வியாழன், 10 டிசம்பர், 2015

புளோரிடாவில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளைக்காரனை கடித்து கொன்ற முதலை

அமெரிக்காவில் புளோரிடா அருகே உள்ள பால்ம்பே என்ற இடத்தை சேர்ந்தவர் மாத்திவ் ரிக்கன் (22). இவர், அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளை அடிப்பதற்கு முயற்சித்தார். இதற்காக அருகில் உள்ள தண்ணீர் குட்டை வழியாக கடந்து சென்று அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றார்.
ஆனால், அந்த குட்டையில் முதலைகள் வசித்து வந்தன. இதில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாத்திவ் ரிக்கனை கவ்வி பிடித்தது. அதன் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அவரை முதலை கடித்து கொன்றதுடன் உடலின் பெரும் பகுதியை தின்று விட்டது.
மீதி உடல்கள் குட்டையின் ஓரத்தில் கிடந்தன. அதை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது, அவர் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் வந்து முதலையிடம் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக