வியாழன், 19 ஜூலை, 2012

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த Original Super Star

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா! இவர்தான் உண்மையில் ஒரு ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் எனலாம்.மீதி  அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் சிரஞ்சீவி ராஜ்குமார் போன்ற எல்லோருமே ஒரு விதத்தில் ராஜேஷ் கன்னாவை காப்பி அடிக்க முயற்சி செய்தவர்களே . ஆனாலும் கூட எந்த இடத்திலும் பிற நடிகர்களை தரக்குறைவாக இவர் நினைத்ததே இல்லை.அமிதாப் கூட இவரோடு சஞ்சீர் என்ற படத்தில் நடித்துத்தான் துரதிஷ்ட நடிகன் என்ற அவப்பெயரை போக்க முடிந்ததது 

இந்தியத் திரையுலகம் எத்தனையோ சாதனை நடிகர்களைக் கண்டுள்ளது. அவர்களுக்கு நிகரான நடிகைகளையும் கண்டுள்ளது. ஆனால் ராஜேஷ் கன்னாவுக்கு நிகரான ஒருவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய பெரிய ஸ்டார்கள் வந்தார்கள் இருந்தார்கள் என்றாலும் முதல் முத்திரையைப் பதித்த முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மட்டுமே.
1965ல் பாலிவுட்டில் நடிக்கப் புகுந்த ராஜேஷ் கன்னா, ஆரம்பத்தில் நடித்த 3 படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் யாருடைய பார்வையிலும் அவர் விழவில்லை. ஆனால் ஆராதனாதான் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படத் தொடங்கினார். பெண் ரசிகர்கள் இவருக்குப் போல எவரும் இல்லை. எங்கு போனாலும் துரத்தித் துரத்தி இவரை ரசித்துப் பார்த்தார்கள். இவரது காரைக் கூட விடாமல் துரத்தித் துரத்தி முத்தமிட்டு மகிழ்ந்தனர். கார் டயரில் ஒட்டியிருந்த மண்ணைக் கூட துடைத்து எடுத்துச் சென்றனர்.

ராஜேஷ் கன்னாவின் திரையுலக வாழ்க்கையே ஒரு சினிமாப் படம் போலத்தான் இருந்தது. மும்பையில் கஷ்டமான நிலையில் இருந்து வந்த கன்னா, பிலிம்பேர் இதழ் நடத்திய ஒரு திறமைப் போட்டியில் கலந்து கொண்டார். 1000 பேர் கலந்து கொண்ட அப்போட்டியில் வெற்றி பெற்றார்.
அதன் பிறகுதான் அவருக்கு நடிக்க வாய்ரப்பு கிடைத்தது. 1966ல் ஆக்ரி காட்டில் நடித்தார். பின்னர் காமோஷியில் நடித்தார். அதன் பிறகுதான் வரலாறு படைத்த ஆராதனா 1969ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பாலிவுட்டைப் போலவே சென்னையிலும் தமிழகத்திலும் ஓடி பெரும் வசூல் மற்றும் சாதனை படைத்த படமாகும். அப்படத்தின் பாடல்கள் இன்று வரை புகழ் பெற்றவை. அக்காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆராதனா பாடல்கள்தான்.
ஆராதனா படத்திற்குப் பிறகுதான் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டார் ராஜேஷ் கன்னா. இந்தியத் திரையுலகிலேயே சூப்பர்ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.
அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும் இவர்தான். இந்த நிமிடம் வரை இந்த சாதனையை இதுவரை இந்தியாவில் எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. முறியடிக்க முடியவில்லை.
காதி பதாங், சபர், இத்திபாக், ஆன் மிலோ சஜ்னா, ஹாத்தி மேரே சாத்தி ஆகியைவ ராஜேஷ் கன்னாவின் சூப்பர் ஸ்டார் பெருமையை மேலும் மேலும் வலுப்படுத்திய மெகா ஹிட் படங்களாகும்.
அதேபோல ராஜேஷ் கன்னாவுடன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஆனந்த் படமும் இன்று வரை ராஜேஷ் கன்னாவின் மணிமகுடப் படங்களில் முக்கியமானதாக இருக்கிறது.
ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூகர், ஆஷா பரேக், டிம்பிள் கபாடியா ஆகியோர் இணைந்து படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
நிச்சயம், ராஜேஷ் கன்னாவின் மரணம்,பாலிவுட்டுக்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகுக்கே பெரும் இழப்புதான்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக