சனி, 15 செப்டம்பர், 2012

இளம் நடிகை கண்ணீர் வாக்குமூலம்: என்னை பயன்படுத்திய தயாரிப்பு ஆட்கள்

 பைனான்சியர் மற்றும் அவரது ஆட்கள் என்னை எப்படியெல்லாம் பயன்படுத்தினர் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்.படம் நல்லபடியாக வெளியில் வர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர்கள் சொல்படியெல்லாம் கேட்டேன்
சென்னை:கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு படத்தின் கதாநாயகி புவனேஸ்வரி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா ஷூட்டிங்கில் இஷ்டத்திற்கு என்னை பயன்படுத்தி விட்டு, போலீசில் சிக்க வைத்து சிறையில் தள்ளி விட்டனர் என, இளம் நடிகை கண்ணீர் விட்டார்.சென்னை, விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன், 42. இவர், ரியல் எஸ்டேட் தொழிலுடன், சினிமா படங்கள் தயாரிக்க பைனான்ஸ் கொடுத்து வந்தார்.
சாலிகிராமம், அனந்தராமன் தெருவைச் சேர்ந்தவர் சம்பூர்ணம்மாள் என்பவரது மகள் புவனேஸ்வரி, 22. மகளை வைத்து சினிமா படம் தயாரிப்பதற்காக, பைனான்சியர் குருநாதனிடம் சென்றார்.கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு என்ற சினிமா படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அதில் தன் மகளை கதாநாயகியாக நடிக்க வைக்க உள்ளதாகவும் சம்பூர்ணம்மாள் தெரிவித்தார்.

படம் தயாரிக்க கடன் கொடுக்க, பைனான்சியர் குருநாதன் முன்வந்துள்ளார். படத்தின் லாபத்தில், பங்கு தர வேண்டுமென கேட்டுள்ளார்.அதற்கு ஒப்புக் கொண்ட சம்பூர்ணம்மாள், மகளை வைத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், படத்தை தயாரித்தார். 2011ம் ஆண்டு, கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு படத்தை ரிலீஸ் செய்தனர்.படம் தயாரிக்க கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய, 85.50 லட்சத்தை தராமல், நடிகையும், அவர் தாயும் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சில நாட்களுக்கு முன் புகார்
கொடுத்தார்.
புகார் மனு குறித்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா உத்தரவிட்டார். எஸ்.ஐ., நந்தினி தலைமையிலான தனிப்படையினர் நேற்று இளம் நடிகை புவனேஸ்வரியை, 22, கைது செய்தனர்.இளம் நடிகை, புவனேஸ்வரி, போலீசாருக்கு அளித்த வாக்குமூலம்:சிறிய வயதில் இருந்தே, சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு இருந்தது. கலக்குற சந்துரு, சிரிப்புடா ஆகிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
என் அம்மா, கொஞ்சம் :கோபம் கொஞ்சம் சிரிப்பு என்ற படத்தை, ஐந்து லட்சம், 10 லட்சம் என, பல தவணைகளில் பைனான்சியரிடம் கடன் வாங்கி, என்னை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.படத்திற்காக பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது.
அதில், பைனான்சியர் மற்றும் அவரது ஆட்கள் என்னை எப்படியெல்லாம் பயன்படுத்தினர் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்.படம் நல்லபடியாக வெளியில் வர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர்கள் சொல்படியெல்லாம் கேட்டேன்.பைனான்சியர் குருநாதனிடம் கடன் வாங்கியது போன்று,
வேறு சில பைனான்சியர்களிடமும் கடன் பெற்று செலுத்தி வருகிறோம். என் மீது பண மோசடி புகாரைக் கொடுத்து, மனசாட்சி இல்லாமல் என்னை சிறையில் அடைத்து விட்டனர். அவர்கள் இஷ்டத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு ஆவணங்களை தயாரித்துக் கொண்டனர்.இவ்வாறு, இளம் நடிகை கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக