வியாழன், 13 செப்டம்பர், 2012

Jeyalalitha: சிங்களர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது”

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்துக்கு வரும் சிங்கள பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் தமது அரசு உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்துக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சிங்கள பக்தர்களை வை.கோ.வின் ம.தி.மு.க., மற்றும் சீமானின் நாம் தமிழர் அமைப்பு ஆகியவை கற்களாலும், செருப்புகளாலும் எறிந்து அடித்துத் துரத்தியிருந்தனர்.
அந்த அசம்பாவிதத்தையடுத்து, அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்தது தமிழக காவல்துறை.
இந்தியாவுக்கு உலக அளவில் தலைகுனிவை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. வாஷிங்டன் போஸ்ட், சியாடில் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும், ஃபாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி. போன்ற டி.வி. சேனல்களும் இந்த செயலை விமர்சித்திருந்தன.
“நாம் நினைத்திருந்தால் சிங்களவர்களை அடித்து துவைத்திருப்போம். அப்படி செய்யவில்லை. ஒரு சாம்பிள்தான் காட்டியிருக்கிறோம்” என்றார் சீமான். “இலங்கையில் அந் நாட்டு அரசு ஆயுதமற்ற அப்பாவித் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் உலக நாடுகளுக்கு தெரிய வேண்டும்” என்றார் வை.கோ.
தமிழகத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சிங்கள மக்கள் கொழும்பு சென்று இறங்கியபோது, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யாரும் தாக்கப்பட்டதாக தகவல் இல்லை.

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி விளக்கியுள்ளார். “தமிழகத்திற்கு சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணமாக வரும் சிங்களர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது” என்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசியபோது அவர் தெரிவித்தார்.
இதையே கருணாநிதி முதல்வராக இருந்து தெரிவித்திருந்தால், தமிழக கட்சிகள் சிலவற்றில் இருந்து வீர முழக்கங்கள் கேட்டிருக்கும். இப்போது வாய் திறந்தால்தான்,  வீரர்கள்.
செந்தமிழன் சீமான் ஜெயலலிதாவுக்கு எதிராக ‘முழங்கும் நேரம் வந்துவிட்டது. இதோ வருகிறது அறிக்கை…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக