செவ்வாய், 8 டிசம்பர், 2015

புதுச்சேரியில் ராகுல் காந்தி நிவாரண பொருட்களை...

வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான தளத்திற்கு வந்த அவரை காங்கிரசார் வரவேற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கைகுலுக்கி பேசிய ராகுல்காந்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
புதுவையில் சுற்றுப்பயணம் செய்து பார்வையிடுவதற்காக குண்டுதுளைக்காத கார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த காரில் ராகுல்காந்தி ஏறவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் காரில் ராகுல்காந்தி ஏறிக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் ஆகியோரும் உடன் சென்றனர்.


நமச்சிவாயம் அப்பாபைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். அவர் படத்தை நமச்சிவாயம் தன் காரின் முன்புறம் வைத்திருந்தார். அதைப்பார்த்த ராகுல்காந்தி அவர் யார்? என விசாரித்தார். நமச்சிவாயமும் அப்பாபைத்தியம் சாமிகள் பற்றி ராகுல்காந்தியிடம் விளக்கிக்கூறினார். அதை ஆர்வத்துடன் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். பின்னர் கார் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக