வியாழன், 13 செப்டம்பர், 2012

மக்கள்: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் வன்முறையாளர்களின் மிரட்டலை

கூடங்குளம்: உதயக்குமார் ஆதரவு வன்முறையாளர்களின் மிரட்டலை புறக்கணித்த கூடங்குளம் மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
உதயக்குமாரின் ஆதரவாளர்கள், கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அதனால், கூடங்குளத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அனைவரும் வீட்டில் முடங்கினர். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கிய போதும், வன்முறையாளர்களின் மிரட்டலால், பயன்பாட்டை மக்கள் தவிர்த்தனர். கட்டாயப்படுத்தி வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட சிலர், கைதாகினர்.
உதயக்குமார் ஆதரவாளர்களின் மிரட்டலால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து விடுபட முடிவு செய்த கூடங்குளம் மக்கள், நேற்று இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கினர். ரேஷன் பொருட்களை வரிசையில் நின்று ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இணைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால், நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. வன்முறையின் போது, குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதில் வெளியேறிய குடிநீரை பிடிக்க, பெண்கள் திரண்டனர். இதனால், கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடியிருந்த கூடங்குளம், நேற்று, சகஜ நிலைக்கு திரும்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக