வியாழன், 13 செப்டம்பர், 2012

MGR:திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான்

எம்.ஜி.ஆர். பேட்டிகள்
பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர்.  பேட்டிகள்’’ .
வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும்  இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன்.   வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத்தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல.  திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்திரைப்பட உலகம் பற்றித்தான்  என்று நான்சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?
அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக்கூற முடியும்’’ என்று பதிலளித்துள்ளார்எம்.ஜி.ஆர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக