வியாழன், 19 ஜூலை, 2012

காமவெறி பிடித்த டாக்டர்களால் சீரழிக்கப்பட்ட கேரள நர்ஸ்

டாக்டர்களிடம் சிக்கி 2 நாட்கள் பலாத்கார சித்திரவதைக்குள்ளான கேரள நர்ஸ்!

சென்னை: கேரளாவைச் சேர்ந்த இரண்டு ஹோமியோபதி டாக்டர்களால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 19 வயது கேரள நர்ஸ், அந்த டாக்டர்களிடம் 2 நாட்கள் சிக்கித் தவித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை தனது தாய்க்குத் தெரியாது என்றும் தெரிந்தால் அவர் செத்துப் போய் விடுவார் என்றும் இந்த நர்ஸ் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அந்த நர்ஸுக்கு 19 வயதாகிறது. நர்சிங் படித்தவர். படிப்பு தொடர்பான பயிற்சிக்காக திருச்சியில் உள்ள கேரள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். இதன் கிளை, சென்னையில் உள்ளது.
கடந்த 12ம் தேதி திருச்சி வந்த அவர் பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னைக்கு வந்தபோதுதான் அவர் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டார்.

ஆலப்புழையைச் சேர்ந்த இவரை பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்ததாக கேரள டாக்டர்கள், ஸ்ரீஜத் மற்றும் அஜில்குமார் ஆகியோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் சந்தித்த கொடூரம் குறித்து நர்ஸ் கூறியுள்ளதாவது:
நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். எனது தந்தை கட்டிடம் கட்டும் தொழிலாளி. தாயாரும் வீட்டு வேலை செய்கிறார். எனக்கு ஒரு அக்காளும், தம்பியும் உள்ளனர்.
கடந்த மாதம் 12-ந் தேதி பயிற்சிக்காக முதலில் திருச்சி வந்தேன். 7-ந் தேதி டாக்டர் அஜில்குமார் சென்னைக்கு ரயிலில் அழைத்து வந்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அஜில்குமாரும், நானும் ஆட்டோவில் ஏறி, அவர் தங்கி உள்ள விருந்தினர் இல்லம் சென்றோம்.
விருந்தினர் இல்லம் சென்றதும் முதலில் என்னை குளிக்கச் சொன்னார். நான் குளித்துவிட்டு வந்தேன். வெளியில் வந்ததும்தான் எனக்கு அந்த கொடுமை நிகழ்ந்தது.
முதலில் என்னை டாக்டர் அஜில்குமார் பலவந்தப்படுத்தினார். நான் மறுக்கவே, கத்தியை காட்டி, என்னை கொன்றுவிடுவதாக சொன்னார். ஆணுறை அணிந்துதான் இந்த தவறை செய்தார். முதல் அனுபவம் என்பதால் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் டாக்டர் ஸ்ரீஜத்தை கூப்பிட்டார். சற்று நேரத்தில் அவரும் வந்து என்னை சீரழித்தார். இப்படியே 2 நாட்கள் என்னை இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தினர்.
இதனால் என்னால் நடக்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டனர். எனது தாயாருக்கு இது தெரியாது. தெரிந்தால் அவர் செத்துப் போய் விடுவார் என்றார் அந்த நர்ஸ்.
இந்த இரு காமவெறி பிடித்த டாக்டர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக