புதன், 18 ஜூலை, 2012

Prof.Natarajan மனைவியின் இதயத்தை குத்திக் கிழித்த கொடூரம்

சென்னை: தனது மனைவியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி பேராசிரியர் நடராஜன், தனது மனைவியை மிகக் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
மனைவி விஜயலட்சுமியின் இதயத்தை அவர் நான்கு முறை குத்திக் கிழித்துள்ளார். உடல் முழுக்க மொத்தம் 11 முறை அவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.
சென்னை படப்பையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நடராஜன், தனது மனைவி விஜயலட்சுமியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தனது கள்ளக்காதல் லீலைகளை மனைவி கண்டுபிடித்து விட்டதால் அவமானமடைந்து இந்த ஈனச் செயலை செய்துள்ளார் நடராஜன்.
மனைவியை நைசாக வரவழைத்து கொலை செய்து உடலை கால்வாயில் போட்டுப் புதைத்து பாறாங்கல்லையும் தூக்கி வைத்து மூடி விட்டார்
நடராஜன். அழுகிய நிலையில் உடலைப் போலீஸார் மீட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனையின்போது விஜயலட்சுமியை எப்படியெல்லாம் நடராஜன் கொலை செய்தார் என்பதை டாக்டர்கள் உதவியுடன் போலீஸார் கண்டுபிடித்து அதிர்ந்து விட்டனர்.
வோட்கா கொடுத்தார்
சம்பவத்தன்று இரவு வோட்கா மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து அதை மனைவிக்குக் கொடுத்துள்ளார் நடராஜன். அதன் பின்னத் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாய்க்குக் கூட்டிப் போனார். அங்கு கத்தியை எடுத்து விஜயலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்.
மது கொடுக்கப்பட்ட காரணத்தால் எதிர்த்துப் போராட முடியாத நிலையில் விஜயலட்சுமி பரிதாப சூழலில் இருந்துள்ளார். இதனால் கணவர் கத்தியால் குத்தியதை அவரால் தடுக்கக் கூட முடியவில்லை. கீழே தள்ளி சரமாரியாக குத்திய நடராஜன், மனைவியின் நெஞ்சிலேயே பலமுறை குத்தியுள்ளார். இதில் விஜயலட்சுமி உயிரிழந்து போனார்.
11 இடங்களில்
உடல் முழுக்க மொத்தம் 11 இடங்களில் கொடூரமாக் குத்தி கொலை செய்துள்ளார் நடராஜன். உயிருக்காக துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார் விஜயலட்சுமி. கழுத்திலும், மார்பிலும் கத்திக் குத்துக் காயங்கள் நிறைய காணப்பட்டன. அதிலும் விஜயலட்சுமியின் இதயப் பகுதியில்தான் நான்கு முறை குத்தியுள்ளார். இதில் இதயமே சேதமடைந்து உருக்குலைந்து போய் விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கேட்கும்போதே நெஞ்சை அடைக்கும் இந்த படு பாதகச் செயலை, தன்னை நம்பி வந்த மனைவிக்கு எப்படித்தான் செய்யத் துணிந்ததோ இந்த மனிதரால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக