vijay - chennai,இந்தியா
வரவேற்க தக்க செய்தி..... ராகுல் காந்தியை முன்நிறுத்தினால் 2014 ல் ஆட்சி மாற்றம் நிச்சயம், மிக்க மகிழ்ச்சி.....
புதுடில்லி: ""காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், மிக முக்கிய பொறுப்பை
ஏற்றுக் கொள்ள நான் தயார்.
ஆனால், நான் முக்கிய பொறுப்பை, எப்போது ஏற்றுக்
கொள்ள வேண்டும்; கட்சியில் தீவிர பணியை எப்போது செய்ய வேண்டும் என்பதை,
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தான் முடிவு செய்ய
வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார். இதனால்,
விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்றும், அதில், கேபினட்
அமைச்சர் பதவி ராகுலுக்கு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, விரைவில் கட்சியிலும், ஆட்சியிலும்,
முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, சமீப நாட்களாக செய்திகள் வெளியாகி
வந்தன. இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், சல்மான்
குர்ஷித் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு ஹமீத் அன்சாரி வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில், நேற்று முன் தினம் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சோனியா, "கட்சியிலும், ஆட்சியிலும், முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, ராகுல் தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.பரபரப்பு இந்தச் சூழலில், ஜனாதிபதி தேர்தலில் நேற்று ஓட்டு போட வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலிடம், நிருபர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், ""காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், மிக முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் தயார். ஆனால், நான் முக்கிய பொறுப்பை எப்போது ஏற்றுக் கொள்ள வேண்டும்; கட்சியில் தீவிர பணியை எப்போது செய்ய வேண்டும் என்பதை, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார். ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில், ராகுல் இவ்வாறு கூறியது, எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வரவேற்பு: "முக்கிய பொறுப்பை ஏற்கத் தயார்' என, ராகுல் அறிவித்ததை, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராகுல் மிக முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். அது வரவேற்கத்தக்க நடவடிக்கையே. ஆட்சியிலும், கட்சியிலும் ராகுல் என்ன பொறுப்பை ஏற்றுக் கொள்வது என்பது குறித்து, அவரும், கட்சித் தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், வீரப்ப மொய்லி, கி÷ஷார் சந்திரதேவ் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும், ராகுலின் முடிவை வரவேற்றுள்ளனர். "ஆர்வமிக்க, துடிப்புடன் செயல்படக்கூடிய இளம் தலைவரான ராகுலின் பங்களிப்பு, கட்சிக்கும், மத்திய அரசுக்கும் அவசியம்' என்றும் கூறியுள்ளனர். கேபினட் பதவி: ஜனாதிபதி தேர்தலுக்காக பல விஷயங்களை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். சிந்தாமல், சிதறாமல் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அவ்வாறு பெற்று முடித்த பின், பல விஷயங்களை கையில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் கிளம்பியுள்ளது. வெகு விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில், ராகுலும் கேபினட் அமைச்சராகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக