சனி, 12 டிசம்பர், 2015

கடலூரில்-தன்னார்வலர்களை-தாக்கும்-பேரிடர்கள்-ஒரு-கதறல்-கடிதம்! சூறையாடும் சமூகவிரோதிகள் !

tamil.thehindu.com கிர்த்திகாதரண்:  கடலூரில் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பிய படங்கள். கடலூர் பற்றிய விஷயங்கள், அனுபவங்கள், நடப்பது என்ன? முதல்நாளில் இருந்தே குழுவினரோடு இருப்பதால் அனுபவங்கள், மனக்கசப்புகள், இயலாமை எல்லாம் வருத்த வடுக்களாக வலிக்கின்றன.
இத்தனை நிவாரணங்கள் இருந்தும் ஏன் இன்னும் ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலைமை? அனுபவங்களைப் பகிரலாமா?
ஒரு பக்கம் லாரிகள் களவு... மறுபக்கம் லாரிகளுக்கு பாதுகாப்பு; ஒரு பக்கம் நிவாரணம், மறுபக்கம் பசியில் தவிக்கும் மக்கள். இதற்கிடையிலும், நிற்காமல் நீள்கிறது கடலூர் செய்திகள்.

திருச்சி - மாணவர்களை சித்தரவதை செய்யும் ஆசிரியர்


மாணவர்கள் இருவரை பள்ளியின் ஆசிரியர் அடிக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. படிப்பியா... படிப்பியா... என இரண்டு மாணர்களை கயிற்றால் அடிக்கிறார். பின்னர் ஒருவர் காதை ஒருவர் பிடித்து உட்கார்ந்து எழுமாறு சொல்லிய ஆசிரியர், மாணவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து அவர்களை காலால் மிதிக்கிறார். இதனை சக மாணவர்கள் பார்த்து தங்களின் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரித்தபோது, திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.nakkheeran,in

மக்கள் தூங்கும்போது செம்பரப்பாக்க ஏரியை திறந்த குற்றவாளி யார் ? ஒருங்கிணைந்த எதிர்கட்சிகள் கோரிக்கை!

தமிழ்நாட்டின்  அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து  கோரிக்கை. செம்பரப்பாகம் எரியை திறந்து விட்டதை விசாரிக்க வேண்டும் . இந்த  கோரிக்கையை மத்திய அரசிடம் எழுப்ப முடிவு, 
இது ஒரு மனித பேரழிவாக எண்ணி துரித விசாரணையை தொடங்க வேண்டும் .
Tamil Nadu Opposition join forces, seek probe over water release
indianexpress.com :   Tamil Nadu’s Opposition parties on friday joined hands in seeking a probe over release of surplus waters from Chembarambakkam reservoir, with DMK chief Karunanidhi submitting a memorandum to Governor K Rosaiah, seeking an inquiry by a sitting High Court judge into the issue. Even as the state continued its relief work, Karunanidhi alleged that the devastating floods in Chennai was caused by the “neglectful, anti-people administration of the Jayalalithaa headed Tamil Nadu government”, resulting in the death of innocent people and damage to property. The crux of the opposition charge and also in a section of media, is that in the last week of November when Chennai witnessed moderate showers, the discharge volume from Chembarambakkam reservoir was trammeled.

2 ஆண்டுகளில் 268 சதுர கி.மீ காடுகளை உத்தராகண்ட் இழந்துள்ளது.

இயற்கை அழகிற்கு பெயர் போன உத்தராகண்ட் இமயமலையை ஒட்டி அமைந்துள்ள வட இந்திய மாநிலமாகும். மொத்தம் 24,240 சதுர கி.மீ வனப்பகுதியை பரப்பளவாக கொண்ட இம்மாநிலம் வளர்ச்சிப்பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 268 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளது. 1952, 1988-ம் ஆண்டு தேசிய வனக்கொள்கை அடிப்படையில், ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒருபகுதி மரங்கள் சூழப்பட்ட வனப்பகுதியாக இருக்க வேண்டும். முதல்முறையாக, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வாயிலாக காடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 12 மாநிலங்கள் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு விரைவில் நாடு முழுவதும் எடுக்கப்பட உள்ளது. கடந்த 1910-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் காடுகளின் பரப்பளவு குறித்த தகவல்களை 'பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா' வெளியிட்டு வருகிறது. dailythanthi.com

பிப்ரவரிக்குள் மோடியின் விசா ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - Obama அரசுக்கு நியூயார்க் கோர்ட் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை தொடர்ந்து அம்மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் விசாவை, மத சுதந்திர சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா ரத்து செய்தது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னர் அவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் மோடிக்கு புஷ் அரசு விசா மறுத்ததற்கும், ஒபாமா அரசு விசா வழங்கியதற்குமான காரணங்களைக் கேட்டு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இதுகுறித்த தகவல்களை தர மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தகவல்கள் வழங்கப்படாததால் சீக்கிய அமைப்பு கடந்த செப்டம்பரில் மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீயூயார்க் நீதிமன்றம், மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.nakkheeran.in

சிம்பு, அநிருத் ....தமிழ் சினிமாவின் மகா கேவலமான காவாலிகள்...தூஷனத்தையே பாட்டாக பாடிய கொடுமை

சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன்.  பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.   ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன்.  ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்.இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song.  சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான்.  சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பாடுகிறார்.  என்னப்  …டைக்கு லவ் பண்றோம், என்னப்  ….டைக்கு லவ் பண்றோம் என்று திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.  பாடலின் இடையேயும் …டை வருகிறது.  ”பு” என்ற எழுத்துக்கும் ”ன்” என்ற எழுத்துக்கும் பீப் ஒலி வந்தாலும் பீப் ஒலியையும் மீறி பூவும் இன்னும் டையும் காதில் விழுகின்றன.
என்னுடைய ஆட்சேபம் இந்த வார்த்தையைப் பிரயோகித்துப் பாடியதற்காக அல்ல.  இதை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  எல்லா வார்த்தைகளையும் போல அதுவும் ஒரு வார்த்தை.  அதையும் அவர்கள் பீப் சத்தம் போட்டு மறைத்து விட்டார்கள்.  கேட்டால் நாங்கள் சண்டையை அல்லவா சொன்னோம் என்பார்கள்.  ஆனால் அந்த இரண்டு இளைஞர்களின் காவாலித்தனம் என்னவென்றால், இவர்கள் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கும் தருணம்.  மக்கள் எல்லாம் தண்ணீரில் தங்கள் உடைமைகளையும் தங்களுக்குப் பிரியமான உறவுகளையும் பறி கொடுத்து விட்டு அழக் கூட முடியாமல் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள்.   charuonline.com

சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ?

தமிழக அரசைப் பொறுத்தவரை நீர்த்தேக்கங்களைத் திறப்பது குறித்து முடிவுகள் அந்தந்த நீர்தேக்கங்களின் செயற்பொறியாளர்களால் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, உயர்மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன 
 கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. >தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அணையை திறக்க அதிகாரிகள் பயந்தார்கள்..அம்மா வந்து அம்மா ஆணைப்படி... உலகின் முதலாவது WOMAN-MADE பேரழிவு இதுதான்...

Nava Mayam - New Delhi,இந்தியா :சென்னையின் ஜனத்தொகையே 49 லட்சம் தான்...இதில் 17 லட்சம் என்றால் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் வீடு இழந்துள்ளனர்.. இவர்கள் போக வசதியான வர்கள் வேறு ஒருவர் வீடுகளில் அல்லது சொந்த ஊர்களுக்கு திரும்பி தஞ்சம் அடைந்துள்ளனர்... கிட்ட தட்ட சென்னையின் பாதி ஜனத்தொகை பாதிக்க பட்டுள்ளது...இதற்க்கு முக்கிய காரணமே அம்மா அரசின் செயல் படாத நிர்வாகம் தான்....உலக சரித்திரத்தில் முதலாவது WOMAN-MADE பேரழிவு இதுதான்.......இதனால் பல நூறு உயிர்கள் பலி , சென்னை மக்களுக்கு சொந்த பொருள் நஷ்டம் 1,00,000 கோடி ரூபாய்கள் . 

Appan London,யுனைடெட் கிங்டம் இந்த இமாலய பேரிடர் அடிமைகள் ஆட்சியால் வந்தது. கோமணம் கட்டிய விவசாயிக்கும் தெரியும் ஏரிக்கு அதிகம் தண்ணி வந்தால் அதிகம் தண்ணி வெளி ஏற்ற வெண்டும் என்று...ஆனால் இந்த அடிமைகள் என்ன செய்தார்கள்..அதிகம் தண்ணி வந்தாலும் ஏரியை திறக்காமல் அம்மா சொல்லிற்காக கத்து இருந்தார்கள்...அம்மாவை அவர் கூப்பிடாமல் யாரும் பார்க்க முடியாது. . அம்மா கூப்பிடும் வரை காத்து இருந்தால் என்ன ஆகும்...ஏறி நிறைந்து உடைந்தால் சென்னையே அழிந்து போகும். இப்போ அது தான் நடந்தது...மேட்டூர் அணை திறந்தால் அம்மா ஆணை படி, பாவானி சாகர் அணைதிரந்தால் அம்மா ஆணை படி....இப்படி எல்லாம் அம்மா ஆணை படி செய்தார்கள்.

ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி? போலீசார் தீவிர விசாரணை

சென்னையில், 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும், டி.எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக பீதி கிளம்பியுள்ளது. எனினும், அதை நிர்வாகம் மறுத்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். >சென்னை நந்தம்பாக்கம், போரூர் - மவுன்ட் பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில், டி. எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. துப்புரவு ஊழியர்கள்அங்கு, 10 மாடிகள் கொண்ட ௧௦ கட்டடங்கள் உள்ளன. அவற்றில், 'சாம்சங்' உள்ளிட்ட, 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மென்பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு காவலாளிகள், துப்புரவு ஊழியர்கள் என, 65 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

பேரிடர் மேலாண்மை விதிகள் அமலானதா: கூடுதல் நிவாரணத்தில் சிக்கல்

சென்னை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் தமிழக அரசு, பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மத்திய அரசின் சிறப்பு பணிக்குழு வகுத்த விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாதது ஏன்?' என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளின் தன்மையை கருத்தில் கொண்டு,
சென்னையை, பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

மக்களை இணைக்கும் திட்டத்தை முடக்காதீங்க: 'பேஸ்புக்' வலியுறுத்தல்

புதுடில்லி:'மக்களை இணைக்க உதவும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டாம்' என, முன்னணி சமூக வலைதள நிறுவனமான, 'பேஸ்புக்' கூறியுள்ளது.
இந்தியாவில், குறிப்பிட்ட சில இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும், மொபைல் வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கும் வகையிலான முயற்சியை, 'பேஸ்புக்' நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து துவக்கியது. 'இலவச அடிப்படை' எனப்படும் இத்திட்டத்தால், இணைய சமநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, 'டிராய்' எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பின், ஆய்வறிக்கையை டிராய் தயாரித்துள்ளது.

அப்ரூவராக மாற ஹெட்லி முடிவு...மும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்:

மும்பை: தனக்கு மன்னிப்பு அளித்தால் மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாற தயார் என பயங்கரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
மும்பையில், 2008ல்,நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, நடத்திய தாக்குதலில், 160க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெ ட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார், அமெரிக்க கோர்ட் ஹெ ட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

டாப் நடிகர்களின் சாயத்தை கழற்றிய சென்னை வெள்ளம்

சென்னை: தமிழகத்தில் பெய்த பெருமழை, பல முன்னணி நடிகர்களின் வேஷங்களை கலைத்துவிட்டது. அதேநேரம், யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த பல சிறு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நெகிழ வைத்துவிட்டனர். பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். ஆனால் தமிழ் திரையுலகில் பெருமளவுக்கு சோபிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில்தான் மக்கள் இவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்தனர். எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றுபவர் பாலாஜி. சமீபகாலத்தில் சில படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
டாப் ஹீரோக்கள் தமிழ் சினிமா சமீபகாலத்தில் மறந்துவிட்ட காமெடி கலைஞன் மயில்சாமி. ஒரு காலத்தில் இளம் பெண்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர் நடிகர் மோகன். குண்டக்க மண்டக்கததான் பேசுவார், வேறு எதுவும் உருப்படியாக தெரியாது என்று மட்டுமே நினைத்திருந்த பார்த்தீபன் போன்ற நடிகர்கள் இன்று நிஜ உலகின் டாப் ஹீரோக்களாக ஜொலிக்கிறார்கள்.
மார்தட்டியவர்கள் மழை நேரத்தில் சென்னையில் இவர்கள் ஆற்றிய பணிகள் அத்தனை மகத்துவமானது.

A.C.முத்தையாவும் படகில் மிதந்தார்...மழைக்கு முன்பாக ஏசியாவது ஒசியாவது...

இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என்று நிரூபித்தது சென்னையின் மழை வெள்ளம்.  சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளம் புகுந்ததால், பங்களா வீட்டை காலி செய்துவிட்டு, மனைவியுடன் படகில் சென்று தப்பினார் ‘ஸ்பிக்’ நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா.;டிசம்பர் 1ம் தேதி, அடையாற்றில் வெள்ளம் அதிகரித்ததால்,  கோட்டூர்புரம் பாலத்துக்கு மேற்கு திசையில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினரையும், கிழக்குப்புறத்தில் உள்ள தொழிலதிபர் ஏ.சி.முத்தையா வீடு, கோவை லட்சுமி மில்ஸ் குழுமத்தின் விருந்தினர் மாளிகை, 'பர்ஸ்ட் லீசிங் நிறுவன மேலாண் இயக்குனர் பரூக் இரானி வீடு மற்றும் முன்னாள் கவர்னர் சி.சுப்ரமணியத்தின் வீடு மற்றும் போட் கிளப் பகுதியில் இருக்கும் அமெரிக்க துாதரக அதிகாரிகள் வீடு, தொழிலதிபர் என்.சீனிவாசன் மற்றும் சன் குழுமத்தின் கலாநிதி, தயாநிதி ஆகியோரின் வீடுகளும் வெள்ளத்தில் சிக்கியது.ஏ.சி.முத்தையாவின் வீடான, ’அடையார் வில்லா’வில் நீர் புகுந்ததால், அவரும், அவர் மனைவியும், படகில் ஏறி, தப்பிச்சென்றனர்.nakheeran,in 

எல்லாமே அவுக உத்தரவுப்படிதான் நடக்கணும். உத்தரவு வரும்னு காத்து கிடந்தாய்ங்க...முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும்

குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவங்களுக்கு 5ஆயிரம் ரூபாய்னு நிவாரணத் தொகையை ஜெ. அறிவிச்சிருப்பதை கவனிச்சிருப்பீங்க.
அதுபோக 10கிலோ இலவச அரிசி, வேட்டி, சேலை, மாடு இறந்தால் 30ஆயிரம், ஆடு-பன்றிக்கு 3ஆயிரம், கோழிக்கு 100 ரூபாய், 10 ஆயிரம், நிரந்தர வீடு 1, ஹெக்டேர் பயிருக்கு 13ஆயிரத்து 500 ரூபாய்னும் அறிவிச்சிருக்காரே!'' தலைவரே.. மீட்புப்பணிகளிலும் நிவாரண உதவிகளிலும் ஜெ. அரசின் இயந்திரம் முடங்கிப் போயிடிச்சின்னு கோட்டையில் உள்ள அதிகாரிகளே சொல்றாங்க. முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தாலும் எல்லாமே ஜெ. உத்தரவுப்படிதான் நடக்கணும். அந்த உத்தரவு எப்ப வரும்னு தெரியாது. அதனாலதான் வெள்ள மீட்பு பணிகளில் மற்ற கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் தன்னார்வலர்களும் முழுவீச்சா செயல்பட்டப்ப அரசாங்க இயந்திரம் முடங்கிக் கிடந்துச்சுன்னு அதிகாரிகள் சொல்றாங்க.'

வெள்ளத்திற்கு இதுவரை 347 பேர் பலி என அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. heavy rain death toll raised 347 இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

வியாழன், 10 டிசம்பர், 2015

கனரக மழை எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து செம்பரபாக்கத்தை நிரப்பி....பின் திறந்து விட்டு...Reservoir managers ignored warnings of heavy downpour..

 நவம்பர் 24 முதல் நவம்பர் 30 குறைந்த மழை பெய்தபோது அதற்கு உரிய அளவு நீர் திறந்து விடப்பட்டது, பின்பு அதிக அளவிலான மழை பெய்ய நேரிடும் என்று வானிலை அறிக்கை தெளிவாக குறிப்பிட்ட போதும் அதை கவனத்தில் கொள்ளாது , செம்பரப்பாக்கத்தில் ஏற்கனவே  அதிக அளவு தண்ணீரை (29,000 கன அடி) தேக்கி வைத்திருந்தனர், இதுதான் பின்பு செம்பரப்பாக்கம் அளவுக்கு அதிகமான தண்ணீரை கொண்டிருந்தது. அதை வெடித்து விடாமல் இருக்க சென்னை நகரை மூழ்கடிக்க வேறு வழி இல்லாமல் திறந்து விட்டனர். டிசம்பர் 1 ம் தேதி தேக்கத்தில் இருந்து .பின்பு  31,000 கன அடி தண்ணீர்... நீர் மேலாண்மை அதிகாரிகளின் செயலற்ற தன்மை தான் இந்த மொத்த அழிவுக்கும் காரணம் என்றால் மிகையாகாது. இதில் யார் குற்றவாளிகள்? பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான் செயலற்ற அரசு ? வெறும் பிரசாரங்களை நம்பி அம்மா துதி பாடும் கலாசாரம்
    The Hindu Chembarambakkam reservoir near Chennai on November 24, 2015. The Tamil Nadu government, it is learnt, is considering a move to reduce the set storage level in the reservoir. Photo: B. Jothi Ramalingam Official data from the Metro Water for the last 20 days suggest that the high precipitation and reservoir outflows on November 16 and December 1 respectively were primarily responsible for swelling the rivers.

சன்டிவிக்கு பேட்டி கொடுத்தால் அங்கேயே நிவாரணத்தையும் வாங்கிக்கோ......என்கிறார்கள்

சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
IMG_2891மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள் 

சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
சென்னை மாநகரத்தில் ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி நிறுவனங்களின் அணிவகுப்புகளுக்கு இடையே சோழிங்கநல்லூரை தாண்டி அமைந்திருக்கும் குடிசைமாற்றுவாரியப் பகுதி தான் செம்மஞ்சேரி. சிங்காரச் சென்னைக்கு பொருத்தமில்லாத குடிசை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி அவர்களை மாநகருக்கு வெளியே தூக்கி எறிந்து கட்டப்பட்டதுதன் இந்த குடியிருப்பு. சுமார் 7500-க்கு மேற்பட்ட தீப்பெட்டி போன்று தோற்றமளிக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த நவீன சேரி.

வங்காளதேசத்தில் facebook தடை நீக்கம். வாட்சாப் viber தடை தொடர்கிறது

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அங்கு பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களது தூக்கு தண்டனை காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதை தவிர்க்க அங்கு பேஸ்புக்கி்ற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த தடையை இன்று நீக்கியிருப்பதாக வங்காளதேச தொலைதொடர்புத்துறை மந்திரி தரானா ஹலீம் தெரிவித்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை. ஏற்கனவே, அங்கு 2012-2013-ம் ஆண்டுகளில் 260 நாட்கள் வரை யூடியூப் வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. dailythanthi.com

மக்களுக்கு மக்களே உதவி...? தன்னார்வ தொண்டே தலைதூக்க வைக்கும்

ஆயிரம் மூட்டைகளும் தயாராகிவிட்டன. ஒவ்வொரு மூட்டையிலும் அரிசி, பருப்பு, புளி, எண்ணெய்யில் ஆரம்பித்து சானிடரி நாப்கின், பற்பசை, ப்ரஷ் வரையிலும் இருபத்தேழு பொருட்கள் இருக்கின்றன.  ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாள் வரை வரும். நேற்றிரவு இந்த வேலை முடிந்திருக்கிறது. கடலூருக்கும் சென்னைக்கும் பொதுவான ஊராக அச்சிறுபாக்கத்தைத் தேர்ந்தெடுத்ததும் ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டதும் சரியாக அமைந்துவிட்டன. ஜெயராஜ் தன்னம்பிக்கை பயிற்சியாளர். லைப் ஷைன் பவுண்டேசன் என்கிற அமைப்பை நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். தனது அத்தனை வேலைகளையும் இந்தப் பணிக்காக ஒரு வாரம் ஒதுக்கி வைத்திருக்கிறார். அவர் மட்டுமில்லை- அவருடன் பணியாற்றும் எல்லோருமே ஏதேனும் வேலையில் இருப்பவர்கள். வழக்கறிஞர், ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், விற்பனைப் பிரதிநிதி என்று சகலரும் இணைந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இரவு பகலாக வேலை செய்திருக்கிறார்கள்.

நடிகை ஜியாவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை எடுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த நடிகர் சூரஜ்

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்து வந்த கருவை எடுத்து டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜின் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மும்பை ஜுஹுவில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரஜால் தான் கர்ப்பமானது பற்றியும், கருவை கலைத்தது பற்றியும், அவரால் தான் தற்கொலை செய்வதாகவும் ஜியா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தமிழக வெள்ளம்: கடுமையான இயற்கை பாதிப்புகள் என மத்திய அரசு அறிவிப்பு - ஜெயலலிதா தகவல்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கை பாதிப்புகள் ‘Calamity of Severe Nature' என மத்திய அரசு அறிவித்துள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. central government has announced chennai flood damaged is Calamity of Severe Nature தமிழக அரசு சார்பில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை அனுப்பி வைக்கவும் உடனடியாக நிதி உதவி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

புளோரிடாவில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளைக்காரனை கடித்து கொன்ற முதலை

அமெரிக்காவில் புளோரிடா அருகே உள்ள பால்ம்பே என்ற இடத்தை சேர்ந்தவர் மாத்திவ் ரிக்கன் (22). இவர், அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளை அடிப்பதற்கு முயற்சித்தார். இதற்காக அருகில் உள்ள தண்ணீர் குட்டை வழியாக கடந்து சென்று அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றார்.
ஆனால், அந்த குட்டையில் முதலைகள் வசித்து வந்தன. இதில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாத்திவ் ரிக்கனை கவ்வி பிடித்தது. அதன் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அவரை முதலை கடித்து கொன்றதுடன் உடலின் பெரும் பகுதியை தின்று விட்டது.
மீதி உடல்கள் குட்டையின் ஓரத்தில் கிடந்தன. அதை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது, அவர் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் வந்து முதலையிடம் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. maalaimalar.com

நடிகன் சல்மான் கான் விடுதலை..போதையில் காரை படுத்திருந்தவர் மீது ஒட்டி கொன்ற வழக்கு

மும்பை நடைபாதைவாசி ஒருவர் மீது தனது காரை தாறுமாறாக ஓட்டி கொன்றார் என்ற குற்றச்சாட்டில், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம், சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை , மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. விடுதலை -- சல்மான் கானுக்கு 2002ம் ஆண்டு நடந்த இந்த கார் விபத்தில் சல்மானுக்கு கடந்த மே மாதம் இந்த சிறைத் தண்டனை வழங்கி கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த சம்பவத்தில் தனது டொயோட்டா காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் ஏற்றியதில், ஒருவர்
கொல்லப்பட்டார், மேலும் நால்வர் காயமடைந்தனர்.
தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே, சல்மான் கான் ஜாமீனில் இருக்கிறார். சட்டம் தன் கடமையை  எப்படி  செய்திருக்கிறது ?  மக்கள் கைகொட்டி சிரிப்பார்களே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சினிமா பணக்காரனுக்கு வளைந்து கொடுத்து  நொறுங்கி போய் இருக்கிறது. 

ராகுல் : நேஷனல் ஹெரால்டு’ வழக்கு விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

புதுடெல்லி ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை வழக்கு விவகாரம், 100 சதவீதம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சியின் நிதியை பயன்படுத்தி விலை கொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அவர்கள் வரும் 19–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் எப்படித்தான் வந்தது? Chennai - A Watershed Moment

சென்னை: இன்னும் கூட அந்த படபடப்பு மாறாமல்தான் உள்ளனர் ஒவ்வொரு சென்னைவாசியும். அப்படி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது சென்னையையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம். இப்படிப்பட்ட வெள்ளத்திற்கு என்ன காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு ஏன் இப்படி ஒரு பேயாட்டம் போட்டது மழை என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதில் அலை மோதியபடி, மீண்டும் அப்படி ஒரு வெள்ளம் வருமா என்ற அச்சத்தில் தவித்துப் போய் உள்ளனர் சென்னை மக்கள். இந்த நிலையில் இந்த வீடியோ கண்ணில் பட்டது.. ஒவ்வொரு சென்னைவாசியும் பார்க்க வேண்டிய வீடியோ இது.. பாருங்கள்<//tamil.oneindia.com

அடுக்குமாடிகளில் குடியிருந்தவர்களும் படுமோசமாக பாதிக்கபட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தின் போது எந்த தொடர்பும் இல்லாமல், மீட்பு உதவியும் இன்றி, இருட்டுக்கு மத்தியில் அந்தரத்தில் இரண்டு நாட்கள் தவித்தோம்' என, பழைய மாமல்லபுரம் சாலையில், அதிக தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் கூறியுள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை, வெள்ளம், எந்த பிரிவு மக்களையும் விட்டு வைக்கவில்லை. ஏரிகள் உடைப்பு, அதிகபட்ச உபரி நீர் திறப்பு போன்றவற்றால், பெரும்பாலான கட்டடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சில கட்டடங்களில் மக்கள், மூன்றாம் தளத்தில் அல்லது மொட்டை மாடிகளில் தஞ்சம் புக நேரிட்டது. சிறிய கட்டடங்களின் பாதிப்பு இப்படி என்றால், ஆடம்பர வசதிகளுடன் அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டடங்களில் வீடு வாங்கியவர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.   சிங்கப்பூர் போல உயரமான கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது - போதிய தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.... இல்லை என்றால் நாறி விடும்...

சிரியா: வெளியேறும் கிளர்ச்சியாளர்கள்..ஹோம்ஸ் நகரை அரசிடம் கையளித்து

சிரியாவின் எதிரணிக் குழுக்களின் நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள், சவுதி தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் அஸ்ஸத்தின் அரசாங்கத்துடன், அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பது தான் இந்தப் பேச்சுக்களின் நோக்கம்.

புதன், 9 டிசம்பர், 2015

தாவூத் இப்ராஹிமின் மும்பை ஹோட்டல் ரூ. 4.28 கோடிக்கு ஏலம் !

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் இன்று ஏலம் விடப்பட்டன. அதில், தாவூத்தின் மும்பை நானக் அப்ரோஸ் ஹோட்டல் ரூ.4.28 கோடிக்கு ஏலம் போனது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குண்டு வெடிப்புக்கு முன்பே தாவூத் இப்ராகிம் வெளிநாடு தப்பி விட்டார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து வருகிறது. இந்தநிலையில் மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

வெள்ளத்தினால் தூங்காவனம், வேதாளம், உறுமீன், இஞ்சி இடுப்பழகி, உப்புகருவாடு வசூல் பாதிப்பு ....

சென்னையில் கடந்த வாரம் முழுக்க பெய்த மழை வெள்ள பாதிப்பில் தமிழ் திரையுலகம் திண்டாடிப் போனது. இந்த மழை வெள்ளத்தால் மொத்தம் ரூ 25 கோடிக்கு மேல் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை தொடர்ந்து பெய்ததது. அடையாறு, கூவம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு, வீடுகளுக்குள் வெள்ளம், உடமைகள் இழப்பு என்று மக்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள்.
தியேட்டர்களில் மழை வெள்ளம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன.
கூட்டமே இல்லை இதனால் புதிய படங்கள் ஓடாமல் வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் படங்கள் பெயருக்கு ஓடின. கூட்டமே இல்லை.

வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய ஸ்ரீதிவ்யா

தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். maalaimalar.com

தெற்கே 2 நாட்களுக்கு கன மழை

சென்னை: 'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்; சென்னையில், கன மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக் கடலில், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சத்தீவு மற்றும் குஜராத் கடற்பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.< புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக் கடலில், வட தமிழகம் மற்றும் இலங்கை அருகே, காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது.இதனால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை, 8:30 மணி நேர நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது.பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள், கடலோர மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களிலும், பிற மாவட்டங்களில், சில இடங்களிலும், மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!


1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?

2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?

3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?

4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?
luckylookonline.com; கடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது. நவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் :அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். >டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள் >அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்று ட்ரம்ப் நம்புகிறார். இதன் ஒரு பகுதியாக மசூதிகள் கண்காணிக்கப்படுவது அரசியல் ரீதியில் ஏற்கத்தக்கக் கருத்தல்ல என்பதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.

காப்பாற்றுங்கள்... கதறிய போன் குரல்! எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் இல்லத்தைச் சேர்ந்த 100-க்கும்

ம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீடும் இந்த மழையில் தப்பவில்லை. எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் இல்லத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழ்ந்தைகள் வெள்ளத்தில் தத்தளித்தனர். ஒரு வழியாக அவர்களைக் காப்பாற்றி தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர். எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், ‘திடீர்னு வெள்ளம் வீட்டுக்குள்ளே வந்துடுச்சு. என்ன பண்றதுன்னு புரியல. தாத்தா சேர்த்துவெச்ச பொருள்கள் எல்லாம்  அடிச்சுட்டு போயிடுச்சு. நாங்க உயிர் தப்பிச்சா போதும்ங்கற நிலைமை. மேயருக்கு போன் செய்தோம். பெரிசா ரெஸ்பான்ஸ் இல்லை. அப்புறமா ஃபயர் சர்வீஸ் வந்துதான் எங்களைக் காப்பாத்தி எதிர்ல இருக்குற ஃப்ளாட்ல கொண்டுபோய் சேர்த்தாங்க” என்று சொல்லி இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் இவர்!

பேரழிவு கண்ட்ரோல் நிலையமே இன்னும் அமைக்கவில்லை....பேரழிவு ஒருங்கிணைப்பு...அதிகாரிகள் அம்மாவுக்கு பயந்து பயந்து.. .....

மிஸ்டர் கழுகு: முதல்வர் எங்கே?
க்கள்படும் வேதனை கழுகார்  முகத்தில் தெரிந்தது!
‘‘யாரும் எதிர்பார்க்காத பேரழிவு இது என்றும், அரசாங்கமே முழுமையாகச் செயல்பட்டால்கூட நிவாரணப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாதுதான் என்று நானே கடந்த முறை சொல்லி இருந்தேன். ஆனால், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய சாதாரண வேலைகள்கூட ஒழுங்காக நடக்கவில்லை என்று அதிகார வட்டாரத்தின் செயல்பாடுகளை முழுமையாக உணர்ந்தவர்​ளே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.  ‘அரசாங்கத்தின் செயல்பாடு சுணங்கியே கிடக்கிறது’ என்று இவர்கள் சொல்கிறார்கள்!” என்ற கழுகாரை இடைமறிக்காமல் பேசவிட்டோம்.
‘‘வெளிமாநிலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தமிழ்நாட்டில் நடப்பதை கொந்தளிப்புடன் கொட்டுகிறார். ‘இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தால் முதலில் தலைமைச் செயலகத்தில் கன்ட்ரோல் ரூம் போட வேண்டும். மாவட்ட கலெக்டராக இருந்தாலும், எஸ்.பி-யாக இருந்தாலும் அதில் தகவல் சொல்லி முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படி ஒரு கன்ட்ரோல் ரூம் போடவில்லை. ரூ.100 கோடியோ, ரூ.200 கோடியோ குறிப்பிட்ட துறைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னை மூழ்கியவேளை 30,000 போலீசார் வீணாக முடக்கபட்டு...சும்மா இருந்தனர் ...டைம்ஸ் ஆப் இந்தியா

 இது தமிழக அரசு செய்த  மிகப் பெரிய தவறு .இந்த  அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு போலீஸ் அணிதிரட்ட நடைமுறை பின்பற்ற வில்லை .
தமிழகத்தின் 1.15 லட்சம் சக்திவாய்ந்த போலீஸ் படை கடந்த இரு வாரங்களில் பெரும்பாலும் சும்மா இருந்தது.
சென்னை 28,000-ஒற்றைப்படை போலீசார்  வழக்கமான சட்டம் ஒழுங்கு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் 'விஐபி கடமை', ஈடுபட்டனர் போது மழை பாதிக்கப்படாமல் மாவட்டங்களில் சார்ந்த மாநில பொலிஸ் படை ,சுமார்  65%, வீதமானோர் ஒரு ஓய்வு பெற்ற வெறும் பார்வையாளர்களாக வருகின்றன . இது போன்ற சூழல்களில் கையாளப்படுகிறது நடத்திய பொலிஸ் அதிகாரி அவுட் லுக் நிருபரிடம் கூறினார்.

கனமழை... நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வட மாவட்டங்களில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக, தென் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. schools colleages remain tomorrow holiday

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி: நிவாரண பொருட்களை கொள்ளையடிப்பவர்கள் மீது.....

வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வெள்ள நிவாரண பொருட்களை வழங்கவிடாமல் அபகரிப்பதையும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அரசியல் கட்சியினரையும் கட்டுப்படுத்தவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பணம் வேண்டாம் பொருட்களை தாருங்கள் நடிகர் கார்த்தி கோரிக்கை...

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று 4–வது நாளாக பல்வேறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற உணவு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது:– சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சாந்தனு, ரமணா, சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் ராகுல் காந்தி நிவாரண பொருட்களை...

வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான தளத்திற்கு வந்த அவரை காங்கிரசார் வரவேற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கைகுலுக்கி பேசிய ராகுல்காந்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
புதுவையில் சுற்றுப்பயணம் செய்து பார்வையிடுவதற்காக குண்டுதுளைக்காத கார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த காரில் ராகுல்காந்தி ஏறவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் காரில் ராகுல்காந்தி ஏறிக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் ஆகியோரும் உடன் சென்றனர்.

கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு....

Jpegசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இணையம் மற்றும் ஊடகங்களில் இவை குறித்த செய்திகள் ஏராளம் வந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் ஆறுதலும் கிடைப்பது சாத்தியமல்ல. அதை அரசு நினைத்தால் மட்டுமே ஒருங்கிணைத்து முழு ஆற்றலுடன் செய்ய முடியும். ஆனால் அரசு எந்திரமோ அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதற்கே ஆள் இல்லாமல் திணறுகிறது. மக்கள் தன்னார்வத்துடன் கொண்டு வரும் பொருட்களை அ.தி.மு.க ரவுடிக் கூட்டம் பறித்துக் கொள்கிறது. மறுப்பவரை சில இடங்களில் தாக்கியும் வருகிறது.
ஜெயலலிதா அரசை நேரடியாக கண்டிக்கத் துப்பற்ற ஊடகங்களோ இதை வெறும் மனிதாபிமான நடவடிக்கையாக மட்டும் சுருக்கி பரபரப்பை தக்க வைக்க முயல்கின்றன. இறுதியில் மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலம் தள்ளுகிறார்கள். வேறு சில ஓட்டுக் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெயர்பலகை அமைப்புகளோ தமது பெயர் வருவதை உறுதி செய்து கொண்டு பொருட்களை அளிக்கின்றன.

சென்னை மழைக்கு எல் நினோ மட்டுமா ? காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது..

இயற்கையின் விதிகளை புரிந்து கொள்ளுதல் அறிவியலின் சாரம். இந்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் மீதான மனித சமூகத்தின் ஆளுமை அதிகரிக்கிறது. நேர்மறையில் இது இயற்கைக்கும் அதன் நீட்சியான மனித சமூகத்திற்கும் வளர்ச்சி குறித்த வழிகளை திறக்கிறது. அந்த வளர்ச்சியே இன்றைய நவீன வாழ்க்கைக்கு அச்சாரம். இன்னொருபுறம் அந்த வளர்ச்சி ஒரு சேர மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் சமமாக பயன்படுவதில்லை. வர்க்கங்களாகவும், ஏழை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளாகவும் பிரிந்து விட்ட உலகில் இயற்கைக்கும் மனித சமூகத்திற்குமான முரண்பாடு வெறும் வளர்ச்சியையும் மட்டும் கொண்டு வருவதில்லை, அழிவையும் சேர்த்து கொண்டு வருகிறது.
சென்னை மழை வெள்ளத்திற்கு இந்தக் காரணங்கள் அனைத்தும் அடிப்படையாக இருக்கின்றன. தமிழக அரசின் அலட்சியம் தோற்றுவித்திருக்கும் பயம் மக்களிடையே இருப்பதால் கால நிலை மற்றும் மழை, வானிலை குறித்த பல்வேறு புரளிகளையும், வதந்திகளையும், அறிவியல் பூர்வமற்ற கணிப்புகளையும் நம்புகிறார்கள். வதந்திகளாகவும் பேசுகிறார்கள்.

அதிமுகவினரால் தாக்கப்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் ( வீடியோ)

சென்னை அண்ணாநகர் கிழக்குப்பகுதியில் தன்னார்வத்தொண்டர்கள் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு உணவு அளித்து வந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுக வட்டச்செயலாளர் கோ.தமிழ்ச்செல்வன், இவர்களுக்கெல்லாம் நாங்கள் தனியாக உணவு தயார் செய்கிறோம். நீங்கள் வந்து உணவு கொடுக்ககூடாது என்று தகராறில் ஈடுபட்டார். தன்னார்வத்தொண்டர்களை துரத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் முன்வந்து உதவி செய்தால் என்ன? நாங்கள் செய்யும் உதவியை மக்கள் பெற்றுக்கொள்கிறார்களே என்று தன்னார்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.nakkheeran,in

அன்புமணி : நிவாரணப் பொருள்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமை...

சென்னை: நிவாரணப் பொருள் கொள்ளைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் போதிய அளவு  நிவாரண உதவி வழங்கப்படவில்லை. இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் வழங்கும் நிவாரண உதவிப் பொருட்களை ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்துச் செல்வதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன.
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்படும் உதவிப் பொருட்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமைகள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கட்டாயப்படுத்தி ஒட்டப்படுகின்றன.
கிறித்தவ அமைப்பின் சார்பில் 3 லாரிகளில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை வேலூர் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றின்  ஊழியர்களால் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள உணவு, போர்வை மற்றும் மருந்துகளை  அ.தி.மு.க.வினர் பறித்து வைத்துக் கொண்டு அமைச்சர் வளர்மதி வந்த பிறகு, அவர் தான் உதவிப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால், பல மணிநேரமாகியும் அமைச்சர் வராத நிலையில் அந்த உதவிப் பொருட்களை தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு கோரி வழக்கு..நிவாரண பொருட்களை குண்டர்கள் பறித்து தாக்குவதால் உதவிக்கு வர பலரும் தயங்கம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு வருகிறது.
அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெமினி அருகேயுள்ள செவித்திறன் குறைவுற்றோர் பள்ளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக டிசம்பர் 3 ஆம் தேதி சென்றோம். அப்போது அங்கு வந்த குண்டர்கள் எங்களை தடுத்ததோடு, நிவாரணப் பொருள்களை தங்களிடம் வழங்கிட்டு செல்லுமாறு மிரட்டினர்.

நிவாரண பொருட்களை சூறையாடும் சமுக விரோத கும்பல்கள்...வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்களை மிரட்டி..

கடலுார்: கனமழையால் மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் நிவாரண உதவி என்ற பெயரில் தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த மாதம் 8ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் கடலுார் மாவட்ட மக்கள் தொழில் மற்றும் உடமைகளை இழந்து மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக கூலித் தொழிலாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் பல்வேறு நிவாரணப் பொருட்களுடன் கடலுார் மாவட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கெடிலம் வழியாக கடலுார் மாட்டத்திற்கு நுழைந்த உடன் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

பாஜக யஷ்வந்த் சின்ஹா : பாகிஸ்தான் உடன் திடீர் பேச்சுவார்த்தை ஏன்?

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் செல்ல உள்ள நிலையில், இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க., அரசின் நிலைப்பாடு என்ன என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் உடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதற்காக காரணம் என்ன என்பது குறித்து பா.ஜ.க., அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக  தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்த நிலையில், தாக்குதல்களுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று மத்திய அரசு கூறிவந்தது. இந்நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நடைபெற காரணம் என்ன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.” என்றார்.

ஜெயலலிதா : வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்: 10000 நிரந்தர வீடுகள்....எனது அரசு எனது ஆணைப்படி......

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் பெருமக்கள் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திங்கள், 7 டிசம்பர், 2015

உலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை

டிசம்பர் 1-ம் தேதியன்று பருவநிலை மாற்றத்தின் அத்தனை அம்சங்களும் ஒன்றிணைந்து சென்னையில் வரலாறு காணாத மழையை கொட்ட வைத்துள்ளது. இது ஒரு கெட்ட செய்தி என்றால், இந்த நிலை மேலும் நீடிக்கும், அதாவது மேலும் கனமழை பெய்யவே வாய்ப்பிருப்பது மோசமான செய்தியாகும். உலக வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டின் எல் நினோ விளைவு பற்றி தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமிருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் மிகச்சரியாகவே கணித்தது. எல் நினோ விளைவால் மேற்கு இந்திய கடல் நீர் வெப்பமடைதலும், கிழக்கு இந்திய கடல்நீர் குளிர்வடைவதும் நிகழ்ந்தது. இந்தியப் பெருங்கடல் இந்த ஆண்டு அளவுக்கதிகமாக வெப்பமடைந்ததால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் வெப்ப அளவு அதிகரித்து தெற்கு அந்தமான் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வந்துள்ளன, வருகின்றன என்று ஸ்கைமெட் கணித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி இத்தகைய வலுவான பருவநிலை அமைப்பினால் சுமார் 490மிமீ மழைநீரைச் சுமந்து மேகங்கள் படையெடுத்து சென்னையை வெள்ளக்காடாக்கியுள்ளது, இது எல் நினோ விளைவைக் காட்டிலும் அதிகமானது என்கிறது ஸ்கைமெட்.

சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் இலங்கை கடற்பகுதியில் மிதக்கின்றன.

திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை. திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை.
இலங்கை திருகோணமலை கடற்பரப்பில் சென்னையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மிதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலை கடற்பரப்பில் இரண்டு பெண் சடலம் உள்பட ஐந்து சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் திருகோணமலை காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது திருகோணமலை நிலாவெளி எனும் கடற்பகுதியில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு பின்னர் பிரதேசப் பரிசோதனைக்காக திருகோணமலை தலைமை மருத்துவமனையில் அனுப்பப்பட்டது.

ஸ்டிக்கர் ஓட்டும் போட்டியில் அதிமுகவுடன் போட்டியிடும் நடிகர் விஜய்....

மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவல நிலையையும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். முக்கியமாக ஆளும் அதிமுக கட்சியினர், தன்னார்வலர்களால் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களையும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டியே விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.>பல இடங்களில் அதிமுகவினர் முதல்வரின் படத்தை ஒட்டவேண்டும் என்று தகராறில் இறங்கியதும் நடந்திருக்கிறது.<விஜய் ரசிகர்களும் நிவாரணப் பொருள்களில் விஜய் படத்தை ஒட்டி விநியோகித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
 

சென்னை மழை – மக்கள் இயக்கம் சமுக ஊடகங்களின் தேவை ..சாருநிவேதா

இதுவரை சமூக வலைத்தளங்கள் மீதான என்னுடைய அவநம்பிக்கை அகன்று விட்டது.  சமூக வலைத்தளங்கள் மூலம்தான் இந்தப் பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் செய்திகளும் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.   ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  பொதுவாக எந்தக் காரியத்திலும் தலையிட்டுக் கொள்ளாத பிராமணர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் அண்டாவை வைத்து ஆயிரம் பேருக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனவர்கள் படகில் போய் மக்களை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள்.  அரசியல்வாதிகள் ஒளிந்து கொண்டு விட்டாலும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் மக்கள் சேவை செய்து வருகிறார்கள்.  பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.  போலீஸை எப்போதும் மக்கள் திட்டுவார்கள்.  ஆனால் இப்போது போலீஸ் ராப்பகலாக வீட்டுக்குப் போகாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  பேரிடர் வந்துவிட்ட நேரத்தில் மக்களே ஒரு இயக்கமாகத் திரண்டு ஒருவருகொருவர் உதவி செய்து கொண்டதை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  இதுவரை மக்கள் கூட்டமாகச் சேரும் போது 2000, 3000 என்று மனிதர்கள் கொல்லப்பட்டதுதான் இந்திய வரலாறு.  தில்லி திர்லோக்புரியையும் குஜராத்தையும் நம்மால் மறந்து விட முடியுமா?  ஆனால் சென்னையில் இந்தப் பிரளயத்தில் மற்ற மனிதனின் துயரத்தைத் தன்னுடைய துயரமாக உணர்ந்தான் மனிதன்.  ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் இந்த மக்கள் இயக்கத்தின் முன்வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  இவர்களைப் போன்றவர்கள்தான் அரசியலில் இருக்க வேண்டும்.  அரசியலுக்கு வர வேண்டும்.  வெள்ளத்தில் தத்தளிப்பவர்களைப் பார்த்து மாடமாளிகையில் இருந்து பரிகாசம் செய்து கொண்டிருக்கும் சிலருக்கு மத்தியில் இந்த இருவரின் பணி நம்முடைய வணக்கத்திற்குரியது.
ஆர்ஜே பாலாஜியின் ஒரு வேண்டுகோள் இந்த முகநூலில் இருக்கிறது.  பகிர்ந்து கொண்டால் நலம்.
www.facebook.com/rjbalajiofficial/videos/932766633472134/

வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை ஆளில்லா விமானம் உதவியால் மீட்டனர் ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு போலீசார் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உள்ளனர். அதன்மூலம் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் மீட்கப்பட்டனர். ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை வைத்தும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தனர்.
போலீஸ் நடவடிக்கை சென்னை நகரில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை, போலீஸ் படை, கடலோர காவல் படை மற்றும் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 10 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை நகர போலீஸ் சார்பில் 12 ஆயிரம் போலீசார் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

கடலூரில் 93 பேர் பலி....7 மாவட்டங்களின் வடிகால் கடலூர்

கடலுார்:பூகோளரீதியாக, கடலுார் மாவட்டம், மேற்கே உள்ள, ஏழு மாவட்டங்களின் வடிகாலாக அமைந்துள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும், மேற்கே அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்தால், கடலுார் வெள்ளக்காடாக மாறி விடுவது வழக்கம். >இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்ப்பதால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 228 ஏரிகளில், 199 ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகின்றன.நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால், அனைத்து நீர் நிலைகளில் இருந்தும், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 436 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும்மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது

ரூ.100 கோடி உணவுப்பொருட்கள் வீண்....விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள்

வானத்து சுனாமி'யாக விடாது கொட்டிய கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், வீணாகி விட்டன. மழை விடும் சமயம், கடைகளை திறந்த வியாபாரிகள், உள்ளே இருக்கும் வீணான உணவு பொருட்களை, விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள் கண்ணீர்:தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடுமையாக பெய்து வருகிறது. ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டன; இதனால், சென்னை நகரம், கடல் போல மாறியது. வெள்ளத்தில், ஏராளமான வணிக நிறுவன கட்டடங்களும் மூழ்கின. இரண்டு நாட்கள் மழை விட்டு, சற்று வெள்ளம் வடிந்த நிலையில், வணிகர்கள், கடைகளை திறந்தனர். கடைகளில் இருந்த, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தண்ணீரில் நனைந்து, வீணாகிவிட்டன. இதைப்பார்த்து கண்ணீர் வடித்த வணிகர்கள், வீணான பொருட்களை, சாலைகளில் கொட்டுகின்றனர்.தி.நகர், ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.,நகர் என, பல பகுதிகளிலும், சாலையோரங்களில், உணவுப்பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக்ததில் கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

அடுத்த 48 மணிக்கு அதிக மழை கணிப்பு..ஏரிகளில் நீர் வருவது குறைந்துள்ளது

இடைப்பட்ட ஞாயிறன்று மழை மற்றும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் முன்னறிவிப்பு சாதாரண வாழ்க்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரும்பி இருக்க வேண்டும் தோன்றினார் கூட தங்கள் கால் விரல் சென்னை, அதன் புறநகர் மற்றும் கடலோர மாவட்டங்களில் வைக்கப்படும்.ஒரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு படம் கீழ் ஒரு வெள்ளத்தால் சாலையோர சேர்ந்து அமர்ந்துள்ளனர். . சென்னை சென்ட்ரல் எழும்பூர் இருவரும் இருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான செயல்பாடுகளை, மற்றும் ரயில்
சேவைகள் அடையார் மற்றும் கூவம் ஆறுகள் நீர்வரத்து ஞாயிறு பிற்பகல் தடங்கள் மீட்க அதிகாரிகள் செயல்படுத்த குறைந்தபோது நாளை புதுப்பிக்க இருக்கிறார்கள் ஞாயிறு முழுவதும், சென்னை, அதன் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் weatherman அடுத்த 48 மணி அதிக மழை கணித்து மாவட்டங்களில் உள்ள, கனரக நேரங்களில் அவை இடைவிட்டு மழை, உள்ளன.

1 லட்சம் கோடி இழப்பு..சென்னையில் மழை வெள்ளம் ..

சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

சென்னை மற்றும் புறநகரில் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் ஒவ்வொரு ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 16–ந்தேதியன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 30–ந்தேதி 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர். 1–ந்தேதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வீடுகள் மூழ்கி பெருத்த சேதம் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளான வழுதலம்பேடு, குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர் மலை, அனகாபுத்தூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

சென்னையை விட்டு வெளியூர்வாசிகள் பலரும்.. உசுரோட ஊர் போய் சேர்ந்தா போதும்

சென்னை: நூறாண்டு காணாத கனமழை சென்னையின் இயல்பை மட்டும் தலைகீழாக புரட்டிப் போடவில்லை... வாழுகிற மக்களின் வாழ்க்கையை கவிழ்த்து போட்டுவிட்டது... இந்த பெரும் வெள்ளத்தில் பலியாடுகளாக உடைமைகளை இழந்து 'அகதிகளாக' அலைந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள்தான்.. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பெருமளவு படையெடுக்கத் தொடங்கியது என்பது கடந்த கால் நூற்றாண்டு காலத்தில்தான்... ஊருக்கு ஒருத்தர் இரண்டு பேர் சென்னையில் இருந்த காலமெல்லாம் மலையேறிப் போய் ஊரில் இருக்கிற அத்தனை பசங்களும் சென்னையில்தான்டா என்கிற நிலைமை உருவாகிவிட்டது...25 ஆண்டுகளுக்கு முன்னர் பல தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு சென்று வருவதே மலைப்பாக இருந்தது...

நிவாரணப் பொருட்களை பெற மாநகராட்சி தயார் இல்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை, பாதுகாப்பாக வைத்து வினியோகம் செய்ய, நேரு உள்விளையாட்டு அரங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.<இங்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆகியோர் ஒருங்கிணைப்பில், 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அண்டை மாநில அரசுகள் சார்பிலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் அனுப்பி வைக்கப்படுபவை மட்டுமே, நேரு உள்விளையாட்டு அரங்கில் பெறப்படுகின்றன. தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை, மாநகராட்சி பெற தயாராக இல்லை. அவ்வாறு வரும் பொருட்களை, தாங்களாகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும் என்றுஅதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் உதவி செய்ய முன்வந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதி எது, நிவாரணப் பொருட்களை யாரிடம் வழங்குவது என தெரியாமல், தவிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.

ஜனங்க மதிக்கமாட்டாய்ங்க...அதாய்ன் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுறோம்...அதிமுகவினர் சொல்றாய்ங்க

சென்னை:'எங்கிருந்தோ வரும் தனி நபர்கள், எங்கள் வார்டுக்கு வந்து, நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, மக்கள் எங்களை மதிப்பதில்லை. அதனால், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்று நாங்கள் வழங்குகிறோம்' என, மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
அனாதையாய் வீதிக்கு வந்துள்ள மக்களை பேணிக் காக்க வேண்டிய இவர்கள் இப்படி பேசியது, இவர்களின் கீழ்த்தர அரசியல் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க., நகர் மண்டல அலுவலகத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லுார் ராஜு ஆகியோர் தலைமையில், மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  அடடே இத்தாய்ன் மாட்டர்ன்னு  வெளிப்படையாகவே சொல்ல தொடங்கியாச்சா  நல்ல டெவலப்மெண்டு வெளங்கிடும் ... 

அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டுவதால் தாமதம்...பயனாளிகள் பொறுமை காக்க......


தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்த பொருள்களை உதவியாக அளிக்க முன் வந்தால், அவற்றின் மீது ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பல மணி நேரங்கள் தாமதம் செய்யப்படுகிறதாம்! ஏன், உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலே கூட, ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி அனுப்புவதற்காக தாமதம் செய்யப் பட்டதாக ஏடுகளிலேயே செய்தி வந்துள்ளது. 
இன்னும் கொடுமை ஒன்று கூறட்டுமா? : கலைஞர் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை : ’’தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில், தி.மு. கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். முதலமைச்சர் என்ற முறையில் நான் அறிவித்திருந்த சலுகைகளையெல்லாம் போதாது என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது என்ன நிலைமை தெரியுமா? தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி மிகச் சிறிய மாநிலம். அங்கேயும் பெருமழை பெய்து அதிக அளவுக்கு நாசம் நடந்துள்ளது. அங்கே எந்த அளவுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்றுள்ளன தெரியுமா? அந்த மாநில முதல் அமைச்சரே நேரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடந்தே சென்று, நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு, அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி யிருக்கிறார்.