வியாழன், 13 செப்டம்பர், 2012

ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் :

 ஜெயலலிதா தனது தேர்தல் வேண்டுதல் கை கூடியதால் ரங்கநாதர் கோவிலில் நிரந்தர அன்னதானத்தை தொடக்கிவைத்தார். தனது சொந்த வேண்டுதலுக்கு காணிக்கையாக சொந்த பணத்தில் அல்லவா நேர்த்தி கடன் செலுத்த வேண்டும்? அரசாங்க கஜானாவில் கைவைத்து தானம் செய்வது பித்தலாட்டம் . வாழ்க பெரியார் வாழ்க அண்ணா 
திருச்சி :ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா, தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஏற்கனவே 2 முறை நடந்த அரசு விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தற்போது 3,வது முறையாக இன்று நடந்த விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 10.15 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்த ஜெயலலிதாவை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ராஜகண்ணப்பன் மற்றும் பாலகங்கா உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். 10.35 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி புறப்பட்ட முதல்வருடன் ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமன், பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, முத்துமாணிக்கம் மற்றும் பெண் உதவியாளர் ஒருவரும் சென்றனர். 11.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த முதல்வரை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சிவபதி, ஆனந்தன், கலெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். ஸ்ரீரங்கம் மேலசித்திரை மற்றும் தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. தொகுதியில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த முதல்வர், அங்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா முடிந்ததும் இன்று பிற்பகல் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக