வியாழன், 13 செப்டம்பர், 2012

ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்பட்ட வழக்கு: கருணாநிதி நேரில் ஆஜராக கோர்ட்

 தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அக்டோபர் 10-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 4.8.2012 அன்று முரசொலி பத்திரிகையில், கலைஞர் கேள்வி-பதில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், கோத்தகிரியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 விற்பனை செய்யப்படுவதாக புகைப்படத்தோடு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதே? என்ற கேள்விக்கு, `கோத்தகிரி குடிநீர் பிரச்சினையை போக்குவது பற்றி கோடநாட்டில் முதல்-அமைச்சர் ஆய்வு நடத்துகிறார் என்ற அரசின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிடலாமே?' என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது ஜெயலலிதாவின் நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
எனவே, முரசொலி ஆசிரியர் செல்வம், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொன்.கலையரசன் சார்பில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 10-ந் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கருணாநிதி, செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக