வியாழன், 10 டிசம்பர், 2015

சிரியா: வெளியேறும் கிளர்ச்சியாளர்கள்..ஹோம்ஸ் நகரை அரசிடம் கையளித்து

சிரியாவின் எதிரணிக் குழுக்களின் நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள், சவுதி தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் அஸ்ஸத்தின் அரசாங்கத்துடன், அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பது தான் இந்தப் பேச்சுக்களின் நோக்கம்.
ஆனால், சிரியாவில் இப்போது செல்வாக்கு மிக்க குழுக்களில் ஒன்றான அஷர் அல் ஷாம், சிரியாவின் இராணுவ நிறுவனங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு, அஸ்ஸத் மீது வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றது. இதனிடையே, ஐநா ஆதரவுடன் நடந்துவந்த பேச்சுக்களின் பயனாக, சிரியாவின் ஹொம்ஸ் நகரம் மீண்டும் அரச படைகளிடம் கையளிக்கப்படுகின்றது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் துவங்கியுள்ளனர் bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக