நாகர்கோவில் சென்னையை கலக்கிய கார் கொள்ளையன் குமரியில் பிடிபட்டான்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் திருட்டு கும்பல் போலீசில்
பிடிபட்டது. அந்த கும்பல் கொடுத்த தகவலின்படி நாகர்கோவில் ராமன்புதூர்
பார்க் ரோட்டை சேர்ந்த பொன்னையாதாஸ் என்பவருக்கு கார் திருட்டில் தொடர்பு
இருப்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் உள்ள பல காவல் நிலையங்களில்
பொன்னையாதாஸ் மீது பல்வேறு கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து சென்னை போலீசார் பொன்னையாதாசை தேடி கடந்த சில நாட்களுக்கு
முன்பு ராமன்புதூருக்கு வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.
போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே பொன்னையாதாஸ் இருப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ், ஏட்டுக்கள் மதுசூதனன், ஜோசப் டேனியல், ஆகியோர் சென்று பொன்னையா தாசை மடக்கினர். அப்போது பொன்னையா தாஸ் பைக்கை போட்டு விட்டு தப்பி செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து வடசேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக