வாஷிங்டன்:நேரடி அன்னிய முதலீட்டை, இந்தியா தடை செய்யக்கூடாது என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தியா
குறித்து, அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:சில்லறை
வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா நேரடி அன்னிய முதலீட்டை தடை
செய்கிறது. இதனால், இந்தியாவில், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்
குறைவதாக, அமெரிக்க வர்த்தகர்கள் என்னிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
நேரடி அன்னிய முதலீடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்தியாவின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது. தற்போதுள்ள உலகப் பொருளாதாரச் சூழலில், இந்தியா மற்றொரு பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். எனினும், மற்றொரு நாட்டின் பொருளாதாரத் திட்டத்தை, நாங்கள் வரையறை செய்ய முடியாது. இந்தியா தான் முடிவு செயய வேண்டும். இந்தியா, ஏற்கனவே கொண்டு வந்த பொருளாதாரத் திட்டத்தினால், பல லட்சம் பேர், வறுமையிலிருந்து நடுத்தர வர்க்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேச பொருளாதாரத்துக்கு, இந்திய பொருளாதாரத் திட்டம் முன்னோடியாக இருந்துள்ளது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவடைய வேண்டும் என விரும்புகிறேன்.காஷ்மீர் பிரச்னைக்கு, வெளியே இருந்து தீர்வு காண முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் தான், பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஒபாமா கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக