புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து,
கேள்வி எழுப்பி, தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு ஏற்றதா என்பதுடன்,
அதன் தகுதி உள்ளிட்ட, அனைத்து அம்சங்களையும் விசாரிக்கப் போவதாக, சுப்ரீம்
கோர்ட் தெரிவித்துள்ளது.
தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா பதவிக் காலத்தில், வழங்கப்பட்ட, 122 "2ஜி ஸ்பெக்ட்ரம்' உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. "ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட இயற்கை வளங்களை, ஏல முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது."இந்த உத்தரவு, மற்ற இயற்கை வளங்களுக்கும் பொருந்துமா? இந்த உத்தரவு, அரசின் கொள்கை முடிவுகளை பாதிக்கும் வகையில் உள்ளதே' என்ற கேள்விகளுடன், ஜனாதிபதி பரிந்துரையுடன், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தது.
இதுகுறித்து, கடந்த ஐந்து நாட்களாக, வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது. தலைமை நீதிபதி, கபாடியா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, "அரசியல் சாசன பெஞ்ச்' முன், இந்த வழக்கு நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில், வெறும் விசாரணைக்கு உகந்த அம்சத்தை மட்டும் பரிசீலிக்காமல், அதன் தகுதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விசாரித்து, அனைத்துக்கும் சேர்த்து உத்தரவிடப்படும். தகுதி உள்ளிட்ட அம்சங்களை முன் வைத்து, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, தன் வாதத்தை நாளை (இன்று) துவங்கலாம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக