செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் குண்டு வீசி கொலை!

Viruvirup
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சீர்காழி அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தால், அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன், சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள தனது வணிக வளாகம் முன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. முத்து ராஜேந்திரனை நோக்கி முதலில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை அவர்கள் வீசினர்.
குண்டு வெடித்து புகை மண்டலம் கிளம்பியதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது பைக்குகளில் வந்த அந்தக் கும்பல் முத்துராஜேந்திரன் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியது.
தலையில் பலத்த வெட்டுபட்ட முத்து ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தக் கும்பல் தப்பி சென்று விட்டது.

தி.மு.க. பிரமுகர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும், அந்தக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் அங்கு திரண்டனர். இந்த சம்பவத்தை அடுத்து மேலையூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பதட்ட சூழ்நிலை காரணமாக, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து மேலையூருக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும், நிறுத்தப்பட்டுள்ளன.
முத்து ராஜேந்திரனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், குணா, சுரேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக