வெள்ளி, 14 செப்டம்பர், 2012

எல்லா இடங்களிலும் கேமரா பள்ளி கழிவறை உள்பட

இங்கிலாந்தில் பள்ளிகளில் மோதல் மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருவதால், மாணவர்களை கண்காணிக்க கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், அகடமிகளில் மாணவர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் திருட்டு போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க பள்ளி முழுவதும் ரகசிய கேமராக்கள் வைத்து மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், உடை மாற்றும் அறைகள், லாக்கர் இருக்கும் இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதைவிட கழிவறைகளில் கூட கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 24 கேமராக்களும், அகடமிகளில் 30 கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு ஒரு கேமரா வைக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடை மாற்றும் அறைகள், கழிவறைகளில் கேமரா வைத்துள்ளன. இதற்கு Ôபிக் பிரதர் வாட்ச்Õ என்ற சமூக அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் இயக்குனர் நிக் பிக்கல்ஸ் கூறியதாவது: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்த போது, ஒரு லட்சத்து 6,710 கேமராக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை லண்டன் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவித ஆய்வும் நடத்தாமல் இவ்வளவு கேமராக்களை பள்ளிகளில் வைத்தது எப்படி? கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை என்ன செய்கிறார்கள்? கேமராக்களை யார் கண்காணிப்பது? கேமராக்களை வைத்து கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பள்ளிகள் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு நிக் பிக்கல்ஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக