செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கம்பனிகளிடம் தாராளமாக பணம் பெற்ற கட்சிகள்

 மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் 
காங்கிரஸ் 2,008 கோடி 
பாஜக 994 கோடி
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி  484 கோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  417 கோடி
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் பிர்லா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.
இது குறித்து ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (Association for Democratic Reforms and the National Election Watch) திரட்டியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ள விவரம்:
பிர்லா நிறுவனத்தின் பொதுத் தேர்தல் அறக்கட்டளை 2003-04 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 36.46 கோடியை காங்கிரஸ் கட்சிக்கும், ரூ. 26 கோடியை பாஜகவும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு மட்டுமல்லாமல் ஒடிஸ்ஸா உள்ளிட்ட கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களைச் சேர்ந்த மாநில கட்சிகளுக்கும் ஏராளமான நன்கொடைகளைத் தந்துள்ளன.
இந்த நிறுவனங்களில் பல நிலக்கரி சுரங்க லைசென்ஸ்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அறக்கட்டளை சார்பில் 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 11 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியையும் நன்கொடையாக தந்துள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் பொது மற்றும் அரசியல் விழிப்புணர்ச்சி அறக்கட்டளை சார்பில் 2003-05ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு 9.5 கோடி தந்துள்ளது.
டாடாவின் தேர்தல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 9.96 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6.82 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ. 30 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 1.58 கோடியையும் தந்துள்ளது.
ஹார்மொனி நிறுவனத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 2 கோடியும், பாஜகவுக்கு ரூ. 1.5 கோடியும், சத்யா நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 2 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1 கோடியையும் தந்துள்ளது.
டோரண்ட் பவர் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 14.15 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 13 கோடியையும், ஏசியாநெட் ஹொல்டிங்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 10 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 2.5 கோடியும்,
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 6 கோடியும், அதே வேதாந்தாவின் மெட்ராஸ் அலுமினியம் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 3.5 கோடியும் தந்துள்ளது.
அதே போல சதர்ன் என்ஜினியரிங் வொர்க்ஸ், வீடியோகான் ஆகியவையும் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனி்ஸ்ட், சரத்பவாருக்கு ஏராளமாக நன்கொடை தந்துள்ளன.
அதிமுகவுக்கு...
ஐடிசி நிறுவனம் சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 78 லட்சமும், அதிமுகவுக்கு ரூ. 55 லட்சமும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ. 33 லட்சமும் தந்துள்ளது.
மொத்தத்தில் 2004-05 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் காங்கிரஸ் (ரூ. 2,008 கோடி), பாஜக (ரூ. 994 கோடி), மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (ரூ. 484 கோடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ரூ. 417 கோடி) ஆகியவை தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக