செவ்வாய், 8 டிசம்பர், 2015

பாதுகாப்பு கோரி வழக்கு..நிவாரண பொருட்களை குண்டர்கள் பறித்து தாக்குவதால் உதவிக்கு வர பலரும் தயங்கம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு வருகிறது.
அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெமினி அருகேயுள்ள செவித்திறன் குறைவுற்றோர் பள்ளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக டிசம்பர் 3 ஆம் தேதி சென்றோம். அப்போது அங்கு வந்த குண்டர்கள் எங்களை தடுத்ததோடு, நிவாரணப் பொருள்களை தங்களிடம் வழங்கிட்டு செல்லுமாறு மிரட்டினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லா நிலையில், கைவசம் உள்ள நிவாரணப் பொருள்களை யாருக்கு வழங்குவது என தெரியாமல் உள்ளனர் தன்னார்வலர்கள்.
அரசு தரப்பில் வழிகாட்டுவதற்கும், உத்தரவிடுவதற்கும் யாருமே இல்லை. எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு சிறிய அளவிலான வெள்ள நிவாரணக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாஷ் வலியுறுத்திய நிலையில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்  நாளை விசாரிக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக