எந்த இடத்தில் எதற்காக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரிவதில்லை. அந்த குறையை போக்கி, போக்குவரத்து நெரிசல் பகுதியை வாகன ஓட்டிகள் அறிந்து மாற்றுப் பாதையில் செல்லும் புதிய வசதியை ஏற்படுத்த சென்னை நகர போக்குவரத்து போலீசார் திட்டம் தயாரித்துள்ளனர்.
அதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, சென்னையில் எந்தெந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது என்று செல்போனிலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றபடி உங்கள் பயண பாதையை மாற்றி கொள்ள முடியும்.
சென்னை நகரில் 370 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதில் முக்கிய 100 சிக்னல்களில் காமிராகக்ள் பொருத்தப்பட உள்ளன. சிக்னல்களில் உள்ள காமிராக்களில் பதிவாகும் காட்சிகள், செல்போன்களுக்கு கிடைக்கும் வகையில், செயற்கைகோள் மூலம் ஒளிபரப்பப்படும்.
நீங்கள் வீட்டில் இருந்து வாகனத்தில் கிளம்பும்போதே, உங்கள் செல்போனில் சென்னை போக்குவரத்து நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை துல்லியமாக அடையாளம் கண்டறியவும் இது போலீசாருக்கு மிகவும் பயன்படும்.
ஏனெனில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எண் பலகையுடன் தானாகவே படம் பிடித்து விடும். எனவே, இனிமேல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் அபராதம் உள்ளிட்ட தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக