புதன், 12 செப்டம்பர், 2012

அண்ணா வளைவு.. ஜெயலலிதா சொல்வது பெரிய பொய்

சென்னை அண்ணா வளைவை அகற்றுவதற்கான முடிவினை தான் எடுக்கவில்லை என்றும், கடந்த திமுக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பெரிய பொய் என்று திமுக தலைவர் கலைஞர்  கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி,
கேள்வி: மூன்று நாட்களாக கூடங்குளத்தில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: கூடங்குளம் சம்பவம் குறித்து ஓர் அறிக்கையை விரிவாக இன்று காலையில் கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தவர்கள், ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்.
கேள்வி: போராட்டக்காரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அதைப் பற்றியும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: மத்திய அரசும், மாநில அரசும் இந்தப் பிரச்சனையை எப்படி அணுக வேண்டும்?
பதில்: அதையும் அந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி: இந்த அரசு எதுவும் உதவி செய்யவில்லை என்று கூறி இலங்கை அகதிகள் எல்லாம் முகாம்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே?
பதில்: இதற்கு தமிழக அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளத்தில் தமிழக அரசே ஒரு மீனவர் மீது துப்பாக்கி 2 சூடு நடத்தி கொன்றிருக்கிறதே?
பதில்: கூடங்குளத்தில் துப்பாக்கி பிரயோகம் வரை நடந்து முடிந்திருக்கிறது. காவல் துறையினரின் அத்துமீறலும் நடந்திருக்கிறது. அமைதியான முறையில் உண்ணாநோன்பு இருந்தவர்களிடத்தில், சாத்வீகமான முறையில் இருந்தவர்களிடத்தில், அவர்களை அடக்குவதற்காக அடக்குமுறைகளை ஏவி இப்படி காவல் துறை நடந்து கொண்டுள்ளது. அதற்கும் தமிழக அரசு தான் பொறுப்பு. வு
கேள்வி: மத்திய அரசில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. திமுகவுக்கு புதிய வாய்ப்போ, இலாகா மாற்றமோ வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பதில்: நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
கேள்வி: அண்ணா வளைவினை அகற்றுவதற்கான முடிவினை தான் எடுக்கவில்லை என்றும், கடந்த திமுக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் ஜெயலலிதா சொல்கிறாரே?
கேள்வி: இது பெரிய பொய்.
இவ்வாறு கலைஞர் கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக