சனி, 15 செப்டம்பர், 2012

லிங்குசாமியின் யானை! பல கோடி விலை!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கௌதம் பிரபு நடித்து வெளிவரவிருக்கும் கும்கி படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார். தமிழ்த் திரைத்துறையில் லிங்குசாமி நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பெயர் பெற்றுள்ளார்.
 லிங்குசாமி தயரித்த கும்கி படத்தை, நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் விற்கப் போவதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய தயாரிப்பாளர், தான் தயாரித்த படத்தை இவரே வெளியிடாமல் ஏன் மற்றவருக்கு வெளியிட வேண்டும் என்று எழுந்த கேள்விக்கு பணம் என்ற வார்த்தையை பதிலாக சொல்கிறதாம் கோடம்பாக்கம். 

சில பல கோடிகளில் உருவான படத்தை பத்து கோடிக்கு மேல் கேட்டதால் வியாபார நோக்கத்துடன் விற்றுவிட்டார்கள் என்கிறார்கள். உருவானதே தெரியாமல் இருந்த பாகன் திரைப்படம் வேந்தர் மூவீஸ் கைக்கு மாறியதும் அமோக விளம்பரமும், வசூலும் செய்தது குறிப்பிடத்தக்கது.  லிங்குசாமி வளர்த்த கும்கி விரைவில் ஞானவேல்ராஜா வீட்டிற்கு அழைத்துச்செல்லப்படுமாம். பல வருடங்களுக்கு முன்பாக பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் என்பவர் எழுதிய யானை என்ற குறு நாவலும் கிட்ட தட்ட இது போன்ற ஒரு கதை தான் என்று வதந்தி உலாவுகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக