடியவை என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவித்து வருவதாகவும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் ஊடுருவல் நடைபெறுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களை தீவிரவாதிகள் வைத்திருந்தது இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக