பைனான்சியர் மற்றும் அவரது ஆட்கள் என்னை எப்படியெல்லாம்
பயன்படுத்தினர் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்.படம் நல்லபடியாக வெளியில்
வர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர்கள்
சொல்படியெல்லாம் கேட்டேன்
சென்னை:கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு படத்தின் கதாநாயகி
புவனேஸ்வரி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா ஷூட்டிங்கில்
இஷ்டத்திற்கு என்னை பயன்படுத்தி விட்டு, போலீசில் சிக்க வைத்து சிறையில்
தள்ளி விட்டனர் என, இளம் நடிகை கண்ணீர் விட்டார்.சென்னை, விருகம்பாக்கம்
வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன், 42. இவர், ரியல்
எஸ்டேட் தொழிலுடன், சினிமா படங்கள் தயாரிக்க பைனான்ஸ் கொடுத்து வந்தார்.