வெள்ளி, 20 ஜூலை, 2012

Nazca Lines வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டவை?

Nazca lines were unknown until 1920s. They were first spotted when commercial aircraft started to fly over the region within the late 1920s. Some of the passengers reported seeing some sort of pictures on the desert surface below. Some mentioned that it looked like aircraft runways. Even after that they remained hidden for another decade. Paul Kosok, an American scientist, was the very first person who really started to spent some time on the rumors. In 1939 he came to Peru to work on this. Though he started his work to investigate if these lines were part of an irrigation system. They weren’t. However, by pure chance, it just happened to be the winter solstice and he noticed that the sun set exactly at the end of one of these long lines. Immediately he realized that this desert is the biggest mystery of the world.
நாஸ்கா கோடுகள் (The Nazca Lines )
இன்றைய மர்மமும் தென்னமெரிக்க நாடான பெரு பற்றியதுதான். பெருவின் தலைநகர் லிமாவின் தெற்கே 400 கிமி தொலைவில் உள்ள பாலைவனங்கள் உலகின் மிகவும் வினோதமான குறியீடுகளைக் கொண்டுள்ளது. “ஜியோக்ளைப்” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பூமியின் பரப்பில் கோடுகள் அமைத்தோ செதுக்கியோ அல்லது கற்களை குவித்தோ, பெயர்த்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒருவிதமான படம் அல்லது குறியிடுகளுக்கு ”ஜியோக்ளைப்” என்று பெயர்.
இதற்குத் தமிழ் வார்த்தை தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். எளிதாகப் புரிவதற்காக ஒரு உதாரணத்திற்கு சொன்னால் திருச்சி மலைக் கோட்டை பாறையில் கல்லால் அல்லது ஆணியால் தேய்த்துத் தேய்த்து மிகப் பெரிதாக “ I Love Divya" என்று பொரித்து வைக்கிறார்களே அதுவும் ஒரு விதமான ஜியோக்ளைப்தான் :)


உலகெங்கிலும் நிறைய இடங்களில் ஜியோக்ளைப்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பொதுவாக பாறைகளை சீராக வைத்து அல்லது அகற்றி, குழிகள் தோண்டி அமைக்கப்பட்டவை என்று.இவற்றுள் பெருவில் நாஸ்கா என்ற இடத்தில் ”நாஸ்கா கோடுகள்” என்றழைக்கப்படும் ஜியோக்ளைப்தான் அல்டிமேட் என்று சொன்னால் மிகையில்லை.அந்த நாஸ்கா கோடுகளில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா?ஏதோ ராட்சதர்களால் பூமியில் கிழிக்கப்பட்ட கோடுகள் போல குறுக்கும் நெடுக்குமாக , ஒன்றின் மீது ஒன்றாக என்று ஏகப்பட்ட கோடுகள் சேர்ந்து “நாஸ்கா கோடுகள் “ என்று அழைக்கப் படுகிறது.பல விதமான கணித வடிவங்கள், விலங்குகள்,பறவைகள்,பூக்கள் என்று 15000 க்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
சுமார் 1 அடி ஆழக் கோடுகள். 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்தக் கோடுகள் விரிகின்றன என்றால் அதன் ராட்சதத் தன்மையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.இங்கு வரையப்பட்டுள்ள உருவங்களில் சிலந்தி, நாய், தேன்சிட்டு, குரங்கு,திமிங்கலம்,பெலிக்கன் பறவை என எழுபதிற்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன,எல்லாமே ராட்சத உருவங்கள். இருப்பதிலேயே மிகப் பெரிய பெலிகன் பறவை உருவத்தின் நீளம் 800 அடிக்கும் மேல். உருவங்கள் தவிர காணப்படும் குறுக்கு நெடுக்குக் கோடுகளில் சில, பல கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.
குரங்கு
நாய்
தேன் சிட்டின் உருவம்(Humming Bird)
இந்த இடத்தில் உள்ள மண் மற்றும் கற்கள் இரும்புத்தாது அதிகம் உள்ள மண்ணுடன் கலந்தது.இது தட்பவெப்பத்தால் நாள்பட நாள்பட ஒரு கரு நிறத்திற்கு மாறி விடுகிறது.மேற்புறமுள்ள மண் கல்லை அப்புறப் படுத்தினால் உள்ளே வெளிரிய நிறத்திலுள்ள அடி மண் புலப்படும்.இப்படியாக மேற்பரப்பிலுள்ள மண் கற்களை ஒரு வடிவத்திற்கேற்ப அப்புறப்படுத்தினால் வானத்திலிருந்து பார்க்கும் போது கருப்புத் துணியில் வெளிர் நிறத்தில் வரையப்பட்ட சித்திரம் போல் தோற்றமளிக்கிறது. சொல்லப் போனால் முதலில் ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போதுதான் இந்த நாஸ்கா கோடுகளையும் அதில் புலப்படும் உருவங்களையும் மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள்.இந்தப் பகுதியில் மழையளவு உலகிலேயே மிகக் குறைவு என்பதாலும் பூமியிலுள்ல மண்ணைத் தூற்றி வாரும் அளவுக்கு பெரும் காற்று வீசாததும் இந்தக் கோடுகள் இன்னும் மறையாமல் , அழியாமல், மண்ணில் புதையாமல் கண்ணுக்குப் புலப்படக் காரணம்.
வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டவை, வேற்று கிரக விண்கலங்கள் தரையிரங்க வரையப்பட்ட விமான ஓடுதளம், பாலைவனத்தில் நீர் இருக்கும் இடங்களைச் சுட்டுவதற்காக குறிக்கப் பட்ட வரைபடங்கள், மிகப் பெரிய வானவியல் நாள்காட்டி ,அந்தக் கால நாஸ்காவில் வாழ்ந்த மக்களின் கலாசாரமற்றும் சடங்குகளில் பயன்படுத்தப் பட்டு வந்த உருவங்கள் என ஏகப்பட்ட ஊகங்களும் விளக்கங்களும்.
நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் படி கிமு 200 ஆண்டு முதல் கிபி 700 ஆம் ஆண்டு வரை கலாச்சாரத் தொடர்சியுடன் வரையப்பட்டுள்ள இந்த நாஸ்கா கோடுகள் அந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த நாஸ்கா மக்களின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கியிருக்கிறது என்பதற்கான சான்றுகள் புலனாகியுள்ளன. இருந்தும் இந்தக் கோடுகளை/ உருவங்களைத் தோற்றுவிக்கத் தேவைப்படும் ஆட்கள் காலம்,மனித உழைப்பு ஆகியவற்றை நினைக்கும் போது ஏதோ வாழ்வு,நம்பிக்கை அல்லது கலாசாரத்தை ஒட்டிய நிகழ்வுக்காக அல்லது அதைக் குறிக்கவே அரும்பாடு பட்டு இந்தக் கோட்டுருவங்களை உருவாக்கியுள்ளனர் என்பது மட்டும் புலனாகிறது. ஆனால் என்ன காரணம் என்பதை வெளிக்காட்டாமல் ஒரு மிகப் பெரிய புதிர் சித்திரம் போல பெருவின் விரிந்து கிடக்கும் நாஸ்கா கோடுகள் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மத்தின் மெளன சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

சிலந்தி உருவம் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்
மர்மங்கள் தொடரும்
அன்புடன்...ச.சங்கர்
கீழே உள்ள படத்தில் என்ன தெரிகிறது ? :-) 

 மண்டே மர்மங்கள் (5) - ச.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக