வியாழன், 13 செப்டம்பர், 2012

69 சதவிகிதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திராவிடர் கழகம் தன்னை இணைத்துக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

 69 சதவிகித இட ஒதுக் கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப் பட்ட வழக்கில், திரா விடர் கழகம் தன்னையும் இணைத்துக் கொண்டு, தம் கருத்தைத் தெரிவிக் கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நேற்று முன்தினம் ஒரு செய்தி: தமிழ்நாட் டில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக செய லில் இருக்கக் கூடிய 69 சதவிகித இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்கள், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தரப் படக் கூடிய அந்த சிறப் பான இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியினால் நடைமுறைப்படுத்தப் பட்டது என்பது உங் களுக்கெல்லாம் தெரிந் ததே! 31(சி) சட்டத்தின் கீழ்!

இதுவரையில் அச் சட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 68 சதவிகிதமாக பல ஆண்டு இருந்தது. பிறகு 69 சதவிகிதமாக ஆகி, அது தொடர்ந்து நடை முறையில் இருந்து வரு கிறது.
இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிசன் வழக்கு உச்சநீதி மன்றத்தில் வந்தபோது, 50 சதவிகிதத்திற்குமேலே இருக்கக் கூடாது என்று சொன்னபோது, எங்கே 69 சதவிகிதமாக இருக் கக் கூடிய இந்த இட ஒதுக்கீடு பாதிக்கப் படுமோ என்று அஞ்சிய நேரத்தில்,
ஆணையல்ல - சட்டம்!
அரசு ஆணையாக, கம்யூனல் ஜி.ஓ. என்ப தற்குப் பதிலாக ஒரு தனிச் சட்டமாகக் கொண்டு வந்து, அதை 9 ஆவது அட்டவணைப் பிரிவிலே 31-சி பிரிவின் கீழ் வைத்தால், இட ஒதுக்கீடு பாதுகாக் கப்படும் என்றும்,
மண்டல் கமிசன் வழக்கில், 1992 ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு  அளித்த தீர்ப்பு வந்த போது, அதிலிருந்து எப்படி வெளியே வருவது, எப்படி இட ஒதுக்கீடினை பாது காப்பது என்று கருதிய நேரத்தில்,
சட்டமாக இருந் தால், Retraspective effect என்று பின்னோக்கிக் கொடுக்கலாம் என்பதை விளக்கிச் சொல்லி, அதற்காக ஒரு அனைத் துக் கட்சிக் கூட்டத்தை (இன்றைய முதல்வராக இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் அன்றைக்கும் முத லமைச்சர்), அந்தக் கருத் தினை ஏற்று அவர்கள் அனைத்துக் கட்சியைக் கூட்டி, பிறகு ஒரே நாளில் சட்டமன்றம் கூட்டப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டு, பிறகு மத்திய அரசின் ஒப்புத லுக்காக அப்போது அனுப்பப்பட்டது.
அப்போது நரசிம்ம ராவ் அவர்கள் பிரதம ராக இருந்தார். நாங்கள் எல்லோரும் ஒரு தூதுக் குழுவாகச் சென்று அவரைச் சந்தித்தோம்.
சந்தித்த பிறகு, அண் மைக் காலத்தில் நடை பெறாமல் இருந்தது போல், அப்போதும் அர்ஷத் மேத்தா பிரச் சினையில் நாடாளுமன் றம் செயல்பட முடியா மல் இருந்தது.
நீங்கள் இட ஒதுக் கீடுப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்திற்கு வாக்களிக்க வாருங்கள் என்று எல்லோரையும் நாங்கள் கேட்டுக் கொண் டதற்கிணங்க, அனைத் துக் கட்சியினரும் எங் களுக்கு ஒத்துழைத்தார் கள்.
அதன்பிறகு, சீதாராம் கேசரி அவர்கள் சமூக நல அமைச்சராகவும், பிரதமராக நரசிம்மராவ் அவர்கள் இருந்து அச் சட்டத்திருத்தம் நிறை வேறியது.
76 ஆவது சட்டத் திருத்தம்
அந்தச் சட்டத் திருத் தம் 76 ஆவது சட்டத் திருத்தம் நிறைவேறியது.
சங்கர்தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக அப்போது இருந்தார்கள். அவர் களும் ஒப்புதல் (Asscent) அளித்து, பிறகு சட்ட மாக வந்தது.
94 ஆம் ஆண்டிலி ருந்து இதுவரையில் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதற்கு முன்னர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் 68 சதவிகித மாக இருந்தது. பிறகு 69 சதவிகிதமாக ஆகியது.
எனவே, இதனை எதிர்த்து வழக்குப் போட்டார்கள் ஒரு தனியார் அமைப்பினர். அந்த வழக்கில் தடை கொடுக்கப்படவில்லை.
இதற்கு முந்தைய தி.மு.க. அரசு இருந்த போது அந்த வழக்கு மறுபடியும் வந்த பிறகு, அண்மையில் ஓய்வு பெறவிருக்கின்ற தலைமை நீதிபதி கபா டியா அவர்கள் தெளி வாக, இன்னும் ஓராண் டுக்குள்ளாக இதைத் தெளிவுபடுத்தி, எந்த அளவிற்கு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30 சத விகிதம், மிகவும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம், இரு பிரி வினருக்கும் சேர்த்து 50 சதவிகிதம் கொடுப்பது நியாயம்தான் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய அளவிற்கு, நீங்கள் புள்ளி விவரங்கள் (Quantifiable Data) கொடுக்கவேண்டும் என்று அவர்கள் சொன் னார்கள். அதற்காக ஓராண்டு அவகாசமும் அளித்தார்கள்.
ஓராண்டிற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் மூலமாக இதனை தெளிவுபடுத்தி அறிக்கை தரவேண்டும் என்று கபாடியா அவர்கள் கூறினார்.
கொடுத்த அவகாசம் முடிந்து, மீண்டும் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் அரசியலில் ஏற்பட்டது.
ஆட்சி மாறலாம்!
கட்சிகள் மாறினாலும், இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் ஒருவருக்கொருவர் அதிகப்படுத்தி இருக்கிறார்களே தவிர, அதிலே யாரும் மாற்றுக் கருத்துடையவர்கள் அல்ல, ஏனென்றால், இது பெரியார் மண்!
No.50 என்று சொல்லக்கூடிய Backward Classes, Most Backward Classes and Minority Welfare Department சார்பாக, 11.7.2011 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையம், நீதிபதி ஜனார்த்தனம் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்து, ஒரு தெளிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அந்தத் தெளிவான அறிக்கைப்படி அதை அமைச்சரவையிலே, இன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அதை விவாதத்திற்கு எடுத்து, விரிவாக விவாதித்து பிறகு, நியாயமாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஆகவே, மீண்டும் இதை உறுதிப்படுத்தி, ஜி.ஓ. 50 சதவிகிதம் என்று சொல்லக்கூடிய அளவிலே புதிதாக அரசு ஆணை 50 என்பதன்மூலமாக இந்த ஜி.ஓ. நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆணை போட்டே ஓராண்டு (11.7.2011)  ஆகிவிட்டது. இதனை நாங்கள் வரவேற்று பாராட்டினோம். இதிலே கட்சிக் கண்ணோட்டமோ மற்றவையோ கிடையாது. சமூகநீதிக் கண்ணோட்டம்தான் மிக முக்கியமானது.
மறு ஆய்வு மனு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியாவின் தீர்ப்பை எதிர்த்து, வாய்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த விஜயன் என்ற வழக்கறிஞர் அத்தீர்ப்பினை மறு ஆய்வு (review) செய்யவேண்டும் என்று   மனு கொடுத்தார். இவ்வழக்கில் மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது திடீரென்று, மீண்டும் அதே அமைப்பு, அதே நபர் புதிதாக சிலரைப் பிடித்துக் கொண்டு புதிதாக மறுபடியும் வழக்கு போட்டிருக்கிறார்கள்; அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றால், இது ஒரு அழிவழக்கு.  ஒரு விஷத்திற்காக இரண்டு முறை வழக்குப் போட சட்டத்தில் இடமில்லை.
காரணம் என்னவென்றால், ஜி.ஓ. தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிரிமீலேயர் என்பது ஆராயப்படவில்லை என்பதற்கு பதில் சொல்லி 20.7.2011 ஆம் தேதியன்று ஜி.ஓ. கொடுத்திருக்கிறார்கள்.
எனவே, இந்த வழக்கு தேவையற்ற, விளம்பரத்திற்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ தலைமை நீதிபதி மாறினால் நீதி மாறிவிடுமா? இன்னொரு வழக்கினை இப்போது போட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை இரண்டு நாள்களுக்கு முன்னாலே ஊடகங்களின் வாயிலாகத்தான் நாங்கள் அறிந்தோம்.
திராவிடர் கழகம்தான் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மூலகாரணமாக இருந்தது என்பது உலகம் அறிந்த ஒன்று.
திராவிடர் கழகம் தன்னை இணைத்துக் கொள்ளும்
தமிழக அரசிற்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும், திராவிடர் கழகம் Intervene கலந்துகொள்ளக்கூடியவர்களாக எங்கள் கருத்துகளைக் கேட்கவேண்டும், எங்கள் வாதங்களைக் கேட்கவேண்டும். காரணம், இந்த 69 சதவிகிதத்தை அமைப்பதற்கு அரும்பாடுபட்ட ஒரு இயக்கம் திராவிடர் கழகம். எனவே, திராவிடர் கழகத்தின் சார்பிலே, எனது சார்பிலே உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரம் கழித்து வரக்கூடிய வழக்கில் எங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று மனு போட, டில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களிடம் பேசியிருக்கிறோம். அந்த வழக்கறிஞர் மூலமாக விரைவில் இது அறிவிக்கப்படும்.
திராவிடர் கழகம் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்திலே வாய்ஸ் என்ற அமைப்பின்மூலமாக விஜயன் என்ற வழக்கறிஞர் மூலமாகப் போடப்பட்டிருக்கின்ற வழக்கில், இடைமறித்து, எங்களுடைய கருத்தினையும் கேட்கவேண்டும், 69 சதவிகிதம் செல்லுபடியாகும், அதற்குப் போதிய நியாயங்கள் இருக்கின்றன. நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கை, நியாயமான காரணங்களை அந்த அறிக்கையில் கொடுத்திருக்கிறார்கள். அறிக்கைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,
Justification of Reservation under the Tamilnadu act 45 of 94 என்று சொல்லக்கூடியதில், On Quantifiable Data இதில் புள்ளிவிவரங்களை வைத்து நியாயப்படுத்தி நீங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் கொடுத்த ஆணை. அந்த உச்சநீதிமன்றம் கொடுத்த ஆணைக்கேற்ப, மிகத்தெளிவாக, நியாயப்படுத்தி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய இரு பிரிவினருக்கும் சேர்த்து 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்திலேயே, அம்பா சங்கர் ஆணைய அறிக்கையிலே மிகத் தெளிவாக புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுபடியும் அது குறையக் கூடிய வாய்ப்பில்லை.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கிறது. இவர்களுடைய விகிதாச்சாரத்தைவிட இட ஒதுக்கீடு குறைவாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிபதி ஜனார்த்தன் தலைமையில் உள்ள பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையின்மீதுதான் இந்த ஜி.ஓ. போடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு செய்திருக்கின்ற செயல், சட்டப்பூர்வமானது மட்டுமல்ல, விஞ்ஞானபூர்வமானது. ரொம்பத் தெளிவாகச் செய்திருக்கிறார்கள்.
இதில், வேண்டும் என்றே சிலர் குறுக்குச்சால் ஓட்ட நினைக்கிறார்கள்.
புள்ளிவிவரப்படி கூடுதலான எண்ணிக்கைக்குமேல் நீங்கள் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறீர்களா என்ற சந்தேகம் இருந்தால், அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின்மூலம் ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அதனை தமிழக அரசு பின்பற்றி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, ஜி.ஓ.50 அதைத் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். ஓராண்டிற்கு மேலாக அது நடைமுறையில் இருக்கிறது.
கைவைக்க விடமாட்டோம்!
அரசியல் ரீதியாகவும் பார்த்தால், இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்க முடியாது; அதனை நாங்கள் விடமாட்டோம்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக