புதன், 12 செப்டம்பர், 2012

சி.பி.ஐ. சாட்சி மீது ஆ.ராசா குற்றச்சாட்டு

 டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா சாட்சியம் அளித்திருந்தார். அவரிடம் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா சார்பில் அவருடைய வக்கீல் சுஷில் குமார் நேற்று குறுக்கு விசாரணை செய்தார். இன்றும் குறுக்கு விசாரணை தொடர்ந்தது. அப்போது ஸ்ரீவஸ்தவாவை பார்த்து, ஆ.ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியா, யுனிடெக் குரூப்பின் ஸ்பெக்ட்ரம் லைசென்சு விண்ணப்பம் வந்துள்ளதா?என்று கேட்டதாக கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி இந்த கோர்ட்டில் கூறி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தகவலை நீங்கள் சி.பி.ஐ.யிடம் அளித்த வாக்குமூலத்தில் ஏன் கூறவில்லை? என்று வக்கீல் சுஷில்குமார் கேட்டார்.மேலும், சி.பி.ஐ. யின் நிர்ப்பந்தத்தால் ஸ்ரீவஸ்தவா பொய் சாட்சி அளிப்பதாகவும் சுஷில் குமார் குற்றம் சாட்டினார். அதை ஸ்ரீவஸ்தவா மறுத்தார்.


சந்தோலியா தன்னிடம் கேட்டது பற்றி சி.பி.ஐ.யிடம் விளக்கம் அளித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். பொய் சாட்சி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக