நித்தியானந்தாவின் வயிற்றில் புளியைக் கரைத்த சம்பவம் எது? "கலிபோர்னியா நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைத்தால் இளைய ஆதீனம் பதவியில் இருந்து தூக்கிடுவோம்ல" என்று அதிரடியாக அருணகிரிநாதர் கூறியதுதான் காரணம்!
அருணகிரிநாதரின் இந்த அதிரடிப் பேட்டியில் ஆடிப்போன நித்தியானந்தா கடந்த வாரம் கொடைக்கானலில் இருந்து மலை இறங்கி அடிப்பொடிகளுடன் திடீரென மதுரைக்கு ஓடிப்போயிருக்கிறார். இரவு நேரத்தில் ஆதீனத்துக்கு வந்து சேர்ந்த நித்தியானந்தாவால் உடனடியாக அருணகிரிநாதரை சந்திக்க முடியவில்லை. காலையிலும் உடனே சந்திக்க முடியாமல் இருப்புக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். ஒருவழியாக காலை 11 மணிக்கு அருணகிரிநாதரை சந்தித்துப் பேசிய நித்தி, பத்திரிகைகளில் கொடுத்த பேட்டி எல்லாம் உண்மையா என்று கேட்க, பெரிய ஆதீனமோ, ஆமா.. இல்லை.." என்று டகால்டியடித்திருக்கிறார்.
ஆனால் ஜகஜால நித்தியானந்தாவோ, அருணகிரிநாதரிடம் பல மணிநேரம் பேசி அவரை கன்வீன்ஸ் செய்திருக்கிறாராம்.. சரி எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு கொடைக்கானல் மலைக்குப் போன நித்தியானந்தாவுக்கு செம ஷாக் காத்திருந்தது.
மீண்டும் அருணகிரிநாதர் பேட்டி... நித்தியானந்தா மதுரை வந்தது, ஆலோசனை நடத்தியது என எல்லாமே கொட்டி வைக்க தேள் கொட்டினார் போல குதித்திருக்கிறார் நித்தியானந்தா. இதனால் அடிப்பொடிகளை கடந்த 15ம் தேதி மதுரைக்கு அனுப்பிய நித்தியானந்தா அருணகிரிநாதரை அள்ளிப் போட்டுக் கொண்டு கொடைக்கானலுக்கு பறந்திருக்கிறது.
அதாவது கொடைக்கானலில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நித்தியானந்தா கோஷ்டி வீட்டுக் காவலில் வைத்துவிட்டது! இதைப் புரிந்து கொண்ட ஆதீனம் அருணகிரிநாதர், அய்யா என்னால தாங்க முடியாது.. இங்கே ரொம்ப குளிருது என்று சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
என்னதான் அருணகிரிநாதர் மதுரைக்கு திரும்ப ஓடிவந்து விட்டாலும் எப்ப வேண்டுமானாலும் கொடைக்கானலுக்கு தூக்கிச் செல்ல காத்திருக்கிறாராம் நித்தியானந்தா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக