சனி, 21 ஜூலை, 2012

2 வயது குழந்தையிடம் கிட்னி திருடிய டாக்டர்



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தைக்கு விரலில் ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேசன் முடிந்து 4-வது நாளில் அந்த குழந்தை இறந்தது.  பரிசோதனையில் அக்குழந்தையின் கிட்னி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கிட்னி திருடப்பட்டதால்தான் குழந்தை இறந்து விட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். அத்து டன் குழந்தைக்கு ஆபரேசன் செய்த டாக்டர் பிரதீப் கோயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழந்தையின் தந்தை காஷ்யப் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து டாக்டர் கோயல் மற்றும் அவரது குழுவினர் மீது காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை டாக்டர் கோயல் மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக