வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு : மனுவை திருப்பி அனுப்பியது கோர்ட்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஆங்கில நாளிதழ் மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அவர் சார்பில் தாக்கல் செய்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.  தமிழக அரசு டிரைவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது கொலை செய்வதற்காகத்தான் என்றும் ஒரு சிலரின் லைசென்ஸ்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் 25ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தி தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளிவந்த கட்டுரையை படித்துப் பார்க்கும்போது முதல்வருக்கு எதிராக கட்டுரையில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கருத முடியாது. இந்த மனு திருப்பி அனுப்பப்படுகிறது. எந்த வகையில் விசாரணைக்கு உகந்தது என்று 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக