வெள்ளி, 20 ஜூலை, 2012

தலைகவிழ்ந்த சோகம்? செங்கோட்டையன் கடைசி வரிசையில்

தூக்கியடிக்கப்பட்ட சோகம் தலைகவிழ்ந்தபடியே செங்கோட்டையன்தமிழக வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியையும் பறித்தார் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா. இதுவரை ஜெயலலிதாவுக்கு அருகிலேயே நிற்பார்.  கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும் நிற்பார்கள்.   செங்கோட்டையனுக்கு  கட்சியில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்தது.
அவர் பதவியில் இருந்து
தூக்கியடிக்கப்பட்டதும் கடைசி வரிசையில் நிற்கிறார்.
கூட்டங்களில் தலைகவிழ்ந்தபடியே நிற்கிறார்.  வழக்கத்தை விட ஜெயலலிதா வரும் போது அதிகமாக குனிந்து வணங்குகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக