செவ்வாய், 8 டிசம்பர், 2015

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி: நிவாரண பொருட்களை கொள்ளையடிப்பவர்கள் மீது.....

வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வெள்ள நிவாரண பொருட்களை வழங்கவிடாமல் அபகரிப்பதையும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அரசியல் கட்சியினரையும் கட்டுப்படுத்தவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை அவசர வழக்காக நீதிபதி சுந்தரேஷ் இன்று விசாரித்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தலைமை வழக்கறிஞரோ அல்லது கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரோ வரும் 11ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக