ஞாயிறு, 6 டிசம்பர், 2015

அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டுவதால் தாமதம்...பயனாளிகள் பொறுமை காக்க......


தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்த பொருள்களை உதவியாக அளிக்க முன் வந்தால், அவற்றின் மீது ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பல மணி நேரங்கள் தாமதம் செய்யப்படுகிறதாம்! ஏன், உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலே கூட, ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி அனுப்புவதற்காக தாமதம் செய்யப் பட்டதாக ஏடுகளிலேயே செய்தி வந்துள்ளது. 
இன்னும் கொடுமை ஒன்று கூறட்டுமா? : கலைஞர் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை : ’’தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில், தி.மு. கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். முதலமைச்சர் என்ற முறையில் நான் அறிவித்திருந்த சலுகைகளையெல்லாம் போதாது என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது என்ன நிலைமை தெரியுமா? தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி மிகச் சிறிய மாநிலம். அங்கேயும் பெருமழை பெய்து அதிக அளவுக்கு நாசம் நடந்துள்ளது. அங்கே எந்த அளவுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்றுள்ளன தெரியுமா? அந்த மாநில முதல் அமைச்சரே நேரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடந்தே சென்று, நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு, அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி யிருக்கிறார்.



அது மாத்திரமல்ல; நேற்றையதினம் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து 200 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்க உள்ளேன். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா நான்காயிரம் ரூபாய் வெள்ள நிவாரணமாகத் தரப்படும். விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்திருக்கிறார். அந்த மாநில முதலமைச்சர் அவ்வாறு அறிவித்திருக்கும் போது, தமிழ்நாட்டிலே என்ன நிலை? அப்படிப்பட்ட அறிவிப்பு இதுவரை செய்யப் பட்டுள்ளதா? ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறிக் கொண்டு 45 நிமிடங்கள் நமது முதல் அமைச்சர் சுற்றி வந்திருக்கிறார். அதுவும், இந்தியப் பிரதமர் தமிழகம் வந்து ஹெலிகாப்டரில் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடப் போகிறார் என்று தெரிந்த பிறகு, நாம் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக ஜெய லலிதா சுற்றி வந்திருக்கிறார் என்றே பரவலாகப் பொதுமக்களிடம் பேசப்படுகிறது. பிரதமர் வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார் என்றால், முதல் அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நேரில் சென்றிருக்க வேண்டாமா? அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா? எத்தனை இலட்சம் மக்கள் ஆதரவற்ற நிலையில் உதவியின்றி நிராதரவாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்? அ

ந்தப் பகுதிகளுக்கு முதல் அமைச்சர் சென்றால் தானே, அமைச்சர்கள் ஓடி வருவார்கள்; அதிகாரிகளும் பயந்து கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள். இப்போது அவர்கள் எல்லாம் முதலமைச்சருக்கே அக்கறை இல்லை என்கிற போது, நமக்கென்ன என்று தானே இருப்பார்கள்! இன்னும் கொடுமை ஒன்று கூறட்டுமா? தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்த பொருள்களை உதவியாக அளிக்க முன் வந்தால், அவற்றின் மீது ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பல மணி நேரங்கள் தாமதம் செய்யப்படுகிறதாம்! ஏன், உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலே கூட, ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி அனுப்புவதற்காக தாமதம் செய்யப் பட்டதாக ஏடுகளிலேயே செய்தி வந்துள்ளது. மியாட் மருத்துவமனையிலே மின்சாரம் இல்லாத காரணத்தால், 18 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அரசு மின்சாரத்தைத் துண்டிக்கின்ற போது, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு விதி விலக்கு அளித்திருக்க வேண்டாமா? ஆனால் தற்போது மின்சாரம் துண்டிப்பு என்பதற்குப் பதிலாக ஆக்சிஜன் பற்றாக்குறை என்று கூறுகிறார்களாம்! அரசுத் துறை செயலாளர் இன்னும் ஒரு படி மேலே போய், கடந்த சில நாட்களாக பல்வேறு நோய்களினால் உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் பிணவறையில் இருந்தன என்று கூறித் தப்பிக்க முயலுகிறார். ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டதாக அரசு துறை செயலாளரே அறிக்கை விடுத்துள்ளார். மூன்று, நான்கு நாட்களுக்கு மின்சாரத்தைத் துண்டித்து விட்டால், பல மாடிக் கட்டிடங்களிலே ஐந்தாவது, ஆறாவது மாடிகளிலே குடியிருப்போர் """"லிப்ட்"" வேலை செய்யாமல் என்ன செய்திருப்பார்கள்? ஆனால் அந்தத் துறையின் அமைச்சர், 20 சதவிகித அளவுக்குத் தான் மின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் எத்தனை ஆயிரம் பேர் துடிக்கிறார்கள்? அரசாங்கம் அந்தக் குடி தண்ணீரையாவது ஆங்காங்கு விநியோகம் செய்திட ஏற்பாடு செய்திருக்கிறதா? இதுபோன்ற நேரங்களில் முதல் அமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆங்காங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லும் பகலும் இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டாமா? தொலைக் காட்சிகளில் எப்படிப் பட்ட துயரமான காட்சிகளை நாம் காணுகிறோம்? புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கப்பட்ட கல் வீடுகளுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் என்றும், குடிசை வீடுகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்றும், நெல்லுக்கு எக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்றும், வாழைக்கு 35 ஆயிரம் ரூபாய் என்றும், வெற்றிலைக்கு 50ஆயிரம் ரூபாய் என்றும், காய்கறி, பருத்தி, கரும்பு, மரவள்ளி, மலர்கள் ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்றும் நிவாரணம் தரப்படும் என்றும், உயிரிழந்த பசு, எருமைக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்களே, அவர்களால் செய்ய முடிந்த அறிவிப்பினை தமிழக அரசு இதற்குள் செய்திருக்க வேண்டாமா? தமிழக முதலமைச்சர் ஜெய லலிதாவும் அறிவிப்பு செய்துள்ளார்; என்ன தெரியுமா? அரசு பேருந்துகளில் நான்கு நாட்களுக்கு கட்டணம் கிடையாதாம்! எப்படிப்பட்ட அறிவிப்பு? அந்த அறிவிப்பு கூட நீதிமன்றம் செய்த பரிந்துரையின் அடிப்படையிலே தான் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்! பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி அவர்களே தன்னிச்சையாக அரக்கோணம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அப்படி வந்தவர் சென்னைக்கும் வந்த போது, முதல் அமைச்சரோ, அமைச்சர்களோ அவரை கெலிகாப்டர் நின்ற இடத்திலே சென்றுகூட வரவேற்கவில்லை. தலைமைச் செயலாளர் தான் வரவேற்றிருக்கிறார். அதன் பின்னர், பிரதமர் முதல்வரையும், ஆளுநரையும் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறைக்கு வந்த போது, ஆளுநரும், முதல்வரும் அந்த அறை வாயிலிலே நின்று பிரதமரை வரவேற்றிருக்கிறார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்தியாளர்களிடம் தவறான தகவல்களைத் தருகிறார்கள்! சென்னையிலிருந்து எந்தப் பேருந்தும் இயங்காத நிலையில் 65 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும், வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக கோயம்பேட்டிலிருந்து 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் கூறியிருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங் களும், தனிப்பட்டவர்களும் உதவி செய்கின்ற அளவுக்குக் கூட அரசினால் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட மக்களாலேயே கூறப் படுவதைத் தொலைக் காட்சிகளிலே காணலாம். முதலமைச்சரின் தொகுதியான ஆர்.கே. நகரில், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க மூன்று நாட்களுக்குப் பிறகு மூன்று அமைச்சர்கள் சென்ற போது, மக்களே அவர்களை மறித்து, மூன்று நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று கேட்ட போது பதிலளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். மற்றொரு இடத்தில், அமைச்சர்கள் காரிலிருந்தே இறங்காமல் இருந்த போது, ஆத்திர மடைந்த மக்கள், அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு அவர்களை கீழே இறக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரையே பொதுமக்களில் சிலர் கீழே பிடித்து தள்ளித் தாக்க முற்பட்ட போது அவர்கள் ஓட்டம் பிடித்திருக் கிறார்கள். 8 இலட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கப்படுகிறது. பல ஆண்டுகள் உழைப்பிலும், கடன் பெற்றும், சேமிப்பிலும் எப்படியோ கஷ்டப்பட்டு கட்டிய வீடுகள் எல்லாம் கண்ணுக்கெதிரே சேதமுற்றுக் கிடப்பதைத் தாங்க முடியாமல், அதை விட்டு வெளியேறுபவர்கள் - தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த மூத்தவர்களை, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்போரைத் துhக்கிக் கொண்டு, இடுப்பளவு நீரில் மூட்டை முடிச்சு களோடு செல்பவர்களையெல்லாம் காணும்போது, இவர்களை யெல்லாம் காப்பாற்றாத ஓர் அரசு அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவே இல்லையா என்ற கேள்விக்கு விடை கூற வேண்டுமேயானால், மனிதப் பேரவலம் என்ற தலைப்பில் தி இந்து தமிழ் நாளிதழில் சமஸ் எழுதிய கட்டுரையில், மக்கள் அனுபவித்து வரும் சித்ரவதைகளையும் அவர்கள் வடிக்கும் ரத்தக் கண்ணீரை யும் கண்ணெதிரே பார்த்து எழுதுகிறேன். முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை"" என்று அரசைப் பற்றி எழுதியிருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நான் அறிக்கை விடுத்தேன். அதற்கான காசோலையைப் பெறக் கூட தமிழக அரசினர் எவ்வளவு அலட்சியமாக இருந்தார்கள் என்பதை தமிழகம் நன்கறியும். இன்னும் சொல்லப் போனால், பீகார் மாநில முதலமைச்சர் ஐந்து கோடி ரூபாய் அந்த மாநிலத்தின் சார்பாக நிவாரண நிதியை வழங்குவதாகவும், ஒடிசா மாநிலத்தின் சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக இருந்தும், அதைப் பெற தமிழக அரசு இழுத்தடிப்பதாகத் தெரிவித்திருக் கிறார்கள். இதில் வேடிக்கை, தமிழகத்தில் தி.மு. கழகம் முதன் முதலாக வெள்ள நிவாரண நிதியை அறிவித்த போதே, முதலமைச்சர் தனியாரிடம் வெள்ள நிவாரணம் கோரி அறிக்கை விட வேண்டுமென்று தெரிவித்திருந்தேன். ஆனால் முதல் அமைச்சர் இதுநாள் வரை அப்படி எந்தக் கோரிக்கை அறிக்கை  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக