சனி, 21 ஜூலை, 2012

பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 A new planet has been discovered by amateur astronomers in Britain.
It is thought that the planet is too hot to sustain life, but it was 'stumbled upon' by a viewer of the BBC's Stargazing Live programme.
Meanwhile the village of Dulverton, Somerset, turned off all its lights in an effort to see the stars more clearly.
Stargazing Live has drawn millions of viewers to take an interest in space.
கலிபோர்னியா: பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்
புதிய கிரகமானது பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு 581ஜி என்று பெயரிட்டுள்ளது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாக உள்ள இதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதன் மேற்பரப்பில் திரவம் உறைந்த நிலையில் இருப்பதாகவும் அவை கிரகத்துக்குள் பாய்ந்து செல்லக் கூடியதாகவும் இருக்கலாம் என்கின்றார் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீபன்வாட் என்ற அறிஞர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் என்ன மாதிரியான காலநிலையை உணரமுடியுமோ அதே ஒரு சூழலை இந்த கிரகத்தில் உணர முடியும் என்கின்றனர்.

காட்டுவாசம் போதும்.. நாட்டுக்கு போகணும் சேட்டா!'


சமீப காலமாக இந்த இயக்குநரை மேடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது. அட முன்பெல்லாம் உம்மென்றுதான் இருப்பார். இப்போது ஜம்மென்று பேசவும் செய்கிறார்.
இந்த மாற்றங்கள் மேடையில் மட்டுமில்லையாம்.. .தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தானாம்.
ரொம்ப வித்தியாசமான தலைப்புகளில் படமெடுத்து ரசிகர்களைக் கொக்கி போட்டு பிடித்த அந்த இயக்குநர், இப்போது தான் அறிமுகப்படுத்தும் புது நடிகையை அடுத்த சில ஆண்டுகளுக்கு எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டாராம்.
தன் படம் முடியும் வரை மட்டுமல்ல, முடிந்த பிறகும்கூட, அடுத்து எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நான்தான் டிசைட் பண்ணுவேன் என அடம்பிடிக்கிறாராம்.
'மீறி கையெழுத்திட்டால், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல பாத்துக்கோ' என்று மிரட்டலாக எச்சரித்து வைத்திருக்கிறாராம்.

பார்ப்பனர் அல்லாத யாரும் சட்டை அணியக் கூடாது

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்



எவ்வளவோ நாகரீகம் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அரசியல்கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டுபோட்டுக்கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக்கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?
எஸ்.என்.சிவசைலம், சேலம்.
 பெரியாருடன்  அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.
ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை! மம்தா பானர்ஜி அதிரடி


கொல்கத்தா, ஜூலை 21- இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுபற்றிய செய்தி வருமாறு:
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும்,
மத்திய அரசில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும் என்றும்,
மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

2 வயது குழந்தையிடம் கிட்னி திருடிய டாக்டர்



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தைக்கு விரலில் ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேசன் முடிந்து 4-வது நாளில் அந்த குழந்தை இறந்தது.  பரிசோதனையில் அக்குழந்தையின் கிட்னி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கிட்னி திருடப்பட்டதால்தான் குழந்தை இறந்து விட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். அத்து டன் குழந்தைக்கு ஆபரேசன் செய்த டாக்டர் பிரதீப் கோயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழந்தையின் தந்தை காஷ்யப் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து டாக்டர் கோயல் மற்றும் அவரது குழுவினர் மீது காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை டாக்டர் கோயல் மறுத்துள்ளார்.

Sharat Pawar:மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு

சென்னை: காங்கிரஸ் உறவில் ஏற்பட்ட விரிசலையடுத்து மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. 
ஆனாலும் இன்னும் அதுகுறித்த தகவலை அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. சரத்பவாரும் அந்த கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேலும் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடம், நிதியமைச்சராக இருந்த பிரணாப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ராஜினாமா செய்ததால், அந்த இடம் ஏ.கே.அந்தோணிக்கு வழங்கப்பட்டது.
இது சரத்பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மகள்களுக்காக 'காதல் குடிசை'களைக் கட்டும் அப்பாக்கள்!

 Cambodian Dads Build Love Huts Teen டீன் ஏஜ்' மகள்களுக்காக 'காதல் குடிசை'களைக் கட்டும் கம்போடிய அப்பாக்கள்!

கம்போடியாவில் ஒரு வினோதப் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறதாம். அதாவது 9 வயதை பெண்கள் எட்டி விட்டால், உடனே அவர்களுக்காக தனி குடிசையை அந்தப் பெண்ணின் தந்தையர் கட்டிக் கொடுத்து தனியா குடி வைத்து விடுகிறார்கள். அந்தப் பெண்கள், தங்களுக்குப் பிடித்தமானவருடன் இந்த குடிசையில் வசிக்கலாமாம். யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் இப்பெண்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்படுமாம்.கல்யாணத்திற்கு முன்பு உறவு என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களால் தவறு என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் கம்போடியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு உறவு வைத்துக் கொண்ட பின்னர்தான் கல்யாணமே செய்கிறார்கள். அதுவும் 9 வயதிலேயே பெண்களுக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.
குருயெங் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில்தான் இந்த வினோதப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கு பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அல்லது 9 வயதிலேயே தனியாக குடிசை போட்டு கொடுத்து விடுகிறார் அப்பெண்ணின் தந்தை. அதன் பிறகு அந்தக் குடிசைக்குள் அந்தச் சிறுமி வசிக்கலாம். மேலும் தனக்குப் பிடித்த ஆணுடன் அவள் உறவு வைத்துக் கொள்ளலாம். எத்தனை பேருடன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம்.
அவளது மனதுக்குப் பிடித்த ஒருவனைக் கண்டறியும் வரை உறவு வைத்துக் கொள்ளலாம்.

மீண்டும் இந்தி Nehruவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா?

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும்,< அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித் திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால் தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது.

பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக் குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில் லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது’’என்று கூறியுள்ளார்.

9 வகுப்பு மாணவனுக்கு சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்கள்

பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்கு சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது.

ஒரு ஆறு காணாமல் போய்விட்டது Real Estate திருடர்கள் கைவரிசை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நல்லாறு ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டுமனை வியாபாரம் கனஜோராக நடக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தும் வருவாய்த்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே, அன்னூரில் இருந்து நொய்யல் ஆற்றின் கிளை நதியான "நல்லாறு' துவங்கி, ராமநாதபுரம், கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் ஆகிய ஊராட்சி வழியே சென்று அவிநாசி, பூண்டியில் நொய்யலில் கலக்கிறது. நல்லாற்றின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ராமநாதபுரம் ஊராட்சி, நரியம்பள்ளியில் சிலர், நல்லாற்றை மண் போட்டு மூடி, "சைட்' அமைத்து விற்கின்றனர். அப்பகுதியில் ஒரு கி.மீ., நீளம், 40 முதல் 60 அடி அகலத்துக்கு ஆறு ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இவ்விஷயம் வருவாய்த்துறைக்கு தெரிந்தும் கூட, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே பகுதியில் குட்டை, கல்லுக்குழி, பள்ளவாரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு "சைட்' போட்டுள்ளனர். இதுகுறித்த பிரச்னை இன்னும் தீராத நிலையில், அதே பகுதியில் ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி: ஜாமின் வழங்க 100 கோடி தர முன்வந்த ரெட்டி Family

ஐதராபாத்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்க, அவர் குடும்பத்தினர் தமக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர தயாராக இருந்ததாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளநீதிபதி லட்சுமி நரசிம்ம ராவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் நடத்தி வந்தவர், மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி. இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்கு, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி.பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார். ஜனார்த்தன் ரெட்டி ஜாமின் வழங்கக்கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.

அமெரிக்க நீதிமன்றம்: நித்தியானந்தா நன்கொடையை திருப்பி செலுத்த வேண்டும்

நித்யானந்தா வழக்கில் அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளை நிதி வசூல் செய்து வந்தது. இந்நிலையில் பாபட்லால் சாவ்லா என்பவர் நித்யானந்தாவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது அறக்கட்டளையின் தலைவர் நித்யானந்தாதான் என்பதற்கான கையெழுத்து ஆவணமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் நித்யானந்தா அறக்கட்டளை குற்றம் புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிதாக வழங்கப்பட்ட கோர்ட் தீர்ப்பை அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.
மேலும் நித்திக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

போலீஸார் 20 லட்சம் பேரம் நர்ஸ் பலாத்கார வழக்கு .

நர்ஸ் பலாத்காரம்... டாக்டர்களிடம் போலீஸார் ரூ. 20 லட்சம் கேட்டு பேரம் பேசினரா...?

சென்னை: கேரள நர்ஸ் சென்னையில் 2 கேரள டாக்டர்களால் மோசமான முறையில் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நர்ஸால் குற்றம் சாட்டப்பட்ட இரு டாக்டர்களிடமும் போலீஸார் ரூ. 20 லட்சம் பணம் கேட்டு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கை உடனடியாக பதிவு செய்யாமல் போலீஸார் தாமதப்படுத்தியதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இதை காவல்துறை மறுத்துள்ளது.

காதலுக்கு மரியாதை காதலர்களுக்கு அவமரியாதை!

 பெற்ற பிள்ளையை விடப் பாசமாக ரேஸ் குதிரைகளை வளர்க்கும் பணக்காரர்கள், அந்தக் குதிரையால் பந்தயத்தில் வெற்றி பெற முடியாவிட்டால், அதனால் தன் கவுரவமும் குதிரையின் கவுரவமும் சேர்த்துப் பாதிக்கப்படும் என்ற கவலையால் அதனைச் சுட்டுக் கொன்று விடுவார்களாம். சாதி வெறியர்கள் பெற்ற பிள்ளைகளையே வெட்டிக் கொல்வது கூட இத்தகைய ‘பாச உணர்வு’ காரணமாகத்தான்.

வினவு
 ரசிகர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட்டு செல்வாக்கு செலுத்தியவற்றில், 90களில் வந்த காதல் தொடர்பான திரைப்படங்கள் முக்கியமானவை. மசாலா இல்லையென்பதற்காகவும், காதலின் ‘கண்ணியத்தை’ சித்தரித்தமைக்காகவும் இப்படங்களை மக்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள். அந்த கண்ணியத்தின் பின்னே உள்ள கயமைத்தனத்தை கூரிய விமரிசனப் பார்வையால் புரிய வைக்கிறது இந்த விமரிசனம். புதிய கலாச்சாரத்தின் சினிமா விமரிசனங்கள் தமிழ் சினிமாவின் சமூக தடத்தை பதிந்து வைத்திருக்கின்ற வரலாற்று ஆவணம். அந்த தடத்தில் நீங்களும் சென்று பார்க்க இந்த விமரிசனத்தை வெளியிடுகிறோம்

ராஜேஷ் கன்னாவின் வீட்டை உரிமை கோரும் அனிதா

Rajesh Khanna S Live In Partner Sen ராஜேஷ் கன்னாவின் 'ஆசிர்வாத்' எனக்கே.. உடன் வசித்த பெண் நோட்டீஸ்!

மும்பை: மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, மும்பையில் வசித்து வந்த ஆசிர்வாத் வீடு தனக்கே சொந்தம் என்று கடைசிக்காலத்தி்ல் அவருடன் வசித்து வந்த பெண்மணியான அனிதா அத்வானி உரிமை கோரியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிம்பிள் கபாடியாதான் ராஜேஷ் கன்னாவின் மனைவி. இருப்பினும் இவர்களது பந்தம் 1984ம் ஆண்டுடன் முடிந்து போய் விட்டது. அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அப்படியே பிரிந்து போய் விட்டனர். அதன் பின்னர் ராஜேஷ் கன்னாவுடன் கடைசிக்காலத்தில் அவருடைய வீட்டில் அனிதா அத்வானி சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் பார்ட்னர்களாக வசித்து வந்தனர்.

kamal Hassan:ராஜேஷ் கன்னாவைப் போல வாழ்ந்தவர் யாருமில்லை..

Rajesh Khanna Was World S Star Hai
ராஜேஷ் கன்னாவைப் போல புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்கள் யாருமில்லை. அவருக்குக் கிடைத்ததைப் போன்ற திரை வாழ்க்கை சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கமல்ஹாசனுக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் இடையிலான உறவு திரையுலகில் மிகப் பிரபலமானது. கமல்ஹாசன் நடித்துப் பிரபலமான படங்கள் சிலவற்றின் ரீமேக்கில் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார். அதை விட முக்கியமானது கமல்ஹாசனின் முதல் இந்தித் திரைப்படத்தில் ராஜேஷ் கன்னா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அரங்கேற்றம். கமல்ஹாசன் விடலைப் பையன் நிலையிலிருந்து உருமாறி நின்றபோது நடித்த முதல் பெரிய படம் இதுதான். இந்தப் படம் பின்னர் ஆய்னா என்ற பெயரில் இந்திக்குப் போனது. அதிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார். அதில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர்.

மதுரை ஆதீனத்தை கொடைக்கானலில் சிறை வைத்த நித்தியானந்தா!

 Madurai Aadheenam House Arrest Kodaikanal Nithyananda
மதுரை: கர்நாடகத்தில் அடிவாங்கி திரும்பி மதுரையில் தங்கியிருக்க முடியாமல் கொடைக்கானலில் டேரா போட்டிருக்கும் நித்தியானந்தாவுக்கு அங்கும் நிம்மதியில்லை. சுதந்திரமாக இருக்கும் நேரங்களில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அதிரடியாக பேட்டிகளைக் கொடுத்துவிடுவதால் நித்தியானந்தாவின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
நித்தியானந்தாவின் வயிற்றில் புளியைக் கரைத்த சம்பவம் எது? "கலிபோர்னியா நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைத்தால் இளைய ஆதீனம் பதவியில் இருந்து தூக்கிடுவோம்ல" என்று அதிரடியாக அருணகிரிநாதர் கூறியதுதான் காரணம்!

அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு!

நடிகை குஷ்பூ தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருச்சிக்கு அருகில் ஒரு கோயில் கட்டும் அளவிற்கு குஷ்பூவிற்கு தீவிர ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமீபமாக குஷ்பூ தனது குடும்பம், சின்னத்திரை, அரசியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திவந்தாலும் எப்போதாவது ஓரிரு படங்களில் நடித்துவருகிறார். 
ஒவ்வொரு நடிகைக்கும் இருக்கும் பொதுவான ஆசை நாம் பார்த்து ரசித்து வளர்ந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். குஷ்பூ சிறிய வயதிலிருந்தே அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது விட்டுவிடுவாரா குஷ்பூ.
இந்தியில் தயாராகிகொண்டிருக்கும் ‘மேட் டாட்’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என்று ரேவதி வர்மா கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம் குஷ்பூ.

Nazca Lines வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டவை?

Nazca lines were unknown until 1920s. They were first spotted when commercial aircraft started to fly over the region within the late 1920s. Some of the passengers reported seeing some sort of pictures on the desert surface below. Some mentioned that it looked like aircraft runways. Even after that they remained hidden for another decade. Paul Kosok, an American scientist, was the very first person who really started to spent some time on the rumors. In 1939 he came to Peru to work on this. Though he started his work to investigate if these lines were part of an irrigation system. They weren’t. However, by pure chance, it just happened to be the winter solstice and he noticed that the sun set exactly at the end of one of these long lines. Immediately he realized that this desert is the biggest mystery of the world.
நாஸ்கா கோடுகள் (The Nazca Lines )
இன்றைய மர்மமும் தென்னமெரிக்க நாடான பெரு பற்றியதுதான். பெருவின் தலைநகர் லிமாவின் தெற்கே 400 கிமி தொலைவில் உள்ள பாலைவனங்கள் உலகின் மிகவும் வினோதமான குறியீடுகளைக் கொண்டுள்ளது. “ஜியோக்ளைப்” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பூமியின் பரப்பில் கோடுகள் அமைத்தோ செதுக்கியோ அல்லது கற்களை குவித்தோ, பெயர்த்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒருவிதமான படம் அல்லது குறியிடுகளுக்கு ”ஜியோக்ளைப்” என்று பெயர்.

சரத் பவார் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக முடிவு

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவார், மன்மோகன் சிங் தலைமையிலான, அமைச்சரவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்த இடத்தில், நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதால், இரண்டாம் இடத்தில், சரத் பவார் இடம் பெறுவார் என, செய்தி வெளியானது. அரசு இணைய தளத்திலும், பிரதமருக்கு அடுத்த இடத்தில், பவாரின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், சமீபத்தில் இதில் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிரதமர் தலைமையில் நடந்த, அமைச்சரவைக் கூட்டத்தில், ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு இரண்டாம் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் அதிருப்தி அடைந்தார்.

சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் 1000 இறைச்சி கடைகள்

சென்னை மாநகராட்சி அனுமதி பெற்ற இறைச்சி கூடங்கள் பெரம்பூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய 3 இடங்களில் உள்ளது. இங்குதான் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த இறைச்சி கூடங்களில் வெட்டப்படும் ஆடு மற்றும் மாடு இறைச்சியில் மாநகராட்சி “சீல்” பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு வெட்டும் இறைச்சி கூடங்கள் அனுமதியின்றி செயல்படுவதாக விலங்குகள் நலவாரிய துணை தலைவர் சின்னிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ராகுல் அமைச்சராகிறார் இனி கட்சியிலும், ஆட்சியிலும்


vijay - chennai,இந்தியா

வரவேற்க தக்க செய்தி..... ராகுல் காந்தியை முன்நிறுத்தினால் 2014 ல் ஆட்சி மாற்றம் நிச்சயம், மிக்க மகிழ்ச்சி.....
புதுடில்லி: ""காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், மிக முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் தயார். 
ஆனால், நான் முக்கிய பொறுப்பை, எப்போது ஏற்றுக் கொள்ள வேண்டும்; கட்சியில் தீவிர பணியை எப்போது செய்ய வேண்டும் என்பதை, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார். இதனால், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்றும், அதில், கேபினட் அமைச்சர் பதவி ராகுலுக்கு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, விரைவில் கட்சியிலும், ஆட்சியிலும், முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, சமீப நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

தலைகவிழ்ந்த சோகம்? செங்கோட்டையன் கடைசி வரிசையில்

தூக்கியடிக்கப்பட்ட சோகம் தலைகவிழ்ந்தபடியே செங்கோட்டையன்தமிழக வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியையும் பறித்தார் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா. இதுவரை ஜெயலலிதாவுக்கு அருகிலேயே நிற்பார்.  கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும் நிற்பார்கள்.   செங்கோட்டையனுக்கு  கட்சியில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்தது.
அவர் பதவியில் இருந்து
தூக்கியடிக்கப்பட்டதும் கடைசி வரிசையில் நிற்கிறார்.
கூட்டங்களில் தலைகவிழ்ந்தபடியே நிற்கிறார்.  வழக்கத்தை விட ஜெயலலிதா வரும் போது அதிகமாக குனிந்து வணங்குகிறார்

வியாழன், 19 ஜூலை, 2012

நேரமாகி விட்டது, கிளம்ப வேண்டியதுதான்... ராஜேஷ் கன்னா குறித்து அமிதாப் உருக்கம்!

Amitabh Bachchan On Rajesh Khanna
சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவுடனான தனது நட்பு குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் மிக உருக்கமாக எழுதியுள்ளார்.
அதிலிருந்து சில பகுதிகள்:
ராஜேஷ் கன்னாவை நான் பிலிம்பேர் பத்திரிக்கையில்தான் முதலில் பார்த்தேன். பிலிம்பேர்-மாதுரி திறமைப் போட்டியில் வென்றிருந்தார் கன்னா. நானும் கூட அதில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன்.
அவரது ஆராதனா படத்தை டெல்லி, கன்னாட் பிளேஸில் உள்ள ரிவோலி தியேட்டரில் பார்த்தேன். எனது அம்மாதான் அப்படத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றிருந்தார். தியேட்டரில் பெரும் கூட்டம், ராஜேஷ் கன்னாவுக்குக் கூடிய அந்தக் கூட்டம், குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் எப்போதும் மறக்க முடியாதது.

காமவெறி பிடித்த டாக்டர்களால் சீரழிக்கப்பட்ட கேரள நர்ஸ்

டாக்டர்களிடம் சிக்கி 2 நாட்கள் பலாத்கார சித்திரவதைக்குள்ளான கேரள நர்ஸ்!

சென்னை: கேரளாவைச் சேர்ந்த இரண்டு ஹோமியோபதி டாக்டர்களால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 19 வயது கேரள நர்ஸ், அந்த டாக்டர்களிடம் 2 நாட்கள் சிக்கித் தவித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை தனது தாய்க்குத் தெரியாது என்றும் தெரிந்தால் அவர் செத்துப் போய் விடுவார் என்றும் இந்த நர்ஸ் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அந்த நர்ஸுக்கு 19 வயதாகிறது. நர்சிங் படித்தவர். படிப்பு தொடர்பான பயிற்சிக்காக திருச்சியில் உள்ள கேரள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். இதன் கிளை, சென்னையில் உள்ளது.
கடந்த 12ம் தேதி திருச்சி வந்த அவர் பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னைக்கு வந்தபோதுதான் அவர் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டார்.

Mumtaz:ஒரு பிளாப் படத்தைக் கூட நாங்கள் தரவில்லை

தனது தோளில் என்னை 8 நாட்கள் தாங்கினார் ராஜேஷ்.. மும்தாஜ்

ராஜேஷ் கன்னா குறித்த மலரும் நினைவுகளை அவருடன் ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் மும்தாஜ். அவரும் ராஜேஷ் கன்னாவும் இணைந்து எட்டுப் படங்களில் நடித்துள்ளனர். அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இதுவும் கூட ராஜேஷ் கன்னாவின் சாதனைகளில் ஒன்றுதான்.
ராஜேஷ் கன்னாவுடனான அனுபவம் குறித்து மும்தாஜ் கூறியது...
நானும், ராஜேஷ் கன்னாவும் அதிர்ஷ்டக்கார ஜோடிகள். ஒரு பிளாப் படத்தைக் கூட நாங்கள் தரவில்லை. நானும், அவரும் இணைந்து நடித்த கடைசிப் படம் ஆய்னா. அதில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
எங்களது முதல் படமான தோ ராஸ்தே மிகப் பெரிய ஹிட் ஆன படம். பாடல்கள்தான் அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம். அதன் பிறகு எனக்குத் திருமணமாகி விடை பெற்றுச் செல்லும் வரை அவருடன் நடித்த அத்தனையும் ஹிட் படங்கள்.

பேராசிரியர் மாணவிகளுடன் குடித்தனம், மனைவி விஜயலட்சுமி கொடூர கொலை

மாணவிகளுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் மனைவி விஜயலட்சுமியை கொடூரமாக கொலை செய்ததாக நடராஜன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். 
சென்னை படப்பையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன், மனைவி விஜயலட்சுமியை கொன்று திருவேற்காடு அருகே கால்வாயில் புதைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தின் புதிய அணை முயற்சி தோல்வி

திருவனந்தபுரம்: புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் குறுக்கு வழியில் அனுமதி பெற மேற்கொண்ட கேரளத்தின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
குமுளி-தேக்கடி இடையே தமிழக- கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை வலுவிழந்து விட்டதாக பொய் புகார் கூறிய கேரள அரசு அங்கு புதிய அணை கட்ட திட்டமிட்டது.
இதற்காக ஆய்வு பணிகளையும் தொடங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. நீதிமன்ற உத்தரவுப்படி அணையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் அணை பலமாக இருப்பதாகவும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது.
ஆனால், கேரள அரசு இதை ஏற்காமல் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு மனு செய்தது.
இந்த மனு கேரள வனத்துறை மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மனு முறைப்படி வழங்கப்படவில்லை என கூறி மத்திய சுற்றுச்சூழல் துறை மனுவை நிராகரித்துவிட்டது.

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த Original Super Star

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா! இவர்தான் உண்மையில் ஒரு ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் எனலாம்.மீதி  அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் சிரஞ்சீவி ராஜ்குமார் போன்ற எல்லோருமே ஒரு விதத்தில் ராஜேஷ் கன்னாவை காப்பி அடிக்க முயற்சி செய்தவர்களே . ஆனாலும் கூட எந்த இடத்திலும் பிற நடிகர்களை தரக்குறைவாக இவர் நினைத்ததே இல்லை.அமிதாப் கூட இவரோடு சஞ்சீர் என்ற படத்தில் நடித்துத்தான் துரதிஷ்ட நடிகன் என்ற அவப்பெயரை போக்க முடிந்ததது 

இந்தியத் திரையுலகம் எத்தனையோ சாதனை நடிகர்களைக் கண்டுள்ளது. அவர்களுக்கு நிகரான நடிகைகளையும் கண்டுள்ளது. ஆனால் ராஜேஷ் கன்னாவுக்கு நிகரான ஒருவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய பெரிய ஸ்டார்கள் வந்தார்கள் இருந்தார்கள் என்றாலும் முதல் முத்திரையைப் பதித்த முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மட்டுமே.
1965ல் பாலிவுட்டில் நடிக்கப் புகுந்த ராஜேஷ் கன்னா, ஆரம்பத்தில் நடித்த 3 படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் யாருடைய பார்வையிலும் அவர் விழவில்லை. ஆனால் ஆராதனாதான் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படத் தொடங்கினார். பெண் ரசிகர்கள் இவருக்குப் போல எவரும் இல்லை. எங்கு போனாலும் துரத்தித் துரத்தி இவரை ரசித்துப் பார்த்தார்கள். இவரது காரைக் கூட விடாமல் துரத்தித் துரத்தி முத்தமிட்டு மகிழ்ந்தனர். கார் டயரில் ஒட்டியிருந்த மண்ணைக் கூட துடைத்து எடுத்துச் சென்றனர்.

பார் வாசலில் இளம்பெண்: டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் கொடுத்த அடி!

Viruvirupu
“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது” என்று குற்றம் சாட்டி, இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த தனியார் டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் ராஜினாமா செய்திருப்பது மீடியா வட்டாரங்களில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஆசிரியரின் ராஜினாமாவையடுத்து, இந்த விவகாரத்துக்கு வெளிநாட்டு மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளன.
கவுகாத்தி நகரில் கடந்த வாரம் பார் வாசலில் இளம்பெண் ஒருவரை 20 பேர் மானபங்கம் செய்த காட்சியை தனியார் தொலைகாட்சி சேனல் படம்பிடித்து ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் அடிப்படையிலேயே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

DNA Test For Ex MLA, DMK கேரள சிறுமி கொலை வழக்கு

கேரளா மாநில சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட நான்கு பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன், 49, என்பவரது மூன்றாவது மகள் மேகலா, 15, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெரம்பலூர் முன்னாள், தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மேகலாவின் அப்பா சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், புரோக்கர் பன்னீர்செல்வம் உட்பட, ஆறு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Chennai Trafic செல்போனில் தெரிந்து கொள்ளலாம்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் பகுதியை செல்போனில் தெரிந்து கொள்ளலாம்

சென்னை நகரில் வாகனங்களின் அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாதாரணமாக அரை மணி நேரத்தில் சென்றடையகூடிய  இடத்துக்கு பல சமயங்களில்  ஒரு மணி நேரம் மேல் ஆகிறது .
எந்த இடத்தில் எதற்காக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரிவதில்லை. அந்த குறையை போக்கி, போக்குவரத்து நெரிசல் பகுதியை வாகன ஓட்டிகள் அறிந்து மாற்றுப் பாதையில் செல்லும் புதிய வசதியை ஏற்படுத்த சென்னை நகர போக்குவரத்து போலீசார் திட்டம் தயாரித்துள்ளனர்.

தோழி எனிமியாகி, மீண்டும் தோழியாகி? செங்கோட்டையன்

செங்கோட்டையன் திடீர் கல்தா: அம்மா ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகம் – “OUT”

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்த நாட்களில் பதவி பறிபோகும் பயமின்றி நிம்மதியாக தூங்கிய அமைச்சர்கள், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுபோட சென்னை வருகிறார் என்று தெரிந்தபோது அவ்வளவாக பதறவில்லை. “வந்து ஒரு நாள், ரெண்டு நாள்தானே தங்குவாங்க. வந்த சோலியை பாத்துட்டு போயிடுவாய்ங்க”
அமைச்சர்களுக்கு இப்படி ‘குளிர்விட்டு’ போயிருப்பதை அம்மாவும் புரிந்து கொண்டார்களோ, என்னவோ, கொடநாட்டில் இருந்து வந்திறங்கிய தினமே, தமிழக வருவாய்த்து‌றை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது.
புதிய வருவாய்துறை அமைச்சராக பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

LIC:வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து

தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இந்தி மொழியில் கடிதத் தொடர்பு குறைந்து வருவதால், "அனைத்து ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள், இந்தியில் கையெழுத்திட வேண்டும்' என, ஆயுள் காப்பீட்டு கழகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.ஆயுள் காப்பீட்டுக் கழக, தென்மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"தென்மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்து, இந்தியில் குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக, திங்கள் கிழமைகளில், இந்தியில் கையெழுத்திட வேண்டும்; கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.'இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2G Spectrum. பிரமோத் மகாஜன் ஜஸ்வந்த் சிங் கபில் சிபல் தயாநிதி மேலும் பலரை விசாரிக்க முடிவு

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, கேள்வி எழுப்பி, தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு ஏற்றதா என்பதுடன், அதன் தகுதி உள்ளிட்ட, அனைத்து அம்சங்களையும் விசாரிக்கப் போவதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா பதவிக் காலத்தில், வழங்கப்பட்ட, 122 "2ஜி ஸ்பெக்ட்ரம்' உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. "ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட இயற்கை வளங்களை, ஏல முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது."இந்த உத்தரவு, மற்ற இயற்கை வளங்களுக்கும் பொருந்துமா? இந்த உத்தரவு, அரசின் கொள்கை முடிவுகளை பாதிக்கும் வகையில் உள்ளதே' என்ற கேள்விகளுடன், ஜனாதிபதி பரிந்துரையுடன், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தது.

First Super Star ராஜேஷ் கன்னா


நடிகர் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 69.
Rajesh-Khannaஇந்தித் திரையுலகில் மிகவும் புகழ் பெற்றவராக விளங்கியவர். பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்று புகழப்பட்டவர். தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர்.
உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இயற்பெயர் ஜடின் கன்னா. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1942 டிசம்பர் மாதம் 29ம் தேதி செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது மனைவி டிம்பிள் கபாடியாவும் புகழ் பெற்ற நடிகையே. இவரை 1973ம் வருடத்தில் ராஜேஷ் கன்னா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள். இவர்களிருவரும் பாலிவுட்டில் நடிகையராக வலம் வந்தனர்.

புதன், 18 ஜூலை, 2012

Prof.Natarajan மனைவியின் இதயத்தை குத்திக் கிழித்த கொடூரம்

சென்னை: தனது மனைவியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி பேராசிரியர் நடராஜன், தனது மனைவியை மிகக் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
மனைவி விஜயலட்சுமியின் இதயத்தை அவர் நான்கு முறை குத்திக் கிழித்துள்ளார். உடல் முழுக்க மொத்தம் 11 முறை அவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.
சென்னை படப்பையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நடராஜன், தனது மனைவி விஜயலட்சுமியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தனது கள்ளக்காதல் லீலைகளை மனைவி கண்டுபிடித்து விட்டதால் அவமானமடைந்து இந்த ஈனச் செயலை செய்துள்ளார் நடராஜன்.
மனைவியை நைசாக வரவழைத்து கொலை செய்து உடலை கால்வாயில் போட்டுப் புதைத்து பாறாங்கல்லையும் தூக்கி வைத்து மூடி விட்டார்

செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி

அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று (18.07.2012) மாலை அறிவித்திருந்தார்.இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே, வருவாய்த் துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.
இனி தமிழ்நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்  என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அப்பாவி அதிமுக தொண்டன் மனம் குளிர நாலு நல்ல வார்த்தை சொல்லி உள்ளோமுங்கோ 

2G Spectrum பிரமோத் மகாஜனுக்கும்(BJP) தொடர்பு

 2g Pramod Mahajan Be Named Cbi Chargesheet
டெல்லி: மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனுக்கும் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பிரமோத் மகாஜன் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் விசாரித்து வருகிறது. இதில் பாஜக ஆட்சியில் மறைந்த பிரமோத் மகாஜன் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனின் பதவிக்காலங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.
மேலும் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக அருண் சௌரி இருந்தபோது நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. விசாரித்தது.
அப்போது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, தொலைத்தொடர்புச் சேவையை மேம்படுத்துவதற்காகவே பின்பற்றப்பட்டது

ராஜேஷ் கன்னா காலமானார் Rajesh Khanna died

Actor Rajesh Khanna has died at home in Mumbai. He was 69. The cause of death is not known yet but Mr Khanna had been ill for some time. The cremation will be held tomorrow morning.
Mr Khanna had been hospitalized on June 23, when he was taken to Lilavati Hospital to be treated for exhaustion, and spent some days having tests. He was discharged on July 8.
Worried fans had lined up outside Aashirwad, Mr Khanna's Mumbai bungalow, on June 21 when he was said to have stopped eating. He was later reported to be "more than fine" by son-in-law, actor Akshay Kumar. Mr Khanna himself appeared on his balcony, visibly weak and wearing dark glasses, to wave at his fans and give them the victory sign.
Mr Khanna had also been hospitalized for a few days in April this year.
Mr Khanna's ex-wife, actress Dimple Kapadia, has nursed him through his illness. They have two daughters together - Twinkle, who is expecting her second child with husband Akshay Kumar, and Rinke who is married to businessman Sameer Saran.
Mr Khanna was the top actor in Bollywood during the Seventies and early Eighties, and is considered to be it's first real superstar. He was the star of romantic comedies and dramas such as Anand, Aradhana and Kati Patanag. He won three Filmfare awards in his long career. Mr Khanna also held a Lok Sabha seat as a Congressman from 19992-1996.

தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம் என்று பெஸ்ட் ராமசாமி

காங்கேயம்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம் என்று பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் இடையே முற்றி வருகிறது.
கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக பெஸ்ட் ராமசாமி சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.

காற்றாலைகள் 'காலை' வாரிவிட்டுவிட்டது, மின்சார வாரியம்

சென்னை: காற்றாலைகள் மூலம் மிகவும் குறைந்தபட்ச மின்சாரம் மட்டுமே பெறப்படுவதால் தமிழகத்தில் கூடுதல் மின்தடை செய்யப்படுகிறது, இதனை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மின் தடை மேலும் கடுமையாகியுள்ளது.
இந் நிலையில் காற்றாலை மின்சாரமும் குறைந்துவிட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு காற்றாலைகள் மூலம் சராசரியாக 3500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் நேற்று 125 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதால் காற்றாலை, மின்வாரியத்தின் காலைவாரி விட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் மின்தடையை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது..சுந்தர்.சி


நடிகை குஷ்புவின் கணவரும் இயக்குனருமான சுந்தர்.சி சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது நடிப்பை நிறுத்திவிட்டு இயக்கத்தில் இறங்கி இருக்கிறார்.  
சமீபமாக வெளிவந்த கலகலப்பு படத்தை சுந்தர்.சி தான் இயக்கி இருந்தார். கலகலப்பான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
சுந்தர்.சி அடுத்து விஷால் நடிக்கும்  மத கஜ ராஜா (எம்.ஜி.ஆர்) படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிகை ராதாவின் மகள் ஹீரோயினாக நடிக்கிறார். 
இனி வரும் படங்களில் தமிழ் தெரிந்த நடிகைகளைத் தான் என் படத்தில் நடிக்க வைப்பேன் என்ற முடிவை எடுத்துள்ளார் சுந்தர்.சி. தமிழ் பேசும் நடிகைகளையே என் படங்களில் தேர்வு செய்கிறேன். மொழி தெரியாதவர்களை நடிக்க வைப்பது இல்லை. தமிழ் தெரிந்த நடிகளால் மட்டுமே வசனத்தையும் புரிந்து கொண்டு ஈடுபாட்டோடு நடிக்க முடியும். உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். அவர்களை நடிக்க வைப்பதும் எளிதாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Chennai கார் கொள்ளையன் குமரியில் சிக்கினான்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நாகர்கோவில் சென்னையை கலக்கிய கார் கொள்ளையன் குமரியில் பிடிபட்டான். 
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் திருட்டு கும்பல் போலீசில் பிடிபட்டது. அந்த கும்பல் கொடுத்த தகவலின்படி நாகர்கோவில் ராமன்புதூர் பார்க் ரோட்டை சேர்ந்த பொன்னையாதாஸ் என்பவருக்கு கார் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் உள்ள பல காவல் நிலையங்களில் பொன்னையாதாஸ் மீது பல்வேறு கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து சென்னை போலீசார் பொன்னையாதாசை தேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமன்புதூருக்கு வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள் new ஆய்வு


லண்டன், ஜூலை 17- கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப் பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளி களாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தெரிய வந்துள்ள விவரங்கள், டெய்லி மெயில் பத்திரிகை யில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும்.

ஈரானில் இருந்து கனடாவுக்கு குடியேறிய கம்ப்யூட்டர் ஹக்கிங் குழு


மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அதி முக்கிய 800 நபர்களின் அல்லது அமைப்புகளின் கம்ப்யூட்டர்களை ஹக் பண்ணும் குழு ஒன்று கனடாவில் இருந்து இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில்தான் இந்த குழுவினர் ஈரானில் இருந்து கனடாவில் குடியேறியுள்ளனர் எனவும் கனேடிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஈரானில் துவங்கிய இந்த கம்ப்யூட்டர் ஹக்கிங், ஆயிரக் கணக்கான ஆவணங்களை 800 வெவ்வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து திருடியது தெரியவந்துள்ளது. இவர்களது இலக்குகள் அனைத்துமே, மத்திய கிழக்கு நாடுகளில்தான் இருந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்கள் மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் உள்ளார்கள்.

அந்நிய நேரடி முதலீடு 36% வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. 
அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56,  57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு.

Violence கட்சிகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்யலாமா?

புதுடில்லி:"வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும், அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்யலாமா?
 இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

டாஸ்மாக்' கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை:தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும், பா.ம.க.,வினர் "டாஸ்மாக்' கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை, "டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் விடாமல் பாதி வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, பூட்டுப் போடாதபடி பார்த்துக் கொண்டனர். இப்போராட்டம் காரணமாக, "டாஸ்மாக்' கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சென்னையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர், போராட்டத்தில் பங்கேற்று கைதாகி, பின் விடுதலை செய்யப்பட்டனர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்போராட்டத்தில், பெண்கள் பங்களிப்பு குறைவாகவே இருந்தது.
டிசம்பர் வரை கெடு:சென்னை தி.நகரில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

கார்த்தியின் சம்பளம்14 கோடி

நடிகர் கார்த்தியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.14 கோடிக்கு சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் ஒருவர் கார்த்தியிடம் பேசியுள்ளாராம்.பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.
 இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத்  போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள்

கால்வாயில் உடல் தோண்டி எடுப்பு: உறவினர்கள் கதறல் : பேராசிரியருக்கு பல பெண்களுடன் தொடர்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பூந்தமல்லி :சென்னை பேராசிரியரால் கொன்று புதைக்கப்பட்ட இளம் மனைவியின் உடல் கிருஷ்ணா கால்வாய் அருகே இன்று தோண்டி எடுக்கப்பட்டது. 
உடலை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். பேராசிரியர் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னை அடுத்த படப்பையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). மனைவியை சொந்த ஊரான காளிபாளையத்திலேயே விட்டுவிட்டு, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கல்லூரிக்கு நடராஜன் சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 6,ம் தேதி சேலத்தில் தோழி வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. Ôமனைவியை காணவில்லை என பரமத்திவேலூர் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அதேநேரம், வரதட்சணை கேட்டு நடராஜன் மற்றும் குடும்பத்தினர் விஜயலட்சுமியை கடத்தியதாக அவரது தந்தை சுப்பிரமணியனும் புகார் அளித்தார். 3 தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். நடராஜனிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11,ம் தேதி நாமக்கல் கோர்ட்டில் நடராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மனைவியை கொன்று புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை நடராஜன் தெரிவித்தார்.

மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் சிறை, ரூ.1,000 அபராதம்

கோவை: பள்ளிக்கு இரட்டை சடையில் வராததால் மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சாந்தி (15)( பெயர் மாற்றப்பட்டுள்ளது).அவர் கடந்த 2008ம் ஆண்டு தடாகம் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர் ஒரு நாள் பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றுவிட்டார்.
அவர் மற்ற மாணவிகளைப் போன்று இரட்டை சடையில் வராததைக் கண்டுபிடித்த விளையாட்டு ஆசிரியை ஷோபனா சாந்தியை அழைத்துச் சென்று முட்டிபோட வைத்தார். மேலும் அவரது முடியையும் வெட்டிவிட்டார். நெடுநேரம் முட்டி போட்டிருந்ததால் சாந்தியால் வீட்டிற்கு தானாக நடந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அவர் தோழிகளின் உதவியுடன் வீட்டிற்கு சென்றார்.

ஹெலன் டேவிட்சனின் சித்தியைக் கொன்றது கூலிப்படையா?

 Gangsters Killed Dmk Mp S Relative
 குமரி அருகே திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சித்தியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் கூலிபடையினருக்கு தொடர்பு இருக்குமா என்பது குறித்து எஸ்.பி. தீவிரமாக விசாரித்து வருகிறார்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் எட்வர்ட். பஹ்ரைனில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி பேபி(50). அவர்களுக்கு சகாய மேபிள்ஷா என்ற மகளும், சகாய எக்ஸ் விபன் என்ற மகனும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் வேறு ஊரில் வசிக்கின்றனர். குமாரபுரம் தோப்பூரில் உள்ள பங்களாவில் பேபி தனியாக வசித்து வந்தார். அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சித்தி ஆவார். நேற்று முன்தினம் பேபி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பேபியின் காது அறுக்கப்பட்டு கம்மல் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் தான் கொலை நடந்து இருக்கிறது. பேபி படுக்கை அறைக்கு செல்லும் முன்பே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பேபிக்கு தெரி்ந்த நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மமதா:பிரணாப்பை ஆதரிக்கிறோம்

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். 
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

அரக்கோணம் .ஒரே வீட்டில் பெண் கொலை இருவர் வெட்டுக்காயங்கள்

கழுத்தை அறுத்து பெண் படுகொலை: 2 பேர் உயிர் ஊசல் அரக்கோணம் அதாவுல்லா தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஷர்மிளா (24), இவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர் வெளியூர் சென்றி ருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு இவரது வீட்டு பாத்ரூம் வென்டிலேட்டரில் இருந்து புகை வந்தது. இதை மேல்மாடியில் வசித்து வரும் ஷர்மிளாவின் உறவினர் பார்த்து கீழே ஓடி வந்து பார்த்த போது ஷர்மிளா கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று பார்த்ததில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் நிர்வாண நிலையில் கழுத்து தலையில் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுடன் கிடந்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சீத்தாராமன், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

Dubai தமிழக மீனவர் சுட்டுக் கொலை அமெரிக்க தூதர் வருத்தம் தெரிவித்தார்

டெல்லி: துபாயில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பெளல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துபாயில் தமிழக மீனவர்கள் மீதான அமெரிக்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயை அமெரிக்க தூதர் நான்சி பெளல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது துபாய் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அபு தாபியில் உள்ள தூதரகமும் ஜபேல் அலியில் உள்ள தற்காலிக தூதரும் முழு ஒத்துழைப்பும் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்புவோமாக:அந்த கதைக்கும் மாற்றான் கதைக்கும் சம்பந்தம் இல்லை

தமிழ் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மாறுபட்ட இருவேடங்களில் நடித்துள்ள படம் ‘மாற்றான்’. மாற்றான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் வரும் காட்சிகளில் சூர்யாவின் பெருமுயற்சி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தின் மேக்கிங் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.>மாற்றான் படத்தின் டிரெய்லர் வெளியிட்டபோது பேசிய கே.வி.ஆனந்த் ”நான் ஷங்கர் சாருடன் விமானத்தில் வரும்போது, ஒட்டிப்பிறந்த இருவரைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தேன். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன்” எனக் கூறினார். ஆனால் மாற்றான் படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரங்கள் 2003-ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர்களான ஃபெரெல்லி பிரதர்ஸ் எனப்படும் இரட்டையர்களால் இயக்கப்பட்ட ‘ஸ்டக் ஆன் யூ’ என்ற படத்தின் கதாபாத்திரங்களை போலவே காட்சியளிக்கிறது.

குழந்தைகளை அனாதையாக்கும் பெற்றோருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை, ஜூலை 16- குழந்தைகளை ஆபத்தான வகையில், அனாதையாக விட்டுச் செல்வது கொலைக்கு சமமானது. இதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்,''
 என, மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மதுரை அவனியாபுரம் வல்லானந்தபுரத்தில் நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது முட்புதருக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, தொப்புள் கொடியுடன், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின், காவல்துறையினர் மீட்டு, 108' ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

Tamilnadu சரக்கு வாங்கனால் பிரியாணி இலவசம்

கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர் மது பான விற்பனையாளர்.

ஆடி மாதத்தில், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால், ஆடி மாதத்தில் ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, "டல்' அடிக்கும். எனவே இம்மாதத்தில், வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, ஆடித் தள்ளுபடி விற்பனையை, வர்த்தகர்கள் அறிமுகம் செய்தனர்.
ஜவுளி கடைகளில் துவக்கம்:ஆடித் தள்ளுபடி விற்பனை, முதலில் ஜவுளிக் கடைகளில் துவங்கியது. துணி வகைகளுக்கு, ஐந்து முதல், 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்து, வியாபாரத்தில் அதிரடியைப் புகுத்தி வருகின்றனர்.

வயதான தம்பதியை மலம் சாப்பிட வைத்த பஞ்சாயத்தார்

லதேகர்:பில்லி, சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி, வயதான தம்பதியை மலத்தை சாப்பிட வைத்ததோடு, சிறுநீரையும் குடிக்க வைத்த சம்பவம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டம் புரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் லக்ரா, 65. இவரது மனைவி கொலஸ்டினா, 60. இவர்கள் பில்லி, சூனியம் செய்ததாகவும், அதனால், கிராமத்தில் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீர் திடீரென இறந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கடந்த 8ம் தேதி, இந்த வயதான தம்பதியர், கிராம பஞ்சாயத்தார் முன் நிறுத்தப்பட்டனர்.
"தாங்கள் பில்லி, சூனிய வேலைகளில் ஈடுபடவில்லை' என, தம்பதியர் மறுத்தும், அதை ஏற்க, கிராம பஞ்சாயத்தார் மறுத்து விட்டனர். மலத்தை சாப்பிடுவதோடு, சிறுநீரையும் குடிக்க வேண்டும் என, தண்டனை விதித்தனர். கட்டாயப்படுத்தி அவர்களை மலத்தை சாப்பிட வைத்தனர் மற்றும் சிறுநீரை குடிக்க வைத்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இத்தகவலை, லதேகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிரந்தி குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை. திருமணம்? விற்கப்படுவது?

மூணாறு:கேரளாவில் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, இளம் பெண்கள் கொத்தடிமையாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதும், திருமணம் என்ற பெயரில் விற்கப்படுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வறுமையால், குழந்தைகள் படிப்பை தொடர முடியவில்லை. வண்டிபெரியார் பகுதியில் சீருடை வாங்க வசதியில்லாததால், பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இதற்கு உதாரணம். வேலை தேடி, ஏராளமானோர் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கொத்தடிமை:தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பாம்பனார், ஏலப்பாறை, வண்டிபெரியார் பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து ஏஜன்ட்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தினருக்கு பண ஆசை காட்டி, பெண்களை, "வீட்டு வேலைக்கு' என, வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். பீர்மேடு தாலுகாவில் கடந்த ஆறு மாதங்களில் 12 க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோல அனுப்பப்பட்டுள்ளனர். "மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்; மாணவிகளாக இருந்தால் தொடர்ந்து படிக்கலாம்' எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். இதற்காக பெண்களின் பெற்றோருக்கு, 5000 ரூபாய் வரை கொடுக்கின்றனர். இதுபோல பல பெண்கள், தமிழக வீடுகளில் வேலைக்கு உள்ளனர். இதற்காக, ஏஜன்ட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.

திங்கள், 16 ஜூலை, 2012

விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸிக்கெல்லாம் ஜெய்ராம் ரமேஷா பணம் கொடுப்பார்?

ஜெயலலிதா ஆவேசம்: பன்னீர்செல்வத்தை ஃபாலோ பண்ணினாரா ஜெய்ராம் ரமேஷ்?

Viruvirupu,
“தமிழக குடிநீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்யவில்லை என்பதால், அடுத்த கட்ட நிதி ஒதுக்க முடியாது” என மத்திய அரசு கை விரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டில் இருந்து டில்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி ஏற்கனவே ரூ.236 கோடியே 59 லட்சத்தை தமிழக அரசு செலவிடவில்லை. எனவே தற்போது ஒதுக்க வேண்டிய தவணைத் தொகை ரூ.138.58 கோடியை ஒதுக்க இயலாது. செலவிடப்படாமல் உள்ள தொகையை செலவிட்ட பின்னரே அடுத்த கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு கொடநாட்டில் இருந்து ஆட்சி புரியும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “தமிழகத்துக்கு 2012 மார்ச் மற்றும் ஏப்ரல் வரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.168.77 கோடி. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.87.45 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. அதாவது, கிடைத்த நிதியில் பாதியளவுக்கு மேலாக செலவு செய்திருக்கிறோம்.

பில்லா 2 - என்ன சொல்றாங்க ஜனங்க...?


Billa 2 Public Opinion
அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன.
அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள்.
படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன.
அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை.

Obama:அன்னிய முதலீட்டை இந்தியா தடை செய்யக்கூடாது:

வாஷிங்டன்:நேரடி அன்னிய முதலீட்டை, இந்தியா தடை செய்யக்கூடாது என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தியா குறித்து, அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா நேரடி அன்னிய முதலீட்டை தடை செய்கிறது. இதனால், இந்தியாவில், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவதாக, அமெரிக்க வர்த்தகர்கள் என்னிடம் கவலை தெரிவித்துள்ளனர்.