சனி, 21 ஜூலை, 2012

அமெரிக்க நீதிமன்றம்: நித்தியானந்தா நன்கொடையை திருப்பி செலுத்த வேண்டும்

நித்யானந்தா வழக்கில் அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளை நிதி வசூல் செய்து வந்தது. இந்நிலையில் பாபட்லால் சாவ்லா என்பவர் நித்யானந்தாவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது அறக்கட்டளையின் தலைவர் நித்யானந்தாதான் என்பதற்கான கையெழுத்து ஆவணமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் நித்யானந்தா அறக்கட்டளை குற்றம் புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிதாக வழங்கப்பட்ட கோர்ட் தீர்ப்பை அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.
மேலும் நித்திக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக