புதன், 12 செப்டம்பர், 2012

கொல்கத்தாவில் இரு மாணவிகள் 18 மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கொல்கத்தாவில் உள்ள 18 மாடி குடியிருப்பில் இருந்து குதித்து 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சபிபா சந்தனா(15). அவர் கிழக்கு ஜாதவ்பூர் காவல் நிலையம் அருகே உள்ள 18 மாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது தோழி நேஹா பஞ்சரி(15). இருவரும் ஒரே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் இருவரின் நட்பு அவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர்கள் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் நேஹா நேற்று சபிபா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தனது கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் சேர்ந்து 36 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 11வது நாளில் இந்த 2 மாணவிகளும் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக