செவ்வாய், 17 ஜூலை, 2012

Dubai தமிழக மீனவர் சுட்டுக் கொலை அமெரிக்க தூதர் வருத்தம் தெரிவித்தார்

டெல்லி: துபாயில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பெளல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துபாயில் தமிழக மீனவர்கள் மீதான அமெரிக்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயை அமெரிக்க தூதர் நான்சி பெளல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது துபாய் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அபு தாபியில் உள்ள தூதரகமும் ஜபேல் அலியில் உள்ள தற்காலிக தூதரும் முழு ஒத்துழைப்பும் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக