சனி, 15 செப்டம்பர், 2012

மத்திய கிழக்கு முழுவதிலும், அமெரிக்க எதிர்ப்பு! எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்!!

Viruvirupu
எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்!
அமெரிக்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மத்திய கிழக்கின் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஏமன் நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.
இப்போது, டுனிசியா, எகிப்து, சூடான் என பரவிக் கொண்டே போகிறது.
இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்க திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இப்போது, முற்று முழுதான அமெரிக் எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. மத்திய கிழக்கிலும், வேறு இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் எந்த நேரத்திலும் அடித்து நொறுக்கப்படலாம்.

அநேக இஸ்லாமிய நாடுகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துக்கொண்டு வந்தவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையுடன் வந்தார்கள் என்றே தகவல்கள் உள்ளன.
இதில் சிலர்தான், அமெரிக்க தூதரகங்களை முற்றுகையிட்ட போதிலும், போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களில் பலரும், அமெரிக்கா மீது உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாகவே மத்திய கிழக்கில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காட்சிகள் எந்த நிமிடமும் மாறத் தக்கவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக