வெள்ளி, 20 ஜூலை, 2012

ராஜேஷ் கன்னாவின் வீட்டை உரிமை கோரும் அனிதா

Rajesh Khanna S Live In Partner Sen ராஜேஷ் கன்னாவின் 'ஆசிர்வாத்' எனக்கே.. உடன் வசித்த பெண் நோட்டீஸ்!

மும்பை: மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, மும்பையில் வசித்து வந்த ஆசிர்வாத் வீடு தனக்கே சொந்தம் என்று கடைசிக்காலத்தி்ல் அவருடன் வசித்து வந்த பெண்மணியான அனிதா அத்வானி உரிமை கோரியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிம்பிள் கபாடியாதான் ராஜேஷ் கன்னாவின் மனைவி. இருப்பினும் இவர்களது பந்தம் 1984ம் ஆண்டுடன் முடிந்து போய் விட்டது. அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அப்படியே பிரிந்து போய் விட்டனர். அதன் பின்னர் ராஜேஷ் கன்னாவுடன் கடைசிக்காலத்தில் அவருடைய வீட்டில் அனிதா அத்வானி சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் பார்ட்னர்களாக வசித்து வந்தனர்.

ராஜேஷ் கன்னா வசித்து வந்த வீடுதான் ஆசிர்வாத். இது மறைந்த நடிகர் ராஜேந்திர குமாருடையதாகும். அவரிடமிருந்து இந்த வீட்டை வாங்கினார் ராஜேஷ் கன்னா. முதலில் இந்த வீட்டின் பெயர் டிம்பிள் என்பது சுவாரஸ்யமான ஆச்சரியமாகும். பிறகு வீட்டின் பெயரை ஆசிர்வாத் என்று மாற்றினார் ராஜேஷ் கன்னா. இந்த வீட்டிலிருந்துதான் திரையுலகில் பெரும் சாதனைகளை அவர் படைத்தார். தொடர்ந்து 15 சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அசைக்க முடியாத இடத்திற்குச் சென்றார்.
இந்த வீட்டைத்தான் தற்போது உரிமை கொண்டாடியுள்ளார் அனிதா. இதுதொடர்பாக ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினருக்கு அவர் வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார். யாரும் தனது அனுமதியி்லலாமல் வீட்டுக்குள் செல்லக் கூடாது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜேஷ் கன்னா மறைந்த தினத்தன்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே இந்த வீட்டிலிருந்து அனிதாவை வெளியேற்ற ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்ஏறு வருகின்றனராம். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக ராஜேஷ் கன்னாவுடன் வசித்து வந்த அனிதா அதை எதிர்த்து வருகிறார். இது தொடர்பாகவே அவர் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.
ராஜேஷ் கன்னாவின் இறுதிச் சடங்கு தொடங்கியபோதும் கூட பிரச்சினை வெடித்ததாம். ராஜேஷ் கன்னாவின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற அனிதா முயன்றாராம். அதைப் பார்த்து விட்ட ராஜேஷ் கன்னாவின் மருமகனும், நடிகருமான அக்ஷய் குமார், அனிதாவை வண்டியிலிருந்து இறங்குமாறு சத்தம் போட்டாராம்.
மேலும் ராஜேஷ் கன்னாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் கூட அனிதாவை அண்ட விடாமல் எட்டியே வைத்திருந்தனராம். டிம்பிள் கபாடியா, அக்ஷய் குமார், மகள்கள் டிவிங்கிள் கன்னா, ரிங்கி ஆகியோர்தான் ராஜேஷ் கன்னாவைச் சுற்றிலும் இருந்தனராம்.
இந்த நிலையில் வீடு விவகாரம் குறித்து அனிதா கூறுகையில், நான் ஆசிர்வாத் வீட்டில் கடந்த 10 வருடமாக ராஜேஷ் கன்னாவுடன் வசித்து வந்தேன். தனக்கு உடல் நலம் குன்றி, ஞாபக சக்தி குறைந்த போதுதான் என்னை ராஜேஷ் கன்னாவால் அடையாளம் காண முடியாமல் போனது.
ஒரு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் பேசக் கூட விரும்பவில்லை ராஜேஷ் கன்னா. ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதைப் பயன்படுத்தி என்னை அவரிடமிருந்து விலக்கி விட்டனர். தனிமைப்படுத்தி விட்டனர். இதனால்தான் இப்போது நான் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அவரும் இப்போது இல்லை, நான் எங்கு போவது என்றும் தெரியவில்லை. எல்லாமே போய் விட்டதாக உணர்கிறேன். எனவேதான் அவர் வாழ்ந்த இந்த வீட்டையாவது தக்க வைத்துக் கொள்ள முயல்கிறேன் என்றார் அனிதா.
ராஜேஷ் கன்னாவின் வீடு உரிமை கோரும் அனிதா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக